இனிதினும் இனிது…
தமிழ் மொழியில் சிறந்த கதைகளை தொடர்ந்து ரசித்தும், ருசித்தும் வந்ததால் என்னுள் உதித்த கற்பனையில், அனுபவத்தில் கண்ட காட்சிகளையும் கருத்துகளையும் கொண்டு பிறந்த என் முதல் புதினம் தங்கள் பார்வைக்கு...
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்...
இனிதினும் இனிது…
1
காலை மணி 7. ஜனனி பெசன்ட் நகர் பீச் ஸ்டாப்பில் இறங்கினாள். சாலை ஓரத்தில் நின்றபடியே கடலைக் கண்டாள். ஆர்ப்பரிக்கும் அலைகள் மனதிற்கு உற்சாகத்தைத் தந்தன. ஜனனி முகத்தில் குதூகலத்துடன் கடலை ரசித்தாள். சட்டென அவள் முகம் சுருங்கியது. இன்னும் சூரியனைக் காணோமே? அப்பொழுது அவள் மனதுள் துள்ளல். மெலிதாக தன் இனிய குரலில் பாரதியின் பாடலைப் பாடினாள்.
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகியோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
ஆதவனை அழைக்கும் பூபாளத்தைப்பாடி முடித்தவுடன், அவள் அழைப்பிற்கிணங்க ஆதவன் மேகத்தை விலக்கி வெளியில் வந்தான். ஜனனிக்கு சந்தோஷம் கரைபுரண்டோடியது.
உற்சாகத்துடன் தன் தோழி ரோஸியின் வீட்டை நோக்கி நடந்தாள். காலையில் ஒவ்வொருவருக்கும் எந்தவகையான உணர்வு மனதுள் வருகிறதோ, அது எப்படியோ அன்று முழுவதும் தொடர்கிறது என்று நினைத்துக் கொண்டே ஜனனி ரோஸியின் பங்களா கேட்டைத் திறந்தாள். அவளைக் கண்டதும் நாய்க்குட்டி பப்பி ஓடிவந்து அன்பை வெளிப்படுத்தி வரவேற்றது. அவளும் அதை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தாள்.
’ஹாய் ஜனனி’ என்று கோரஸாக அழைத்தபடி, ஷட்டில் விளையாடி விட்டு வியர்வையுடன் ரோஸியும் வினோத்தும் வந்தார்கள். மூன்று பேருமே எல்.கே.ஜி.யிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். காலேஜ் சேரும்பொழுது ஜனனி சைக்காலஜியில் பி.எஸ்.ஸி, எம்.எஸ்.ஸி., பி.எச்.டி. என்று படித்தாள். ரோஸியும், வினோத்தும் எம்.பி.ஏ. வரை ஒன்றாகப் படித்தபோது நட்பு காதலாகி, பெரியவர்கள் சம்மதத்தோடு திருமணம் நடந்தது.
ஜனனியும் ’ஹாய்’ சொன்னாள். பின் ’ஹேப்பி பர்த்டே’ என்று சொல்லி ரோஸி கையில் பரிசைக் கொடுத்தாள். ரோஸி ’தேங்ஸ்’ சொல்லி வாங்கிக் கொண்டாள். பின்பு மூன்று பேரும் லானில் உட்கார்ந்து பேசினார்கள். வேலையாள் விஷ்ணு டீ கொண்டு வந்தார். மூன்று பேரும் டீ குடித்துக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்கள்.
ஜனனி, நீயே சொல்லு கம்பெனியை நான் கவனிச்சுக்கறேன். நீ வெளிநாடு போய் படிச்சுட்டு வா. நம்ம எதிர்காலத்துல நல்லாயிருக்கும்னு சொல்றேன். வினோத் கண்டுக்கவே மாட்டேங்கிறான்.
முகத்தில் முறுவலுடன் ஜனனி வினோத்தைப் பார்த்தாள்.
ஜனனி ரோஸி சொல்றது சரிதான். பட், அப்பா திடீர்னு போயிட்டார். அம்மா மனசளவுல உடைஞ்சு போயிட்டாங்க. அவங்களுக்கு என் பணத்தைவிட, பாசம்தான் இப்ப ரொம்ப தேவை. அதனால, இப்பல்லாம் வெளிநாடு போறது பத்தி நினைச்சுக்கூட பார்க்க முடியாது. ரோஸி அம்மாவைப் பார்த்துப்பா. ஆனா, என் அருகாமை அவசியம்னு நான் நினைக்கிறேன்.
ரோஸி கோபத்தோடு எழுந்து போனாள். ஜனனியும், வினோத்தும், ரோஸியின் கோபமும், குழந்தை குணமும் தெரிந்தவர்களாதலால் சிரித்துக் கொண்டார்கள். அப்பொழுது வினோத்தின் அம்மா தேவகி உள்ளேயிருந்து வந்தார்கள்.
வாம்மா ஜனனி, பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படி இருக்க?
நல்லாயிருக்கேன் ஆன்ட்டி, நீங்க?
உடம்பு, மனசு எல்லாம் நல்லாயிருக்குமா.
எளிமையான, அழகான பதிலில் வியந்தபடியே ஜனனி, வினோத் வெளிநாடு போறது பத்தி நீங்க என்ன ஆன்ட்டி நினைக்கிறீங்க?
இதுல, நான் என்னம்மா சொல்றது? கணவன், மனைவி என்ன முடிவு பண்றாங்களோ எனக்கு அது சம்மதம்தான்.
என்ன ஆன்ட்டி உங்களுக்குன்னு ஒரு கருத்து கிடையாதா?
அர்த்தமுள்ள முறுவலுடன், ஏம்மா, வேலையை விட முக்கியமானது வாழ்க்கை. அதையே அவங்க முடிவு பண்றாங்க. எங்ககிட்ட பர்மிஷன்கிற பேர்ல இன்ஃபார்ம் பண்றாங்க. அப்படியிருக்கப்ப இதுல நான் என்ன சொல்றது? ஒரு வயசுக்கப்புறம் கட்டின கணவனோ, பெத்த பிள்ளையோ எல்லார்கிட்டயுமே ஒரு டிடாச்டு அட்டாச்மெண்ட்டோட இருக்கறதுதான் எங்களுக்கும் நல்லது, உங்களுக்கும் வசதி. என்னம்மா அப்படி பார்க்கிற?
ஆண்ட்டி, உங்களுக்கு இந்தப் பக்குவம் எப்படி வந்தது? படிப்பாலா? அனுபவத்தாலா?
அனுபவம் தந்த படிப்பினையால்.
சூப்பர் ஆண்ட்டி. நான் கிளம்பறேன், தாத்தா, பாட்டி எனக்காக காத்திருப்பாங்க.
சரிம்மா.
ரோஸி, வினோத் பை.
ஏய், என்ன அவசரம்? ரோஸி கேட்டாள்.
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வரப்போறாங்களாம். சஸ்பென்ஸாம். தாத்தா சீக்கிரம் வரச்சொன்னார்.
ஓ.கே., பை.
வினோத் சொன்னான், ஜனனி ஒரு நிமிஷம், நான் உன்னை பஸ் ஸ்டாப்ல விடறேன்.
நோ, வினோத், இந்த இனிய காலைல, கடல் காற்றுல நடக்கிற சுகத்தை இழக்க நான் விரும்பல.
‘பை’ சொல்லிவிட்டு ஜனனி பஸ் ஸ்டாப்பிற்கு போனாள். பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது ஒரு வித்தியாசமான காட்சி அவளை ஈர்த்தது.
ப்ளாட்ஃபார்மில் ஓர் இளஞ்சோடி பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள். அப்படியே அவர்கள் ‘செஸ்’ விளையாடினார்கள். போர்டில் காயின்ஸுக்கு பதிலாக அரும்பு, மல்லிகை, அரளி, சாமந்தி என்று பூக்கள் ராஜா, ராணி, யானை, குதிரை என்று நின்றிருந்தன. அதைப் பார்க்க ஜனனிக்கு வேடிக்கையாக இருந்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது. விளையாட்டில் அந்தப் பெண் செல்லம், முகம் சுருங்கினால், அவள் கணவன் குமார் விட்டுக் கொடுப்பது புரிந்தது. இந்த எளிமையான இல்லறத்தில் அறிவு, அன்பிற்குள் அடக்கமாவதைப் பிரமிப்புடன் பார்த்தாள்.
ஜனனியின் பஸ் வந்தது. ஏறி ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தாள். தன்னையுமறியாமல் ரோஸியையும், செல்லத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். உடனே, அந்த சிந்தனையை அகற்றினாள். நாம் யார்? யாரையும் யாரோடும் ஒப்பிட?
ஜனனியின் பஸ் வந்தது. ஏறி ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தாள். தன்னையுமறியாமல் ரோஸியையும், செல்லத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். உடனே, அந்த சிந்தனையை அகற்றினாள். நாம் யார்? யாரையும் யாரோடும் ஒப்பிட?
தன் ஸ்டாப்பில் இறங்கி நடந்து வீட்டினுள் நுழைந்தாள்.
அப்பா...!
கடலில் இருந்து வந்த கதிரவன் போல், ஹாலில் உட்கார்ந்திருந்தவன் பளிச்சென இருந்தான். இவளைக் கண்டதும் பளீரென சிரித்தபடி, எழுந்து நின்று, ‘வெல்கம் ஜனனி’ என்றான்.
அப்பா...!
கடலில் இருந்து வந்த கதிரவன் போல், ஹாலில் உட்கார்ந்திருந்தவன் பளிச்சென இருந்தான். இவளைக் கண்டதும் பளீரென சிரித்தபடி, எழுந்து நின்று, ‘வெல்கம் ஜனனி’ என்றான்.
நீங்கள்... என்றபடி திணறினாள்.
‘நான்... பூமியிலிருந்து வந்த ஆகாயம்’ என்றான்.
சொன்ன விதம் சிரிப்பை வரவழைத்தது. கூடவே சந்தேகமும்.
‘பூமியிலிருந்து ஆகாயம் வரமுடியுமா?’ (தொடரும்...)
2
வந்திருக்கேனே! ஏன் கனவோன்னு தோனுதா? வேணும்னா டெஸ்ட் பண்ணிக்கோயேன் என்றபடி இயல்பாக கைகுலுக்கினான். அப்பொழுது அங்கு இருந்த தாத்தா ஹா.. ஹா... என்று வாய்விட்டுச் சிரித்தார். பின், ஜனனி, யாருன்னு தெரியலையாடா? சின்ன வயசுல பார்த்தது, உன் அப்பாவோட நண்பர் பூமிநாதன் அங்கிள், மதுரையில இருக்காரே, அவரோட பிள்ளை ஆகாஷ்.
ஓ... அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட விதத்தை ரசித்து கலகலவென சிரித்தா¢ள். உடனே, ஆகாஷ் குனிந்து தரையில் ஏதோ தேடினான்.
என்ன?
நீ அழகா சிரிச்சியா! முத்து, பவளம்னு ரத்தினங்கள் சிந்தியிருக்குமோன்னு தேடறேன்.
மீண்டும் சிரித்தபடியே ஜனனி, ஹேய் ஆகாஷ், நீ சின்ன வயசுல பேசவே மாட்ட. எப்பப் பார்த்தாலும் படிப்ப. இப்ப இவ்வளவு பேசற!
அதுவா ஜனனி, உங்கப்பாவுக்கு மாற்றல் ஆகி நீங்கள்லாம் சென்னை வந்துட்டீங்களா, அப்புறம் நான், என் ரூம்ல கண்ணாடிக்குப் பக்கத்துல உன் ஃபோட்டோவை வச்சிக்கிட்டு ஏகலைவன் மாதிரி, விடாம பேசிப் பேசி ப்ராக்டீஸ் பண்ணேன். குரு அளவுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு தேறிட்டேன். அவன் சீரியாஸாகப் பேசியதைக் கேட்டதும் ஆகாஷ் தன்னை சின்ன வயசுல ‘வாயாடி’ன்னு கூப்பிடுவான்னு நினைவுக்கு வந்தது.
ஹேய், உன்னை... என்றபடியே கை ஓங்கினாள் ஜனனி. ஆகாஷ் பணிவுடன் கைகட்டி, தலை குனிந்து குட்டு ஜனனி, குட்டு. உன் மோதிரக் கையாலே குட்டு என்றான். அவன் சிறுபிள்ளை போல் நி¢ன்றதைப் பார்த்து ஜனனி, தாத்தா, பாட்டி மூன்று பேரும் சிரித்தார்கள்.
சிரிப்பலை ஓய்ந்தவுடன் பாட்டி, சரி, சரி எல்லாரும் சாப்பிட வாங்க. இட்லியும், கொத்தமல்லி சட்னியும் ரெடி.
உடனே ஆகாஷ், ஆஹா... பாட்டி, சொல்லும்போதே சாப்பிடணும்போல இருக்கே... வெளிநாட்டுல நூடுல்ஸ், பீட்ஸான்னு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு என்றான்.
அவன் பிட்ஸ் பிலானியில் பி.டெக். படித்துவிட்டு பிறகு ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. முடித்து வெற்றிகரமாக தாய்நாடு திரும்பியிருக்கிறான். இப்பொழுது சென்னையிலே மிகப் பெரிய கம்பெனியில எக்ஸிகியூட்டிவ் மேனேஜர் போஸ்ட்டுக்கு இன்டெர்வியூக்காக வந்திருக்கிறான்.
இட்லி, சட்னியை ருசித்தபடியே ஆகாஷ், பாட்டி உங்க வலது கையை நீட்டுங்க என்றான். ஒன்றும் புரியாமல் பாட்டி நீட்டினாள்.
அடடா, இப்படி சுவையா சமைக்கும் பாட்டிக்கு குறைஞ்சது நாலு மோதிரமாவது வாங்கி போட்டிருக்கணுமே தாத்தா.... நீங்க ஒண்ணு கூட போடலையே!
‘படுவா’ என்று பாட்டி சிரித்தாள்.
தாத்தாவோ ஆகாஷிடம் குனிந்து ரகசியக் குரலில், ஆகாஷ், மோதிரத்தையெல்லாம் விட உசத்தியான பரிசுகளைக் கொடுத்திருக்கேன் உன் பாட்டியின் கைகளுக்கு என்றபடி கண் சிமிட்டினார்.
ஓஹோ... அப்படியா? என்று வெடிச்சிரிப்பு சிரித்தான் ஆகாஷ். நாற்பது ஆண்டுகளாக தாத்தாவுடன் வாழ்ந்த பாட்டிக்கு, தாத்தா என்ன சொல்லியிருப்பார் என்பதை யூகிக்க முடிந்தது. இந்த அறுபது வயதிலும் பாட்டியின் முகத்தில் வெட்கம். யாரையும் பார்க்க முடியாமல் சமையலறைக்குள் நுழைந்தாள்.
சாப்பிட்டு ஹாலுக்கு வந்த ஜனனியிடம் ஆகாஷ் கேட்டான். ஏன் ஜனனி, பாட்டி, தாத்தாவுக்கு அறுபது, அறுபத்தஞ்சு வயசு இருக்குமா?
எஸ். யூ ஆர் ரைட். பாட்டிக்கு அறுபது, தாத்தாவுக்கு அறுபத்தஞ்சு. ஆனால், இந்த வயசு அவங்க உடம்புக்கு. மனசுல அவங்க இன்னும் இளமைதான். என்ன அழகான நகைச்சுவை உணர்வு தெரியுமா ரெண்டு பேருக்கும்?
அங்கு வந்த தாத்தா சொன்னார். இந்தா ஆகாஷ் என் கார் சாவி. போயிட்டு வா, பெஸ்ட் ஆஃப் லக்.
கார் சாவியை வாங்கிக் கொண்டு, ‘‘நமக்கு இந்த லக்ல எல்லாம் நம்பிக்கை இல்ல தாத்தா, திறமைதான் முக்கியம்”.
ஆகாஷ் எங்கே இன்டர்வியூ? அட்வான்ஸ் கங்க்ராட்ஸ் என்றாள் ஜனனி.
அடையார் ஜனனி, தேங்ஸ் என்றான்.
உள்ளே சென்று சில நிமிடங்களில் ஃபார்மல் வேர் அணிந்து, ஷ¨ அணிந்து, ஃபைல்ஸுடன் மெஜ¢ஸ்டிக்காக நடந்தான்.
அசந்து போனாள் ஜனனி. ஓ! இவனுடைய இன்னொரு அவதாரமோ? ஆகாஷ் காரில் கிளம்பிவிட்டான். தாத்தா சொன்னார், அப்பா! என்ன கலகலப்பு! எல்லாரையும் எவ்வளவு சிரிக்க வச்சிட்டான் கொஞ்ச நேரத்துல! அதோட என்ன ஸ்மார்ட்! இவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.
ஆகாஷ் சென்றபிறகும் அவன் ஏற்படு¢த்திய உற்சாக அலை வீடு முழுவதும் பரவியிருந்தது. ஆகாஷ் பள்ளியில் படிக்கும்போதே படிப்பு, விளையாட்டு, பெயிண்டிங் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். அன்றைக்கும், இன்றைக்கும் ஒரே மாற்றம் அவனின் இந்தப் பேச்சுதான்.
ஒரு மணி நேரம் கழித்து பாட்டி கோவிலுக்குக் கிளம்பினாள். விசேஷ ஆராதனையாம்.
தாத்தா சொன்னார், இரு சிவகாமி நானும் வர்றேன்.
ஜனனி கேட்டாள், ‘‘எத்தனை வயசுலேர்ந்து பாட்டி நீங்களெல்லாம் இவ்வளவு பக்தி செலுத்த ஆரம்பிச்சீங்க?”
இதுக்கெல்லாம் என்ன வயசு வேண்டி கிடக்கு? விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து பக்தி உண்டு எங்களுக்கெல்லாம்.
‘பக்தி உடையார் காரியத்தில் பதறார்’ என்கிறார் பாரதியார். பதறாத காரியம் சிதறாது. கவனம் சிதறாமல் எந்த காரியத்தையும் சிரத்தையோடு செஞ்சா வெற்றிதான் தெரியுமா? - பாட்டியின் சிறு வியாக்கியானத்தைத் தொடர்ந்தார் தாத்தா.
‘ஜனனி, நீ படிச்சிருக்கியா? கணித மேதை ராமானுஜர் ஒவ்வொரு ஈக்வேஷனையும், இறைவனின் எண்ணங்களின் வெளிப்பாடாகக் காண்கிறேன்னு சொல்லியிருக்கார். கணக்குல ‘அனந்தம்’ அதாவது ‘இன்ஃபினட்’ என்ற கோட்பாட்டை அவர் ஆன்மிகச் சிந்தனையின் வெளிப்பாடாகவே உணர்ந்தார்.
சொல்லிவிட்டு தாத்தாவும், பாட்டியும் கோவிலுக்குக் கிளம்பினார்கள். ஜனனிக்கு பாட்டி, தாத்தா பற்றி பெருமிதமாக இருந்தது. அன்றைய நியூஸ் பேப்பரைப் படிச்சு முடிச்ச பொழுது டெலிஃபோன் அழைத்தது.
ஜனனி, ‘ஹலோ’ என்றாள்.
ஆகாஷ் ஜனனி!
சொல்லு ஆகாஷ். உற்சாகம் தானாகவே அவள் குரலில் வந்து உட்கார்ந்து கொண்டது.
ஹேய், மார்னிங் விஷ் பண்ணல்ல? இப்ப ‘அட்வான்ஸ்’ஐ டெலீட் பண்ணிட்டு விஷ் பண்ணு.
ஹேய்... ஹார்ட்டி கங்கிராட்ஸ் ஆகாஷ்.
தேங்க்யூ ஜனனி. தாத்தா, பாட்டி கிட்ட சொல்லிடு.
சரி, ட்ரீட் எப்ப?
டின்னர்க்கு வெளியில போகலாம்.
எனிதிங் ஸ்பெஷல் ஆகாஷ்?
எஸ், பட் நேர்ல சொல்றேன்.
ஏய், ஏய்... எதைப் பத்தின்னு சொல்லிடேன். சஸ்பென்ஸெல்லாம் தாங்காதுப்பா.
ஹ, ஹா... ஓ.கே. கம்பெனியோட எம்.டிதான் என்னை இன்டர்வியூ பண்ணார். ஹி ஈஸ் எக்ஸப்ஷனலி குட். அவர் பேர் சாரதி. ரியலாவே அவர் இந்தக் கம்பெனியின் சாரதி. என்னவோ தோணுது. என் லைஃப்க்கு கூட அவர் சாரதியா இருப்பார்னு.
போதும், போதும், போதும். விட்டா, ஒரு தீஸிஸே எழுதிடுவ போல?
ஹ, ஹ ஹா... மீதியை வீட்டுக்கு வந்து சொல்றேன்.
ஆகாஷே அசகாய சூரன். அவனே இவ்வளவு பாராட்டறான்னா, அவளையுமறியாமல் சாரதி மேல் மிகுந்த மரியாதை ஏற்பட்டது ஜனனியின் மனதில். (தொடரும்)
3
ஜனனி தன்னுடன்
படித்தவர்களுடன் சேர்ந்து நடத்தும் "மூத்தவர்கள் சாதனை இல்லம்" நோக்கி நடந்தே சென்றாள். செக்யூரிட்டி மரியாதையுடன் வணக்கம் சொன்னான். ஜனனி புன்னகையுடன் கைகளைக் கூப்பிக்கொண்டே கேட்டாள்,
என்ன மணி, அம்மா நல்லாயிருக்காங்களா?
இருக்காங்க மேடம், கிராமத்துல டாக்டர் வசதி பத்தல. இங்கே கூட்டிட்டு வந்துட்டேன்.
குட். அதுவும் சரிதான். வயசானவங்க, உன் கூட இரு¢ந்த மாதிரியும் இருக்கும் என்றபடியே உள்ளே போனாள். அலுவலக அறைக்குப் போய் கண் மூடி இறைவனைத் தியானித்து பின் தன் வேலைகளைத் தொடங்கினாள். மெயில்ஸ் படித்து, பதில் அனுப்பி, முக்கியமானவர்களுடன் தொலைபேசியில் பேசி, ஃபைல்ஸ் பார்த்து முடித்தாள். மணி 1. போய் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு வந்தாள். எதிரில் பார்த்த பல தாத்தா, பாட்டிகளிடம் ஓரிரு வார்த்தைகளில் நலம் விசாரித்தாள். பின் குழந்தைகள் பகுதிக்குப் போனாள். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு விதமாக தன் ஆசையையும், ஆற்றலையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் தூரத்தில் இருந்தே அவர்களைக் கவனித்துவிட்டு, ஆத்ம திருப்தியுடன் தன் அறைக்குத் திரும்பினாள். மீண்டும் தன் வேலைகளில் மூழ்கியதால் நேரம் போனதே தெரியவில்லை. மணி 4 அடித்தது. அதைத் தொடர்ந்து தொலைபேசி அழைத்தது.
ஹலோ ஜனனி ஹியர்
தாத்தா பேசறேன் மா
சொல்லுங்க தாத்தா
ஆகாஷ் வந்தாச்சு. உங்க சாதனை இல்லத்தைப் பத்தி சொன்னதும் அதைப் பார்க்கணுங்கறான். வரலாமா?
இப்ப வேணாம் தாத்தா. நாளைக்கு என்னோட வரலாம்னு சொல்லிடுங்க. நான் இன்னும் கால் மணி நேரத்துல அங்க வந்துடறேன். ரிஸீவரை வைத்துவிட்டு, தன் அறையைப் பூட்டிவிட்டுக் கிளம்பினாள்.
தங்கள் வசதிக்கேற்ப கார், பைக், சைக்கிளில் வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மாலை டிஃபனுடன் நின்றார்கள். இவளைப் பார்த்தவுடன் ஒரு சிநேகிதப் புன்னகையுடன் ‘குட் ஈவினிங்’ சொன்னார்கள். இவளும் நட்புணர்வுடன் வணக்கம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டை நெருங்கும்போது மனதில் மகிழ்ச்சி, ஏன்? காரணம் தெரிந்தாலும், அதைப் பற்றி மேலும் யோசிக்காமல் வீட்டினுள் நுழைந்தாள்.
வீட்டை நெருங்கும்போது மனதில் மகிழ்ச்சி, ஏன்? காரணம் தெரிந்தாலும், அதைப் பற்றி மேலும் யோசிக்காமல் வீட்டினுள் நுழைந்தாள்.
ஆகாஷ், பாட்டி செய்த கேசரியையும், போண்டாவையும் ரசித்து¢ சாப்பிட்டுக் கொண்டே தாத்தாவின் பேச்சை மிகக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
ஆகாஷ், உனக்கு தெரியுமா? இந்த உலகம் முழுதுமாக ஒரு மூலப்பொருள் இருக்கு. அதனோட சக்தி புவியீர்ப்பு சக்தியை விட உயர்ந்தது. அதைத்தான் நாம நல்லெண்ணம்ங்கிறோம். அதை அன்புன்னும் சொல்லலாம். அது அப்படியே கொஞ்சம், கொஞ்சமா விரிவடையும்போதுதான் இவ்வளவு நேரம் உன்கிட்ட சொன்னேனே புத்தர் சொன்ன எட்டு ஸ்டெப்ஸ் வருது. இதை ஒழுங்கா ஃபாலோ பண்ணா நீ வெற்றியத் தேடிப் போக வேணாம். வெற்றி உன்னைத் தேடி வரும்.
‘ஓ’ என்றபடியே ஜனனிக்கு ‘ஹாய்’ சொல்லிவிட்டு கைகழுவ பின் வராண்டாவிற்கு சென்றான். கை, கால், முகம் கழுவ ஜனனியும் அவனைத் தொடர்ந்தாள். டக்கென்று திரும்பிய ஆகாஷ்,
தாத்தா..., புத்தர் சொன்ன ஸ்டெப்ஸை நினைச்சாலே போதும் போல, வெற்றி என்னை தொடர்ந்து வருது… என்றான். ஜனனி அவனைத் தொடர்வதைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறான் என்று உடனே புரிந்து கொண்ட தாத்தா ஹ...ஹா.... என்று பலமாக சிரித்தார்.
தாத்தா..., புத்தர் சொன்ன ஸ்டெப்ஸை நினைச்சாலே போதும் போல, வெற்றி என்னை தொடர்ந்து வருது… என்றான். ஜனனி அவனைத் தொடர்வதைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறான் என்று உடனே புரிந்து கொண்ட தாத்தா ஹ...ஹா.... என்று பலமாக சிரித்தார்.
ஜனனி நினைத்தாள். ‘‘ஆகாஷ் நான் உன் வெற்றியான்னு தெரியல. ஆனால், உன் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாடியும் நான் ஒரு கேடலிஸ்டா இருக்கணும்னு தோணுது.”
ஹேய், என்ன நினைக்கிற? அப்படியே சொல்லிடு.
இவளும் தான் நினைத்ததை அப்படியே கூறிவிட்டாள். பின் தன் தவறு புரிந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.
ஆகாஷ், கண்களில் குறும்பு மின்ன, இவ்வளவு இனிய வார்த்தைகளை உதிர்த்த உன் வாய்க்கு என்ன தரலாம் என்றபடியே தலை சாய்த்துப் பார்த்தான். இதோ என்றபடியே அவளருகே வந்தான்.
ஹேய்... என்றபடியே தன்னையுமறியாமல் சத்தம் போட்டு கண்களை மூடினாள்.
ஒரு சில நொடிகள்... கண்களைத் திறந்தாள். ஆகாஷ் கண்களில் மின்னலுடனும், முகத்தில் ஒளியுடனும் கையில் ஒரு மில்கி பாரை உயர்த்தி அவளுக்கு கொடுப்பது போல் காட்டிக் கொண்டிருந்தான்.
என்ன ஆச்சு ஜனனி?
ஜனனி என்னவென்று சொல்வாள்? ம்... நத்திங், தேங்ஸ் என்றபடியே சாக்லெட்டை வாங்கிக் கொண்டாள். மனதிற்குள் ஒருவித படபடப்பு இன்னும் நிற்கவில்லை.
அதை உணர்ந்த ஆகாஷ், ஜனனி, கூல், வா ஹாலுக்குப் போகலாம் என்றபடியே முன்னால் சென்று விட்டான்.
ஜனனியின் மனதில் புதுவித உணர்வுகள். நான் ஏன் கவரப்படுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. என்னையுமறியால் என் கண்களில் ஒரு மின்னலும், துள்ளலும். என்னுள் ஏதோ ஒன்று பாய்கிறது. அதில் நான் என்னை மறந்து போகிறேன். யோசித்தபடியே ஹாலுக்கு வந்தாள்.
ஜனனி, சில சமயங்கள்ல நம்மோட படிப்புதான் நமக்கு பெரிய தடை.
எப்படி சொல்ற?
இப்போ உன் பெரிய மூளைக்குள் ஒரு சிந்தனைப் போராட்டம் ஓடுதுல்ல?
ஜனனி ஆச்சரியத்துடன் நோக்கினாள். இதுவே படிக்காத ஒரு கிராமத்துப் பொண்ணா இருந்தா ஈஸியா தன் உணர்வு இதுதான்னு இனம் கண்டுபிடிச்சிருப்பா. நிறைய படிக்காததால நிறைய யோசிச்சு குழம்ப மாட்டாள்.
ஆம். இவன் சொல்வது சரிதான். ஆனால், பேச்சு இந்த திசையில் போவது அவளுக்கு சங்கடத்தைத் தருகிறது. எப்படி டாப்பிக்கை மாற்றுவது? யோசித்தாள். (தொடரும்)
4
ஹேய் ஜனனி, நான் சாதனை இல்லத்துக்கு வர்றேன்னல்ல? ஏன் வேண்டாம்ன?
அப்பாடா, அவனே டாப்பிக்கை மாற்றி விட்டான் என்ற உணர்வுடன் அவனிடம் சொன்னாள். அங்க வர்றதுக்கு முன்னால, நீ அதைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படறேன்.
சரி சொல்லு, இந்த இல்லத்தின் நோக்கம் என்ன? அங்க உன்னோட ரோல் என்ன?
ஆகாஷ், நானும் என்னோட எம்.எஸ்.ஸி சைக்காலஜி படித்த 7 நண்பர்களும் சேர்ந்து (4 பெண்கள், 4 ஆண்கள்) ஏதேனும் புதுசா ஆரம்பிக்கணும்னு யோசிச்சோம். அப்பதான் இந்+த ஐடியா க்ளிக் ஆச்சு. எத்தனையோ பேர் அவங்களுக்கு ஆர்வமே இல்லாத துறையில வேலை பார்த்து, ரிடையரே ஆகியிருப்பாங்க. ஆனால், அவங்களுக்குள்ள ஓர் ஆதங்கம் இருக்கும், தன் திறமையை வெளிப்படுத்த முடியலையேன்னு.
60 சதவிகிதம் பேர் அப்படியிருப்பாங்களே?
எக்ஸாக்ட்லி, நாங்க எங்க இல்லத்துல அவங்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கறோம். இவங்க காலைல 9 மணியிலேர்ந்து மாலை 4 மணி வரை தங்களோட திறமைகளை யூஸ் பண்ணுவாங்க. அப்புறம் 7 மணி வரைக்கும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளோட டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க.
ஓ, அது வேறவா? அவங்களை எப்படி பா¢த்துக்கறீங்க?
ட்ரெயிண்டு டீச்சர்ஸ்¢ மூலமாதான். ஆனால் மாலை நேரங்கள்ல வயசானவங்க தங்களோட அனுபவத்தாலும், அன்பாலும் இந்தக் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்றாங்க. நிறைய பாட்டு பாடி, விளையாட்டுக்கள் விளையாடறதன் மூலமாவும் ஒரு நல்ல அந்யோன்யம் வளருது. குழந்தைங்க கிட்ட நல்ல முன்னேற்றம் தெரியுது.
வயசானவங்க எப்படி ஃபீல் பண்றாங்க?
ம்... ம்... சந்தோஷமா.
‘‘தன்னையறிந்து இன்புற - வெண்ணிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே’’
என்று வள்ளலார் பாடுவார் தெரியுமா? அது மாதிரி இந்த ஓய்வு பெற்ற மூத்தவர்கள் தங்களுக்கு பிடிச்ச துறைகள்ல கிடைச்ச வாய்ப்பை ரொம்ப உற்சாகமா பயன்படுத்திக்கிறாங்க. சந்தோஷமா செய்ற எந்த வேலையும் வெற்றிதான்.
வாவ்! உங்களுக்கெல்லாம் எப்படி ஜனனி இந்த ஐடியா தோணுச்சு?
ஆகாஷ் நம் தத்துவங்கள் எல்லா¢த்திலயும் பாரேன். ரூட், ஃப்ரூட் ரெண்டும் என்னன்னு பார்த்தோம்னா ‘உன்னையறி’. அப்படீன்னா நாம நமக்குள்ள இருக்கும் சக்தியை உணரணும். உணவு, உடை, இருப்பிடம், உறவுங்கிற உலகியல் சந்தோஷங்களைத் தாண்டி நமக்குள்ள என்ன இருக்கு? நம் உள்ளுணர்வு நம்மை எதை நோக்கி செலுத்துது? இதையெல்லாம் ரியலைஸ் பண்ணணும். அதை சரியா உணர்ந்து, தன்னை ஈடுபடுத்திக்கிறவங்களுக்கு மாபெரும் வெற்றிதான். ஆனால், நிறைய பேரை காலமும், சூழ்நிலையும் வேறு துறைக்கு தள்ளி விட்டுடுது. அவங்களும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துல கிடைக்கிற வேலையில செட்டில் ஆயிடறாங்க. தங்களை தாங்களே காம்ரமைஸ் பண்ணிக்கிறாங்க.
அதெப்படி ஜனனி பழநி போகணும் நமக்கு. பஸ்ல இடம் இல்ல. வெயிட் பண்ணி பழநி பஸ்லதான் போவோம். அதுக்கு பதிலா திருப்பதி பஸ்ல இடம் இருந்தா அதுல ஏறிடுவோமா? சின்ன பயணத்துலயே கவனமா இருக்கோம். வேலைங்கிறது ஒரு நீண்ட பயணம். எப்படி காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறது?
ஜனனி, ஒரு புன்னகையுடன் தொடர்ந்தாள். இதெல்லாம் அப்பர் க்ளாஸ் மக்களுக்கு ஓ.கே. ஆனால், மிடில் க்ளாஸுக்கெல்லாம் அப்ளை ஆகாது. ஏன்னா, வேலையும், பணமும் அவங்களுக்கு ஆர்வத்தையும், சாதனையையும் விட முக்கியமானது. அவங்களால ரிஸ்க் எடுக்க முடியாது.
ஓ! ஆனால், இந்த மனப்பான்மை சரியா?
எனக்குத் தெரியாது. எங்களுக்கு காரணத்தை விட, காரியம் முக்கியமா பட்டது. அதனாலதான், இந்த இல்லம். ஆனால், இங்க சில பேர் வி.ஆர்.எஸ். வாங்கிட்டு வந்து கூட சேர்ந்திருக்காங்க. இதுவரை நல்லா போயிட்டு இருக்கு. எதிர்காலத்துல இன்னும் நல்லாயிருக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கு.
வெரி குட், ஆனால், வெற்றியை எப்படி உறுதியா நம்பற?
ஆகாஷ், நாம சந்திக்கிற மனிதர்களை சற்றுக் கூர்ந்து கவனிச்சோம்னா, நிறைய நேரங்கள்ல அவங்களோட வார்த்தை ஜாலமும், அவங்க காட்டும் அதீத பணிவும் அவங்களோட நடிப்பை வெளிப்படுத்தி விடும். ஆனால், அதைத் தாண்டி அவங்களோட உள்ளுணர்வைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணோம்னா அதையும் நம்மால புரிஞ்சுக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அன்புங்கற உள்ளுணர்வு இருக்கும். அது உண்மையா இருக்கறப்போ, தூய்மையானதாகவும் இருக்கு. உண்மையும், தூய்மையும் எங்க இருந்தாலும் அதன் வலிமை அதிகமாகும். அவங்களோட அன்பின் வலிமை சுத்தியிருக்கிறவங்கிட்ட ஒருவித பாஸிடிவ் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவங்கதான் விவேகானந்தர், காந்தி, தெரஸாவெல்லாம். அப்படிப்பட்ட மகான்களோட உள்ளுணர்வில் நாம ஈடுபாடு கொண்டிருந்தோம்னா, அது நம்முள்ளும் ஊடுருவும். அந்த அன்பும், வலிமையும் நமக்கு வெற்றியை மட்டுமே தரும். நாங்க எட்டு பேருமே அந்த வட்டத்துக்குள்ளே இருக்கோம்னு உணர்றோம். அதனால, வெற்றிதான்.
ஆகாஷ் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜனனி சிரித்துக்கொண்டே ‘‘ஹலோ, ஆகாஷ், இந்த உலகத்துக்கு வா” என்று அவன் முன் கை தட்டினாள்.
”உயர்ந்த செயல் ஜனனி” என்று முணுமுணுத்தான்.
தேங்க்ஸ் ஆகாஷ் நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ.
ஷ்யூர் என்றபடியே அறைக்குப் போனான். போகும்போது அவன் ஜனனியை திரும்பிப் பார்த்தான். பார்க்கும்பொழுது அவன் கண்களில் கனிவும், பொலிவும் தெரிந்தன. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட விஷயத்தை அவர்கள் கண்கள் பரிமாறிக் கொண்டன. அதே நேரத்தில் ரேடியோவில்
‘கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டியிழுத்தாய்...’
என்று சமயத்திற்குத் தகுந்த பாடல் கேட்கவுமே, இருவருமே வாய்விட்டு சிரித்துவிட்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.
தன் அறைக்குச் சென்ற ஆகாஷ் குளித்து கேஷ§வல் வேர் அணிந்துகொண்டு, மியூசிக் சிஸ்டமை ஆன் பண்ணிவிட்டு ரிலேக்ஸ்டாக கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்தான். அருகில் டீப்பாயில் இருந்த பாரதியார் கவிதைகளைப் புரட்டினான். கண்ணில் பட்ட வரி,
‘‘ஞான ஒளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்” அதெப்படி மனது எதை நினைக்கிறதோ அதற்கேற்ப ஒரு வரி கண்ணில் படுகிறது!
ஜனனி, உன்னால் நான் ஏன் ஈர்க்கப்படுகிறேன்? நீ ஒரு பெண் என்பதாலா? நிச்சயமாக இல்லை. இது வெறும் இன்ஃபேச்சுவேஷன் இல்லை. நீ அழகு என்பதாலா? நோ, உன்னைவிட அழகான பெண்கள் நிறைய பேரைச் சந்தித்திருக்கிறேன். உன் கண்கள் நிலவொளியை விட குளுமையைத் தருகின்றனவே. உன் பார்வையில் என்னுள் ஏதோ ஒன்றைத் தொலைப்பது போல் உணர்கிறேனே. நீ வாய் திறந்து பாடாமலேயே என்னை ஆட வைக்கிறாயே. அழகைக் கடந்து, அறிவைத் தாண்டி ஏதோ ஒன்று என்னை முழுவதுமாக ஆக்ரமிக்கிறது. இன்னது என்று புரியாமலேயே நான் அதில் கரைந்து போகிறேன். இது ஒரு மகிழ்ச்சி¢ தரும் மயக்கம். ஒரு தெய்வீக அனுபவமாகவே தோன்றுகிறது. உன் முகத்தில் நிஜமாகவே ஒரு ஞான ஒளி வீசுகிறது. ஆனால், என் கண்கள் கூசவில்லை. என்னைப் பார்க்கும்பொழுது உனக்கு எப்படி தோன்றுகிறது ஜனனி? என்று நினைக்கும்பொழுது இண்டர்காம் அழைத்தது.
ஹலோ
ஹலோ ஆகாஷ் நான்தான்...
சொல்லு ஜனனி
ஆகாஷ், நாம இன்னைக்கு வீட்லயே டின்னர் சாப்பிடலாமே, பௌர்ணமி வேற, மொட்டை மாடியில உட்கார்ந்து பேசிக்கிட்டே சாப்பிடலாம். உனக்கு ஓ.கே.தானே?
ஓ.கே.
ஹேய், என்ன ஆகாஷ், பலமான யோசனை?
ஒண்ணுமில்லை
ஒண்ணுமில்லன்னாலே ஏதோ இருக்கு. சரி, எட்டு மணிக்கு மொட்டை மாடிக்கு வந்துடு.
ஓ.கே. ஜனனி.
இப்பொழுது டைம் பார்த்தான் 6 தான். வாட் எல்ஸ் கேன் ஐ டு? ஓ, மிஸ்டர் சாரதி சில விவரங்களை அவருக்கு மெயில் பண்ணச் சொன்னாரே. லேப்டாப்பை எடுத்தான். சிந்தனை சாரதியை நோக்கிப் பறந்தது.
சாரதி, மாநிறத்துக்கும் மேலான கலர். கண்களில் ஒரு தீர்க்கம். ஹைலி இன்டெலக்சுவல். ஐ.ஐ.டி. மெட்ராசில் பி.டெக், முடிச்சிட்டு பெங்களூரில் எம்.பி.ஏ. கோல்டு மெடலிஸ்ட். கொஞ்சமாக, ஆனால், அழுத்தமாகப் பேசுபவர். எப்பொழுதும் முகத்தில் மந்தகாசம், உதடுகளில் முறுவல். இரண்டுமே பிஸினஸுக்காக வளர்த்துக் கொண்டது இல்லை, இயல்பாக இருந்தது. பேச்சில் பொறுப்பும், கவனமும் தெரிந்தது. அவர் புகழுச்சியில் இருக்கார், அவர்கிட்ட நான் நிறைய கத்துக்கணும்.
மெயில் அனுப்பியாச்சு. டைம் 7.45. மொட்டைமாடிக்குச் சென்றான்.
அங்கே தாத்தா, பாட்டி, ஜனனி டின்னருக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆகாஷ் கேட்டான்,
என்ன ஜனனி, நிலாவில் என்ன ஆராய்ச்சி பண்றே?
நிலாவில பாட்டி வடை சுடறாங்களான்னு பார்க்கிறேன்.
உடனே பாட்டி, ம்… ஊஹூம், இந்தக் காலத்து பாட்டியெல்லாம் வடை சுட மாட்டாங்க. ’மைக்ரோ அவன்’ல பீட்ஸா செஞ்சுக்கிட்டு இருப்பாங்க.
தாத்தா கேட்டார், அதுசரி சிவகாமி நீ என்ன பண்ணியிருக்க இப்ப?
வெஜிடபிள் சூப், நமக்கு சப்பாத்தி, இவங்களுக்கு பூரி மசாலா, ஃப்ரூட் சாலட், மோர் கரைச்சு வச்சிருக்கேன். ஸ்பெஷலா ஒண்ணுமில்லை.
அதைக் கேட்டு ஆகாஷ், பாட்டி இதைவிட இன்னும் என்ன ஸ்பெஷல் வேணும்? பாட்டி, உங்க ஜெனரேஷன் மக்கள் ரொம்ப ஆசையா சமைச்சு, அன்பா பரிமாறுவீங்க. ஆனால், இந்த ஜெனரேஷன் பெண்களெல்லாம் அதைக் கடமையேன்னு செய்றாங்களோன்னு தோணுது. அதுவும் ஆசையா பரிமாறுதல் எல்லாம் வாய்ப்பே இல்லாமப் போச்சு. நீங்க என்ன நினைக்கிறீங்க பாட்டி?
பாட்டி சிரித்துக் கொண்டே கேட்டாள், ‘’ஆகாஷ், உனக்கு சிவனிடம் நாரதர் மாம்பழம் கொடுத்து, அதனால் முருகன் கோவிச்சுக்கிட்டு பழநியில நின்ன கதை தெரியும் தானே?
தெரியும் பாட்டி.
நீ யோசிச்சிருக்கியா? சர்வ வல்லமை படைத்த சிவனால் இன்னொரு ஞானப்பழத்தை பெற்றுத்தர முடியாதா? வினை தீர்க்கும் விநாயகர் தம்பிக்காக ஒரு பழத்தை விட்டுத்தர மாட்டாரா? சங்கத் தமிழை விட இனிய கனி எங்கேனும் இருக்குமா? அப்படிப்பட்ட தமிழின் தலைவன், ஞான பண்டிதன் முருகன். அவர் இந்தப் பழத்திற்காக கோபம் கொள்வாரா?
எஸ் பாட்டி, நீங்க கேக்கறது சரிதான். பின்ன ஏன் பாட¢டி, இப்படி ஒரு பிரச்னை? குழப்பம்?
இந்தக் கதைக்குப் பின்னாடி ஓர் உண்மை இருக்கு. விநாயகர், சிவன் சக்தியில் - அதாவது இறைமையில் உலகத்தையே கண்டார். முருகனோ இவ்வுலகம் முழுவதிலும் இறைமையைக் கண்டார்.
சூப்பர் பாட்டி என்று கைதட்டினான் ஆகாஷ். பின்பு, சரி பாட்டி, அந்தக் கதையை இப்ப ஏன் சொல்றீங்க?
ஜனனி, ”ஆகாஷ், அதுக்கு நான் பதில் சொல்றேன்’’ என்றாள்.
பாட்டியும், சொல்லு பார்ப்போம் என்றாள்.
ஆகாஷ், பாட்டியோட ஜெனரேஷன் தன் வீட்டிலேயே உலகத்தை பார்த்தாங்க. கணவன், குழந்தை, உறவினர், வீடு அவ்வளவுதான். அதனால எல்லாத்தையும் ஆசையோட, அன்போட செஞ்சாங்க. எங்க ஜெனரேஷன் பெண்கள் உலகத்திலே வீட்டை பார்க்கிறாங்க. வீட்டுக்கு வெளியில கார் ஓட்டறதுல தொடங்கி, லேட்டஸ்ட் டெக்னாலஜியை யூஸ் பண்ற வரை பெண்கள் உலகம் விரிஞ்சுடுச்சு. குடும்பம் அவங்களுக்கு ஒரு பகுதி. அதனால, அவங்க இந்த அளவுக்குத்தான் செய்வாங்க. அது யாரோட தப்புமில்லை. காலத்தின் கட்டாயம்.
ஆகாஷ், ஜனனியை ஆச்சரியத்துடன் பார்த்தான். உன் பதில் என்னை கன்வின்ஸ் பண்ணுது ஜனனி.
தேங்ஸ், சாப்பிடலாமா?
பாட்டி, கந்தா சூப் கொண்டு வா என்றாள்.
தோ வந்துட்டேன் மா என்றபடி கந்தன் எல்லாருக்கும் சூப் கொண்டு வந்தார்.
ஒரு வாய் சூப் சாப்பிட்ட ஆகாஷ்,
“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி
கம் அன் ஹேவ் சம் சூப் வித் மி,
ஹாட்டா, கோல்டா நீயே தொட்டுப்பாரு...’’
என்று பாடவும் அனைவரும் சிரித்தார்கள். கந்தன் முழித்தார்.
‘’கந்தா, நீ கவலைப்படாதே, சார் சும்மா ஜாலியா பாடினார், நீ போய் வேலையைப் பார்’’ என்றாள் ஜனனி.
வெட்கம் கலந்த அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து அகன்றார் கந்தன்.
ஜனனி கேட்டாள், எப்படி ஆகாஷ் நீ டைம்லியா அடிச்சு சிரிக்க வைக்கிற?
ஜனனி கேட்டாள், எப்படி ஆகாஷ் நீ டைம்லியா அடிச்சு சிரிக்க வைக்கிற?
அதற்கு ஆகாஷ், ஹேய், நீ, பாட்டி, தாத்தா எல்லாரும் டைம்லியா சிந்திக்க வைக்கிறீங்க, நான் ஆஃப்டர் ஆல் சிரிக்கத்தான் வைக்கிறேன்.
சிறியவர்கள் பேச்சை இரு பெரியவர்களும் ரசித்தார்கள்.
சுவாரஸ்யமாக பேசியபடியே சாப்பிட்டு முடித்தார்கள்.
ஆகாஷ் இரு கைகளையும் குவித்தபடியே, பாட¢டி, தாத்தா ஆயிரம் நன்றிகள் என்றான் கண்களில் சிரிப்புடன்.
தாத்தா கேட்டார், எதற்கப்பா இவ்வளவு பெரிய கும்பிடு? போதும்டா சாமி, விட்டுடுங்கறியா?
என்ன தாத்தா, எவ்வளவு பெரிய வள்ளல் நீங்க? நம்ம தாடிக்கார தாத்தாவே, ‘’செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்‘’னுதான் சொல்லியிருக்கார். நீங்களும், பாட்டியும் வயிறு, செவி ரெண்டுக்குமே நிறைய அள்ளி கொடுத்திருக்கீங்க. அதுக்குதான் என் ஆயிரம் நன்றிகள்.
தாத்தா சிரித்தபடியே கேட்டார், ‘’எப்பப்பா லட்சம் நன்றிகள் சொல்லுவ?”
கூடிய சீக்கிரம் தாத்தா.
அது எதுக்குப்பா?
செவி, வயிறு, மூளை அதையெல்லாம் தாண்டி மனசு இருக்குல்ல? அந்த மனசை சந்தோஷத்துல திக்கு முக்காட வைப்பீங்க. அப்ப சொல்வேன், லட்சம் நன்றிகள் என்றபடியே ஜனனியைப் பார்த்து உல்லாசமாக சிரித்தான்.
ஜனனி மகிழ்ச்சியையும், வெட்கத்தையும் மறைக்க பெரும்பாடு பட்டாள். தாத்தாவும் பாட்டியும் நிறைவான பார்வை மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தாத்தா சொன்னார், கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியா நடக்கணும், குட்நைட் பா என்றபடி கீழே இறங்கிச் சென்றார். காலிப் பாத்திரங்களை கந்தன் எடுத்துச் சென்றார். பின் சாப்பிட்ட இடத்தைக் சுத்தம் செய்து சென்றார். பாட்டியும் சென்றவுடன் ஜனனி சொன்னாள், ஆகாஷ் இன்னைக்கு காலையில்தான் ¢உன்னைப் பார்த்தேன். சிக்ஸ்த் படிக்கும்போதே நாங்க சென்னை வந்துட்டோம். நடுவுல எப்பவாவதுதான் தொடர்பு இருந்தது. ஆனா, நம்மால பழையபடியே சகஜமா பழக முடியுதே எப்படி?
ஜனனி, இப்படி யதார்த்தமா பழகறது சந்தோஷமா இருக்குல்ல?
நிச்சயமா.
அப்படீன்னா அனுபவி. தேவையில்லாம காரணத்தை யோசிச்சு நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. லெட்ஸ் என்ஜாய் த ப்ரெசன்ட்.
ஜனனி மௌன முறுவலுடன் ஆமோதித்தாள்.
ஒன்றுமே பேசாமல் முழு நிலவை ரசித்தார்கள்.
ஓ.கே. ஜனனி, போலாமா? எனக்கு சிஸ்டம்ல கொஞ்சம் வேலை இருக்கு.
ஜனனி ஒன்றும் சொல்லாமலே அவனைப் பார்த்தாள். ஆகாஷ் சொன்னான், ஜனனி இன்னும் கொஞ்ச நேரம் சேர்ந்து இருக்கலாமேன்னு தோனும்போது கிளம்பிடணும். அப்பதான் அடுத்து சந்திக்கப் போற நிமிஷம் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.
அவள் அருகில் வந்தான்.
குட் நைட் மை டியர், யோசிக்காமல் தூங்குடா என்று சொல்லி விட்டு சிறு விசிலுடன் உற்சாகமாக கீழே இறங்கினான்.
ஜனனி நினைக்கிறாள், எஸ், நான் ஏன் யோசிச்சு குழம்பணும்? நான், என் புது உணர்வை மகிழ்ச்சியா அனுபவிக்கிறேன். அவளையும் அறியாமல் அவள் வாய்,
‘’நேற்று இல்லாத மாற்றம் என்னது?’’ என்று பாடியது.
தன் வாட்சை எடுக்க அங்கு வந்த ஆகாஷ் அவளைக் குறும்பாகப் பார்த்தான். அவளால், அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வாட்சை எடுத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல் போய் விட்டான்.
ஜனனி தன் அறைக்குப் போனாள். ஜன்னலைத் திறந்தாள். நிலவு தெரியவில்லை. ஆகாயமே தெரிந்தது. ஆகாயத்தில் ஆகாஷ் தெரிந்தான். இது கற்பனைதான். ஆனாலும் இனித்தது. கண்களில் கற்பனைகளுடன், இமைகளை மூடினாள். ஜனனி, அப்படியே படுத்து உறங்கிப் போனாள். தூக்கத்திலும் அவள் இதழ்களில் முறுவல் ஒட்டிக் கொண்டிருந்து. (தொடரும்)
5
காலை மணி 5. அலாரம் அடித்தது. ஆகாஷ் கண்களில் இருந்த தூக்கத்தை உதறிவிட்டு எழுந்தான். விடியற்காலையில் எழுந்து பழகி விட்டதால், ஜனனியும் எழுந்து தன் அறையை விட்டு வெளியில் வந்தாள். ஆகாஷ், உற்சாகம் நிறைந்த முகத்துடன் யோகா செய்ய மொட்டை மாடிக்கு வந்தான். அந்த நேரத்தில் பாட்டி குளித்து, ஈரத் தலையில் துண்டுடன்,
கோசலையின் திருக்குமாரா
கொஞ்சுமணி ராமா
கூவியது சேவலதன்
கோல மொழி கேளாய்
பூசி வரும் செங்கதிரோன்
பூத்து வரும் நேரம்
பூபாளம் பாடுகிறோம்
பொன்மாலே வாராய்...
என்று திருமாலை எழுப்பினாள். உணர்வும், நம்பிக்கையும் மிகுந்து இருந்ததால் பாட்டியின் வயதான குரலிலும் பக்தி வழிந்தது.
ஆகாஷுக்கு பாட்டியின் சுப்ரபாதம் புத்துணர்வை அளித்தது. மாடிக்குப் போனபோது ஜனனி கீழே இறங்கி வந்தாள். கண்களில் லேசான தூக்கம், சிறிது கலைந்த முடி, லைட் ரோஸில் நைட்டி, மெதுவாக இறங்கினாள். ஆகாஷைப் பார்த்தவுடன் அவளுக்கு மிகவும் வியப்பு. உற்சாகமாக ’குட்மார்னிங் ஆகாஷ்’ என்றாள். அவன் கையசைத்து குட்மார்னிங் என்று சைகையில் சொன்னான். ஜனனி மேலும் ஏதோ கேட்கத் தொடங்க, ஆகாஷ் ‘பேசாதே’ என்பது போல் தன் ஒற்றை விரலை வாயில் வைத்தான்.
ஏன்?- ஜனனி சைகையிலேயே கேட்டாள்.
ஆகாஷுக்கு பாட்டியின் சுப்ரபாதம் புத்துணர்வை அளித்தது. மாடிக்குப் போனபோது ஜனனி கீழே இறங்கி வந்தாள். கண்களில் லேசான தூக்கம், சிறிது கலைந்த முடி, லைட் ரோஸில் நைட்டி, மெதுவாக இறங்கினாள். ஆகாஷைப் பார்த்தவுடன் அவளுக்கு மிகவும் வியப்பு. உற்சாகமாக ’குட்மார்னிங் ஆகாஷ்’ என்றாள். அவன் கையசைத்து குட்மார்னிங் என்று சைகையில் சொன்னான். ஜனனி மேலும் ஏதோ கேட்கத் தொடங்க, ஆகாஷ் ‘பேசாதே’ என்பது போல் தன் ஒற்றை விரலை வாயில் வைத்தான்.
ஏன்?- ஜனனி சைகையிலேயே கேட்டாள்.
தன் கையை பூஜை அறையை நோக்கிக் காண்பித்தான்.
இலக்கு என ஒன்றுண்டேல்
என்றென்றும் நீதான்
ஸ்ரீநிவாசா நீயே
இலக்குமியின் நாதன்!
கலக்கமில்லா வரமெல்லாம்
கனிந்தருளும் தேவன்!
பாட்டியின் சுப்ரபாதம் தொடர்ந்தது. ஆகாஷ் மிக மெல்லிய குரலில் சொன்னான். பாட்டி பெருமாளுக்கு பெரிசா குட்மார்னிங் சொல்றாங்க. நாம பேசி தொந்தரவு பண்ண வேணாம் என்றான்.
அப்பொழுது அங்கு வந்த தாத்தா, ஆகாஷ், பாட்டி பெருமாளுக்கு வெறும் குட்மார்னிங் மட்டும் சொல்லல. அவரை அப்படி, இப்படின்னு புகழ்ந்து தன் ஒரே இலக்கு வைகுந்தம்தான்னு திருமால்கிட்ட சரணடையறா. அவரை எழுப்பி, அவரிடமே தஞ்சம் புகுவது எவ்வளவு உன்னதமான விஷயம்? இது வெறும் பாட்டு அல்ல பாட்டிக்கு, திடமான நம்பிக்கை.
தன் தலையசைப்பால் ஆமோதித்தான் ஆகாஷ்.
ஜனனி கீழே சென்றாள். ஆகாஷும், தாத்தாவும் மாடிக்குச் சென்றார்கள். தாத்தா சொன்னார், எங்க உலகம் எளிமை, கடமை, உண்மை இதுலயே அடங்கிடுது. இது சின்ன உலகம் போலத் தோன்றும். ஆனா, இதுதான், உண்மையான அகண்ட பிரபஞ்சம் என்றார்.
எவ்வளவு பெரிய உண்மை! வாழ்க்கைத் தத்துவம். இவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள். இவர்கள் இல்லறத்தில் இறைமையைக் காண்பவர்கள். அதனால்தான், இவர்கள் வாழ்க்கை ஸ்படிகம் போல் தெளிவாக இருக்கிறது என்று நினைத்தான் ஆகாஷ். வாய் திறந்து சொல்லவில்லை. இருந்தாலும் தாத்தா அவன் எண்ண ஓட்டத்தை அனுபவ அறிவால் படித்தார். இதழ்களில் சிறிய சிரிப்புடன் அவரவர் கடமைக்குச் சென்றனர்.
ஆறு மணிக்குக் குளித்து முடித்து, வெள்ளை ஜிப்பா, குர்தாவில் பளிச்சென ஹாலுக்கு வந்தான் ஆகாஷ். தாத்தா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். பாட்டி இருவருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். காஃபியைக் குடித்தவாறு ஆகாஷ் கேட்டான், ஏன் பாட்டி, பெருமாள் பாவம். எவ்வளவு வேலை அவருக்கு? களைப்பா இருக்க மாட்டாரு? காலங்கார்த்தால அவரைத் தூங்க விடாம ஏன் எழுப்பறீங்க?
அவனது குறும்பை ரசித்தபடியே பாட்டி சொன்னாள், அவர் தூங்கிட்டார்னா உலகம் எப்படி முழிச்சிருக்கும்? அவர் நமக்காக எப்பவுமே விழித்திருப்பவர். இந்த பக்தி, பாசுரங்களெல்லாம் நாம விழிப்புணர்வோட இருக்கறதுக்குத்தான். அதோட, அவருக்கும், நமக்கும் நெருங்கின உறவு இருக்கு. அவரோட துணை எப்பவும் இருக்குங்கற பலம்தான்.
பாட்டியின் யதார்த்தமான விளக்கத்தை ரசித்தான் ஆகாஷ். தாத்தா கேட்டார், ஆகாஷ் நாங்க காஞ்சிபுரம் போலாம்னு இருக்கோம். நீயும் வாயேன்.
எப்ப தாத்தா திரும்ப வருவோம்?
எப்ப தாத்தா திரும்ப வருவோம்?
ஒரு 3 மணிக்கு வந்துடலாம்.
ஓ.கே. தாத்தா, வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, கொஞ்சம் ஷாப்பிங் முடிச்சிட்டு 8 மணிக்கு கிளம்பிடறேன். நைட் ட்ரெயின்.
இன்னைக்கேவா கிளம்பற? ஜனனியின் குரலில் ஆற்றாமை தெரிந்தது.
எஸ். இன்டர்வியூ ஓவர். டூ வீக்ஸ் டைம் கொடுத்திருக்காங்க ஜாயின் பண்றதுக்கு. ஆபீஸ் கிட்டக்கவே ரூம் பார்த்து தரச் சொல்லி சாரதி சாரோட பி.ஏ.வை ரிக்வெஸ்ட் பண்ணியிருக்கேன். அவர் பார்த்துத் தர்றதா சொல்லியிருக்கார்.
நல்லது, சந்தோஷம். அப்பப்ப வீட்டுக்கு வாப்பா என்றார் தாத்தா.
யார் மூலமாகவாவது நம்ம வீட்லேர்ந்து சாப்பாடு எடுத்துக்க முடியுமான்னு பாரு ஆகாஷ் என்றாள் பாட்டி.
உடனே ஜனனி குறுக்கிட¢டு, என்ன, எல்லாரும் ஏன் இப்படி பேசறீங்க? நம்ம வீடு இவ்வளவு பெரிசா இருக்கும்போது ஆகாஷ் ஏன் ரூம்ல தங்கணும்? ப்ளீஸ் ஆகாஷ், தாத்தா, பாட்டி குழந்தைத்தனமா இருக்காங்க. வயசாயிடுச்சுல்ல? அவங்க உன்னை தங்க சொல்லலன்னு நினைக்காத. எனக்காகவாவது நீ நம்ம வீட்லதான் தங்கணும்.
மூவரும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
பார்வையின் கூர்மையை கவனித்து தான்தான் வேறுமாதிரி யோசிக்கிறோமோ என்று ஜனனி யோசித்தாள்.
ஓ, நான் இருப்பதால்தான் ஆகாஷ் இங்கு தங்க முடியாதோ. நான் தான் புரியாமல், குழந்தைத்தனமாக பேசிவிட்டேனோ? ஒருவித கூச்சத்துடன் தாத்தாவைப் பார்த்தாள்.
ஓ, நான் இருப்பதால்தான் ஆகாஷ் இங்கு தங்க முடியாதோ. நான் தான் புரியாமல், குழந்தைத்தனமாக பேசிவிட்டேனோ? ஒருவித கூச்சத்துடன் தாத்தாவைப் பார்த்தாள்.
தாத்தா சிரித்துக்கொண்டே, நாம எல்லாம் கிளம்பலாம் என்றார்.
பாட்டி சமையலறைக்கும், ஆகாஷ் தன் அறைக்கு¢ம் போனார்கள்.
தாத்தா பேத்தியிடம் சொன்னார்.
உனக்காக மட்டுமே ஆகாஷ் நம்ம வீட்ல தங்கற நேரம் சீக்கிரம் வரட்டும்.
ஜனனி, தோ... நானும் ரெடியாகிறேன் தாத்தா… காஞ்சிபுரம் போறதுக்கு என்றபடியே நழுவினாள். தாத்தா உரக்க சிரித்தார்.
(தொடரும்)
6
காரில் காஞ்சிபுரம் போனார்கள். தாத்தாவிடம் ஆகாஷ் தன் அப்பாவிற்கும் ஜனனியின் அப்பாவிற்கும் உள்ள ஆழ்ந்த நட்பைப் பற்றி கேட்டான். தாத்தா நிறைய சொன்னார். ஆகாஷ், ஜனனி இருவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள். பிறகு, வெளிநாட்டு நாகரிக மோகம் இந்தியாவில், தமிழ்நாட்டில் எப்படி பரவியுள்ளது? வெளிநாடுகளில் தமிழர்கள் வாழ்க்கை முறை பற்றியெல்லாம் பேசியபடியே காஞ்சிபுரத்தை அடைந்தார்கள்.
காஞ்சிபுரம் கோவிலில் திவ்ய தரிசனம் பெற்றார்கள். கையில் எடுத்துச் சென்ற புளிசாதம், தயிர்சாதம் சாப்பிட்ட பிறகு சிறிது உட்கார்ந்து பிறகு கிளம்பினார்கள்.
காஞ்சியின் தனிச்சிறப்பு பற்றி யாருக்காவது தெரியுமா? என்று தாத்தா கேட்டார்.
ஆகாஷ், ஜனனி ரெண்டு பேருமே தெரியாது என தலையசைத்தார்கள்.
சிவனுக்குப் பூஜை செய்து, தவம் செய்ய அம்பிகையே ஆசைப்பட்டாங்க. அதற்காகத்தான் அம்மனே காஞ்சிபுரத்துக்கு வந்து மாமரத்தடியில் தோன்றிய சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தாள். சிவன் தேவியிடமும் திருவிளையாடல் செய்ய ஆசைப்பட்டார். நதியில் வெள்¢ளம் பெருகச் செய்தார். உமையாள், ஆற்று வெள்ளம் சிவலிங்கத்தை அழிச்சிடுமோன்னு பயந்தாள். வெள்ளத்தைத் தடுக்க முடியாமல் அருவமாய் அமர்ந்திருக்கும் நாயகனை அணைத்தாள்.
காதலி அன்பால் கட்டியணைக்க, கடுமேனி குழையக் கண்ட தேவர்கள்’ “எம்பிராட்டிக்கு மெல்லியரானார் ஏகாம்பரர்’’ எனப் போற்றினர். சிவன் காட்சி கொடுத்து, அம்பி¢கையின் பூஜையும், அறமும் சிறக்கவும், காஞ்சி மக்கள் நலமாக இருக்கவும் பேரருள் புரிந்தார். கதையை முடித்தார் தாத்தா.
உடனே, ஆகாஷ் கேட்டான்.
அப்படின்னா, காதல் பக்தியையும் மிஞ்சி நிற்கிறது. அப்படித்தானே தாத்தா?
ஆமாம், அதுல என்ன சந்தேகம்? காதல்ங்கறதும் அன்புதானே ஆகாஷ்? உலகத்தில் அன்பைவிட உயர்ந்தது, உன்னதமானது வேறென்னவா இருக்க முடியும்?
கிளம்பலாம், நேரமாச்சு என்றாள் பாட்டி. களைப்பினால் காரில் தாத்தாவும், பாட்டியும் துங்கிக் கொண்டே வந்தார்கள். அதனால், அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாததால் ஜனனியும், ஆகாஷும் மௌனமாகவே பயணம் செய்தார்கள். மௌனமாக இருந்தாலும் நேசிப்பவர்களின் அருகிலிருப்பதே அலாதியான ஆனந்தம் என்பதை இருவருமே உணர்ந்தார்கள். நடுவில் காரை நிறுத்தி இளநீர் அருந்தினார்கள். நேரம் பறந்தது. இரவு 8 மணிக்கு காரில் தாத்தா ஆகாஷை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
ஜனனி தானும் தாத்தாவுடன் ஸ்டேஷனுக்கு வருவதாகச் சொன்னாள். தாத்தா பாட்டியைப் பார்த்தார். பாட்டி தன் கண்ணசைவில் சம்மதம் தெரிவித்தவுடன் தாத்தா ஜனனியுடனும், ஆகாஷுடனும் கிளம்பினார்.
ஜனனிக்கு தவிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. ட்ரெயினில் ஏறிவிட்டான். ஆகாஷ். யதார்த்தமாக தாத்தாவுடன் சென்னை ட்ராஃபிக், பொல்யூஷன் என்று ஏதோ பேசினான். இப்பொழுதும் ட்ரெயினில் மிகவும் சாதாரணமாகவே இருந்தான். ஜனனியிடம் ஒரு தவிப்பை உணர்ந்த ஆகாஷ் கேட்டான்.
எனிதிங் ராங் வித் யூ ஜனனி?
நோ, ஐ ஆம் ஆல்ரைட்
கையை நீட்டினான். கை குலுக்க இவளும் கையை நீட்டினாள். ஆனால், அவன் தன் உள்ளங்கையை விரித்தான் அவள் முன். ஒன்றும் புரியாமல் பார்த்தாள் ஜனனி. அவனுடைய உள்ளங்கையில்
‘கண்களில் கலக்கம் வேண்டாம் கண்மணி
பறந்து வருவேன் பதினைந்து நாட்களில்!’
அதைப் படித்ததும் ஜனனிக்குப் பரவசம். அவனும் அவளை நிறைவுடன் பார்த்தான். ட்ரெயின் நகர்ந்தது. ‘பை மா, சந்தோஷமாயிரு’ என்றான்.
ஆகாஷ், மொதல்ல மொபைல் வாங்கு
ஷ்யூர் என்றபடியே கண்ணை விட்டு மறைந்தான் ஆகாஷ். ஆனால், எவ்வளவு முயன்றாலும் மனதை விட்டு மறையவில்லை. வீட்டிற்குத் திரும்ப வரும்போது தாத்தா ஆகாஷைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டே வந்தார். ஜனனிக்கு அவர் பேச்சு ஒரு பக்கம் ஆறுதலையும், ஒரு பக்கம் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.
ஏன் ஜனனி, ஆகாஷ் இன்னும் மொபைல் வாங்கல?
மதுரை வந்த மறுநாளே இன்டர்வியூ கால் தாத்தா. ஜெட் லாகில் தூங்கி எழுந்து சென்னை வந்து விட்டார். இங்கயும்தான் பிஸியா இருந்தார். தாத்தா அவளைக் குறும்புடன் பார்த்தார்.
என்ன தாத்தா?
நீயே சொல்.
ப்ளீஸ் தாத்தா, என்னன்னு சொல்லுங்க.
ஆகாஷ் எப்பொழுதிலிருந்து அவனிலிருந்து அவர் ஆனார்?
இயல்பாகவே ஏற்பட்ட இந்த மாற்றம் ஜனனிக்கே ஆச்சர்யமாக இருந்தது. தாத்தாவிற்கு ஆனந்தமாக இருந்தது.
வீட்டிற்கு வந்து உறக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தாள் ஜனனி. திருமண பந்தத்திலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லையே எனக்கு. ஒரு குழந்தைக்குத் தாயாக இல்லாமல், ஆசிரமக் குழந்தைகளுக்கு அம்மாவாக அன்பு செலுத்தி வாழணும்னு ஆசைப்பட்டேனே. கல்லூரியில் சக மாணவர்களுடன் நன்கு பழகியும், யாரிடமும் மனசு இப்படி ஈர்க்கப்படவில்லையே, அஞ்சு வருஷம் ஒன்றாகப் பழகிய நண்பர்கள் பிரிந்தபொழுது கூட மனசு இப்படி தவிக்கவில்லையே. யோசித்தபடியே கண்களை இறுக மூடிக் கொண்டாள். ஆகாஷ், இதயத்திலிருந்து கண்களுக்கு ஷிஃப்ட் ஆகி விட்டார். இரண்டு நாட்கள் பழகியது போல் தோன்றவில்லை. குறைந்தது இரண்டு ஜென்மங்களாவது பழகியிருப்போம் என்று தோன்றுகிறது. நாளை காலை ஆகாஷ் அவங்க வீட்லேர்ந்து ஃபோன் பண்ணுவார். குரலையாவது கேட்கலாம். ஆகாஷின் குரலில் எப்பொழுதுமே ஒரு குதூகலம் இருக்கும். அது பேசுபவருக்கும் தொற்றிக் கொள்ளும். ஆமாம், நான் ஆகாஷைப் பற்றி இவ்வளவு நினைக்கிறேனே. ஆகாஷ் என்னைப் பற்றி துளியாவது நினைப்பாரா?
ட்ரெயினில் லோயர் பெர்த்தில் படுத்த ஆகாஷ் ஜன்னல் வழியே வெளியில் பார்த்தான். நட்சத்திரங்களிலெல்லாம் ஜனனி பளிச்சிட்டாள். என்னது இது, ஐ ஆம் எ மேன் ஆஃப் டெக்னாலஜி அன் பிஸினஸ். என் மனசா ஒரு பெண்ணிடம் இப்படி ஒட்டிக் கொண்டது? ஜனனியை விட பத்து மடங்கு அதிகமாக தான் தவித்ததை தாத்தா கண்டுபிடிக்காதவாறு கட்டுப்படுத்திக் கொள்ள எவ்வளவு சிரமப்பட்டேன்? இது இனிய இம்சை, தணியாத தவிப்பு, அழகான அவஸ்தை, சந்தோஷமான சங்கடம். நாளை காலை வீட்டுக்குப் போனவுடனே ஜனனிக்கு ஃபோன் பண்ணணும். அவ குரலையாவது கேட்கலாம். அவள் குரலில் எப்பொழுதுமே ஒரு நேசம் வெளிப்படும். அது சுற்றியிருப்போர்கள் மீதும் பாயும். அலைபாயும் மனசை எப்படி கட்டுப்படுத்தி, தூங்குவது என்றே தெரியவில்லை. அப்படியே கண்களை மூடினான். அப்பொழுது, மனதிற்குள் ஒரு பாடல் கேட்டது.
‘’கண்ணுக்குள் நூறு நிலவா? இது ஒரு கனவா?’’ ஆம். கனவுதான். ஆனால், விரைவில் மெய்ப்படப் போகும் கனவு. அப்படியே ஓடும் ரயிலில் உறங்கிப் போனான்.
ஜனனியும் அவளுடைய கனவுகளுடன் கண் உறங்கினாள்.
கண்கள் உறங்கின, இதயங்கள் இடம் மாறின. (தொடரும்)
7
ஆகாஷ் மதுரையில் தன் வீட்டிற்குச் சென்றான். அப்பா பூமிநாதனும், அம்மா கமலியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பூமிநாதன் சொன்னார், ரியலி ஐ ஃபீல் ப்ரௌட் ஆஃப் யூ மை சன், எவ்வளவோ வெற்றி, பணம், புகழையெல்லாம் கடந்து வந்தாச்சு. ஆனால், உன்னோட வெற்றி ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆகாஷ். சொல்லு, எல்லாரும் எப்படி இருக்காங்க?
எல்லாரும் ஃபைன் பா. சூப்பர் தம்பதிப்பா தாத்தாவும், பாட்டியும்.
சரி, ஜனனி எப்படி இருக்கா?
அவளுக்கென்ன? அழகு, அறிவு, அந்தஸ்துனு எல்லாம் இருந்தும், எதையுமே வெளியில் காட்டிக்காம, வாழ்க்கையின் அடிப்படையே மனிதநேயம்ங்கறா. தன்னால முடிஞ்ச நல்லத சந்தோஷமா செய்யறா. க்ரேட்பா.
கமலி சொன்னாள், சரி ட்ரெயின்லேயே ப்ரஷ் பண்ணிட்டல்ல? காஃபி கொண்டு வர்றேன் என்று சமையலறைக்குப் போனாள்.
ஜனனிக்கு ஃபோன் பண்ணணுமே என்று நினைத்தபடியே எழுந்தான். ”ஆகாஷ், திஸ் ஈஸ் ஃபார் யூ, பிடிச்சிருக்கான்னு பாரு” அப்பா ஒரு சின்ன பாக்ஸ் தந்தார்.
ஆகாஷ் பிரித்தான். அழகான, லேட்டஸ்ட் டெக்னாலஜி உள்ள மொபைல்.
அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, எப்படிப்பா இது? சின்ன வயசிலேர்ந்து நான் எதையும் கேட்காமலேயே குறிப்பறிஞ்சு செய்யறீங்க?
அப்பா, சிறிய புன்னகையையே பதிலாகத் தந்தார்.
தேங்ஸ் பா என்றபடியே மாடியை நோக்கி நடந்தான்.
ஹேய் ஆகாஷ், காஃபி சாப்பிட்டுப் போ என்றாள்.
எப¢பொழுதும் காஃபியை ரசித்துக் குடிக்கும் ஆகாஷ், இன்று கடகடவென குடித்தான். பின் ரெண்டு, ரெண்டு படிகளாகத் தாவி மாடிக்கு வந்தான். ஜனனியின் மொபைல் நம்பர் மனதில் மனப்பாடமாக இருந்ததால், அந்த எண்களை அழுத்தினான். ‘ஜனனி’ என்று கால் சென்றது. எப்படி என்று யோசித்த போது அப்பாவின் வேலை இது என்பதைப் புரிந்து கொண்டான். சிரித்துக் கொண்டே மனதிற்குள் அப்பாவிற்கு தேங்க்ஸ் சொன்னான்.
காலையில் எழுந்தவுடனேயே சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்யும் ஜனனி இன்று அப்படியில்லை. அவள் மனது எதற்காகவோ காத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது புது நம்பரிலிருந்து வந்த காலை ஆன் செய்து,
ஹலோ, ஜனனி
ஜனனி!
ஆகாஷின் குரல் அவளுள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது.
ஆகாஷ்.
ஜனனியின் குரல் ஆகாஷுக்கு 1000 வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. இருவரின் குரலிலும் வழக்கமாக இருக்கும் குதூகலமும் உற்சாகமும் மறைந்து தவிப்பும், நெகிழ்ச்சியும் வெளிப்பட்டன. நிஜமாகவே என்ன பேசுவதென்று தெரியவில்லை இருவருக்கும். உணர்வுகளை வெளிப்படுத்த இவர்களுக்குத் தெரியவில்லையா? சொற்களுக்கு சக்தியில்லையா? இப்படியே மௌனத்தில் பல விநாடிகள் கரைந்தன.
ஆகாஷ் மௌனத்தைக் கலைத்தான்.
எப்படி இருக்க ஜனனி?
இருக்கேன், நீங்க?
ஆகாஷ், அவள் பேச்சில் தோன்றிய மாற்றத்தை உடனே கண்டுகொண்டான். ‘நீ’ இயல்பாக நீங்களாகிப் போனது அவனுக்கு விவரிக்க முடியாத உணர்வைத் தந்தது. அவனும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு, உண்மையைச் சொல்லட்டுமா ஜனனி? என்று கேட்டான்.
மனது படபடத்தது. ‘ம்...’ என்றாள்.
இதுவரை அனுபவித்து அறியாத உணர்வு ஜனனி இது. சந்தோஷத்திற்கு இணையாக எத்தனை வார்த்தைகள் இருக்கோ தமிழில், அத்தனையும் கலந்த உணர்வு இது. பசிக்கல, யார்கிட்டயும் சரியா பேச முடியல, எதுவுமே ஓடலைன்னு வச்சுக்கோயேன்.
ஜனனி லைன்ல இருக்கியா?
‘ம்‘ என்றாள். அவளாலும் பேச முடியவில்லை என்று புரிந்து கொண்ட ஆகாஷ், அவளை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. சட்டென்று தன் இயல்பு நிலைக்கு வர, இயன்றவரை முயன்று, ஜனனி, நேற்று ட்ரெயின்ல ஒரு பயங்கர நிகழ்ச்சி. தூங்கிக்கிட்டிருந்தப்போ, ட்ரெயின் ஒரு ஸ்டேஷன்ல நின்னுது. திடீர்னு சிங்கத்தின் உறுமல். எல்லோருமே பயந்துட்டோம், ஒருவரைத் தவிர.
ஜனனியும் திகிலுடன், அப்புறம் என்னாச்சு?
அந்த ஒருத்தர்தான் சிங்கம்.
ஹேய், என்ன சொல்றீங்க? விளையாடறீங்களா? என்று கேட்கும்போதே ட்ரெயின்ல என்ன நடந்திருக்கும் என்பது புரிபட சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
என்ன ஜனனி, சிரிக்கிற? நான் எவ்வளவு சீரியஸான விஷயம் சொல்லிக்கிட்டிருக்கேன்? அந்த சிங்கம் எங்க யாரையும் தூங்க விடலை தெரியுமா? எப்படா விடியும்? தப்பிச்சு வந்தா போதும்னு ஆயிடுச்சு.
சிரித்தபடியே ஜனனி, இங்கல்லாம் நிறைய சிங்கங்கள் இருக்கும் ஆகாஷ் என்றாள்.
உனக்குப் புரிஞ்சிடுச்சா?
ம்... ஒருத்தர் சிங்கம் கர்ஜனை செய்யற மாதிரி குறட்டை விட்டாரா? நீங்க யாரும் அந்த சத்தத்தாலேயே தூங்கலையா? என்று கேட்டு மறுபடி சிரித்தாள்.
ஆமாம் ஜனனி, இந்த ஊனமுற்றவர்களுக்கு ஒரு கம்பார்ட்மென்ட் கொடுக்கிற மாதிரி, குறட்டை விடுபவர்களுக்குன்னு ஒன்னு ஒதுக்கலாம் ரயில்வேஸ்ல?
சிங்கம்னா சிங்கிளாதான் வரும் ஆகாஷ்.
பரவாயில்லை. மனித அப்பிராணிகளுக்காக சிங்கங்கள் கூட்டமாகவே ஒரே இடத்துல இருக்கட்டும் என்றான்.
மீண்டும் சிரித்தவாறே, சொல்லுங்க ஆகாஷ், மொபைல் நம்பரா இருக்கே? இது யாரோடது?
ஹேய், அப்பா ரெடியா வாங்கி வச்சிருந்தார். அதைவிட சர்ப்ரைஸ் என்னன்னா, அதில் உன் நம்பர் அல்ரெடி சேவ் ஆகியிருந்தது. ரெண்டு நாள்ல நிறைய டிஸ்கஸ் பண்ணினோம், எவ்வளவோ ஷேர் பண்ணிக்கிட்டோம். உனக்கு உண்மையிலேயே இப்ப என்ன தோணுது ஜனனி?
ஜனனியிடமிருந்து மௌனமே பதிலாக வந்தது.
ப்ளீஸ் ஜனனி சொல்லி¢டேன்.
ஆகாஷ், என் எண்ணங்களை, உணர்வுகளை வினாக்களை எழுதி வச்சிருக்கேன். படிக்கட்டுமா? 2 நிமிஷம் அமைதியா கேக்கறிங்களா?
எஸ் யுவர் ஹைனஸ்! என்றான்.
ஜனனி தன் இனிய குரலில், இனிதுனும் இனிய தமிழில்,
அன்பென்னும் சொல்லின் முழு அர்த்தம் நீதானோ?
ஆருயிரினும் இனிய ஆனந்தம் நீதானோ?
இறைவன் ஈந்துள்ள பெருவரமும் நீதானோ?
ஈசன் எனக்களித்த இன்னிசையும் நீதானோ?
உன்னுள் எனை உணர்த்திய உள்ளொளியும் நீதானோ?
ஊற்றாகப் பெருக்கெடுக்கும் உற்சாகம் நீதானோ?
என்னுள் நான் உணரும் என் சகலமும் நீதானோ?
ஏக்கத்தை ஏற்படுத்தும் ஏகாந்தம் நீதானோ?
ஐயத்தைப் போக்குகின்ற ஆசானும் நீதானோ?
ஒரு பார்வையி¢ல் எனை ஈர்த்த ஒளிதீபம் நீதானோ?
ஓயாது ஓடுகின்ற ஒரு சிலிர்ப்பும் நீதானோ?
ஒளவியம் கொள்ளாத அருந்தவமும் நீதானோ?
படித்து முடித்தாள்.
ஆகாஷால் பேச முடியவில்லை. இருவர் கண்களிலும் நீர். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! (தொடரும்)
8
ஆகாஷ், ஜனனி இருவரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மொபைலில் பேசிக் கொண்டார்கள்.
பூமிநாதன் கமலியிடம் கேட்டார்,
பூமிநாதன் கமலியிடம் கேட்டார்,
என்ன கமலி, உன் பிள்ளையைக் கேட்டியா?
என்ன கேக்கறது?
ஜனனியை பேசி முடிச்சுடலாமான்னு? நாம சபாகிட்ட கேட்கணும்ல உன் பெண்ணைக் குடுப்பியான்னு?
ஏன் என் பிள்ளைக்கு பெண்ணைக் கொடுக்க உங்க நண்பர்க்கு கசக்குமா என்ன? தேடித் தேடிப் பார்த்தாலும் ஆகாஷ் மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைப்பானா?
அது என்ன அப்படி கேட்டுட்ட? உன் பையன் மேல இருக்குற பாசம் உன்னை அப்படி பேச வைக்குது. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு தெரியுமா?
சரிங்க, நாம ஆகாஷை கேக்கறதுக்கு முன்னாடி சபாபதி அண்ணன் என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுப்போமே.
ஆமாம், ஆமாம் அவனும் லலிதா கிட்ட கலந்து பேசணும். அதோட சபாவோட அப்பா, அம்மாவும் சம்மதிக்கணும். அவங்ககிட்டதானே, சென்னையில ரொம்ப வருஷமா ஜனனி இருக்கா.
உடனே பூமிநாதன் தங்கள் ஆசையை மொபைலின் மூலம் சபாவிடம் தெரிவித்தார். சபா தன் குடும்பத்துல எல்லார்கிட்டயும் கலந்து பேசிட்டு இரண்டு நாளில் முடிவை சொல்வதாகச் சொன்னார்.
பிறகு சபா தன் மனைவி லலிதாவை அழைத்துக் கொண்டு அன்று இரவே சென்னை கிளம்பினார்.
மறுநாள்¢ காலை சாப்பிட்ட பிறகு தாத்தா, பாட்டி, சபாபதி, லலிதா அனைவரும் ஹாலில் உட்கார்ந்தார்கள்.
தாத்தா கேட்டார், என்னப்பா திடீர்னு ரெண்டு பேரும் கிளம்பி வந்திருக்கீங்க?
எல்லாம் சந்தோஷமான விஷயம்தான்ப்பா.
சொல்லு.
நம்ம பூமிநாதன், ஆகாஷுக்கு நம்ம ஜனனியைக் கேட்டு ஃபோன் பண்ணான். ஜனனிக்கும்தான் கல்யாண வயசு ஆகுது. ஆகாஷும் நல்லா படிச்சவன். அன்பு, அறிவு, அந்தஸ்துனு எல்லாம் இருக்கு. நீங்களும் அம்மாவும் என்ன நினைக்கிறீங்க?
தாத்தா சொன்னார், பையன் கெட்டிக்காரன். சுறுசுறுப்பு, சிரித்த முகம், எல்லாத்தையும் விட ஜனனியைப் பார்த்தவுடனே முகத்தில் பிரகாசம். பெரிய கம்பெனியில் எக்ஸிகியூட்டிவ் மேனேஜர் போஸ்ட். என்னைப் பொறுத்தவரை ஆகாஷ் டபுள் ஓ.கே.
அம்மா, நீங்க என்ன சொல்றீங்க?
நல்ல பையன் பா. இருக்கிற இடத்த கலகலன்னு வச்சுக்கிறான். ஜனனிக்கும் அவன் மேல ஒரு நேசம் வந்துடு¢த்து.
அந்த நேரத்தில் அங்கே வந்த ஜனனி கேட்டாள், என்ன எல்லாரும் டிஸ்கஸ் பண்ற அளவுக்கு என்ன விஷயம் இருக்கு இப்ப?
பாட்டி சொன்னாள், எல்லாம் உன் விஷயமாத்தான் ஜனனி. ஆகாஷின் அப்பா உன்னை தன் பிள்ளைக்குப் பெண் கேட்டு உன் அப்பாவிடம் கேட்டிருக்கார். இதில் உன் விருப்பம் என்ன?
சட்டென்று இந்தக் கேள்வி இவ்வளவு சீக்கிரம் எதிர்பாராமல் வந்ததால் அவளால் தன் சம்மதத்தை உடனே சொல்ல முடியவில்லை.
நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீங்க பாட்டி?
தாத்தா, அப்பா, நான் எல்லாருமே நல்ல பையன், பொருத்தமானவன்னு நினைக்கிறோம்.
அம்மா நீங்க என்ன நினைக்கிறீங்க?
அப்பா குறுக்கிட்டார், அவ என்ன நினைக்கப் போறா? எப்பவுமே என் விருப்பம்தான் அவள் விருப்பம்.
உடனே பாட்டி சொன்னாள், அதெப்படிப்பா அப்படி சொல்லுவ? இத்தனை வருஷத்துக்கப்புறமும் சில விஷயங்கள்ல நானும், அப்பாவும் வேற மாதிரி யோசிக்கிறோம். எதுக்கும் லலிதாவையும் கேட்போம்.
லலிதா நீ சொல்லுமா.
சற்று தயக்கத்துடன் லலிதா சொன்னாள், வேற நல்ல இடமா பார்த்துக்கலாமே!
அவளின் வேண்டுகோள் அனைவரையும் திடுக்கிட வைத்தது.
அதிலும் ஜனனி சற்று அதிகமாகவே அதிர்ந்தாள்.
ஏம்மா அப்படி சொல்ற? வேற நல்ல இடமா பார்க்கலாம்தான். ஆனால், ஆகாஷ் வேண்டாம்னு ஏன் நினைக்கிற?
ஏய் என்ன உளர்ற? பேசாமல் இரு என்று சபா எரிச்சலுற்றார்.
ஷ்... சும்மா இரு சபா, லலிதா காரணம் இல்லாம வாயத் திறக்க மாட்டா. ஏன்னு சொல்லுமா.
அத்தை நீங்க சொல்லுங்க, பெத்தவங்க செய்ற பாவ, புண்ணியம் பிள்ளைங்களுக்கு வருமா? வராதா?
கண்டிப்பா வரும். ஏன்னா அப்பா, அம்மாவோட கார், வீடு, சொத்துன்னு எல்லாம் பிள்ளைங்களுக்கு வருதுல்ல, அது மாதிரி பாவ, புண்ணியத்தின் பலன் பிள்ளைகளுக்கு உண்டு.
லலிதா சபாவைப் பார்த்துக் கேட்டாள்.
என்னங்க, நம்ம ஊர்ல கமலியோட மாமா பையன் மகேஷ்னு ஒருத்தர் இருந்தாரே ஞாபகம் இருக்கா?
ம்... இருக்கே. அவர்தான் பாவம், ஹேங் பண்ணிகிட்டு இறந்துட்டாரே? பாவம் அம்மா, அப்பா இல்லாதவர். அதுக்கென்ன இப்போ?
அவர் ஏன் ஹேங் பண்ணிக்கிட்டார்னு தெரியுமா?
தெரியாது.
இந்த கமலியும், மகேஷும் உயிருக்குயிரா விரும்பினாங்க. ஆனா மகேஷுக்கு நல்ல வேலை கிடைக்கல. அந்த நேரத்துலதான் உங்க நண்பர் ஒரு ஃபங்ஷன்ல கமலியைப் பார்த்திருக்கார். பிடிச்சுப் போய் பெண் கேட்டிருக்கார். இவரோட வசதியைப் பார்த்து, பெற்றோரும் ஆசைப்பட, கமலி தன் மனசை மாத்திக்கிட்டாங்க. எங்களுக்கெல்லாம் ஒரே ஷாக். கமலி, தான் ரொம்ப ப்ராக்டிகலானவங்கன்னு சொல்லிக்கிட்டாங்க.
அதுக்கு நாதன் என்ன செய்வார்?
அந்த மகேஷ் நாதனிடம் கெஞ்சியிருக்கார். அப்போ, உங்க நண்பர், முடிஞ்சா கமலியிடம் பேசுன்னுட்டார். மகேஷுக்கு பணபலமோ, மனுஷாள் பலமோ இல்லைங்கறதினால சுலபமா தூக்கி எறிஞ்சிட்டு கமலியை கல்யாணம் பண்ணிக்கிட்டார். இவங்களோட நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மனசு தாங்காமல் மகேஷ் தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டார். அவர் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க கூடாதுதான்… ஆனாலும்…
சில நிமிடங்கள் கனத்த அமைதி.
சபா கேட்டார், சரி, அதுக்கென்ன இப்போ? இத்தனை வருஷமா நாதன் குடும்பத்துல எல்லாரும் சந்தோஷமாத்தானே இருக்காங்க?
ஆமாங்க, ஒரு பாவம் செய்யறபோது யாருமில்லைன்னு நினைச்சு செய்யறதும் அறிவீனம்தான். ஏன்னா, எல்லாத்துக்கும் சாட்சியா கடவுள் இருக்கார். எனக்கென்னவோ பயமாயிருக்கு. இதனால், ஆகாஷுக்கு கஷ்டம் வரும். அதனால், அவன் மனைவிக்கும்தான்.
அனைவரும் குழம்பினார்கள். ஜனனியாலும் இதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியவில்லை. ஆனாலும், இதற்காக மட்டும் ஆகாஷை இழக்கவும் விரும்பவில்லை. ஜனனி பெரியவர்களைப் பார்த்து நிதானமாகப் பேசினாள்.
அப்பா, நம்ம குடும்பத்துல யாரும் மற்றவங்களுக்கு மனசால கூட தீமை செஞ்சதில்ல. ஸோ, நான் நல்லாயிருப்பேன்னு நம்புவோமே. கடவுள் பார்த்துப்பார், ப்ளீஸ் பா என்று செல்ல மகள் கண்களில் கெஞ்சலுடன் பார்க்க லலிதா உட்பட எல்லாரும் உருகி விட்டனர். சிரிப்புடன் சம்மதித்து விட்டனர்.
ஜனனியின் கண்களில் மத்தாப்பூவாய்ச் சந்தோஷம். ஆனால், பெரியவர்கள் கண்களில் மத்தாப்பு பொறி பட்டது போல் உறுத்தல்.
வென்றது காதலா? விதியா? (தொடரும்)
9
சபாபதி பூமிநாதனிடம், ஆகாஷ் ஜனனி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். கமலிக்கும், நாதனுக்கும் மிகவும் மகிழ்ச்சி. மாடியிலிருந்து கீழே வந்த ஆகாஷைப் பார்த்து நாதன் கேட்டார்,
ஆகாஷ் இங்க வா, நானும் அம்மாவும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.
ஒன்றென்ன, ஓராயிரம் சொல்லுங்கப்பா.
நாட்டி பாய்
இந்த ஒண்ணு சொல்லவாப்பா கூப்பிட¢டீங்க?
ஹ, ஹா... ஆகாஷ், உனக்கும் ஜனனிக்கும் அடுத்த மாசம் கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திடலாம்னு பெரியவங்க நினைக்கிறோம். நீ என்ன நினைக்கிற?
என்ன? எனக்கும் ஜனனிக்கும் அடுத்த மாசம் கல்யாணமா?
ஏன் பா?
இதுபத்தி நான் ஜனனி கிட்ட பேசறேன்பா என்றபடி வெளியில் சென்றான்.
ஆகாஷின் பேச்சு அவன் பெற்றோருக்கு ஏமாற்றமாக இருந்தது.
ஆகாஷ் ஜனனியை மொபைலில் கூப்பிட்டான். ஜனனியின் குரல் வழக்கத்தைவிட அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
ஜனனி, அடுத்த மாசம் நம்ம மேரேஜுங்கறாங்க. நீ என்ன சொன்ன?
இந்தக் கேள்வி ஜனனிக்கு சிறு அதிர்ச்சியை அளித்தாலும், சமாளித்துக் கொண்டு, என்ன கேள்வி இது ஆகாஷ்?
ஏன், சிம்பிளான கேள்விதானே?
நீங்க சீரியஸா கேக்கறீங்களா?
அஃப்கோர்ஸ், டெல் மி யுர் ஒபீனியன்.
மனது ஓட்டை விழுந்த பலூன் போல் சுருங்கி விட்டது. பின் அவள் கேட்டாள்,
நீங்க என்ன நினைக்கிறீங்க?
ஹேய், கேள்வி கேட்டா பதில் சொல்லணும். எதிர்க் கேள்வி கேக்கற?
ப்ளீஸ் ஆகாஷ், பதில் சொல்லுங்க.
என்னன்னு சொல்ல? நெக்ஸ்ட் மந்த் மேரேஜுன்னா?
அவளுக்கு ஆற்றாமையும், அழுகையும் வந்தது.
ஆகாஷ் மௌனமாக இருந்தான்.
ப்ளீஸ் ஆகாஷ், ஸே சம்திங்.
ம்... என்று அழகாக விசிலடித்து பாடினான்.
‘சுட்டும் விழி சுடரே சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே’
ஜனனி எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை. ‘ஆகாஷ்’ என்று தன் குரலை உயர்த்தினாள்.
அம்மாடியோவ், பயமாயிருக்கே என்றதைத் தொடர்ந்து
‘’முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே’’ என்று வாய்விட்டு பாடவும் ஜனனி பொறுமையை இழந்தாள். கத்தினாள்.
ஆகாஷ், ப்ளீஸ் என் பொறுமையை சோதிக்காதீங்க.
அதேதான் ஜனனி, ஏன் இந்தப் பெரியவங்க நம்ம பொறுமையை சோதிக்கிறாங்க?
சோதிக்கறது அவங்களா? நீங்களா?
என்ன ஜனனி? மேரேஜ் அடுத்த மாசம்தான்ங்கிறாங்க? என்று ஏக்கத்துடன் சொல்லிவிட்டு,
‘’இப்போதே என்னோடு வந்தாலென்ன?
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன?’’ என்று உணர்ந்து பாடினான்.
ஜனனியின் ஆத்திரம் ஆனந்தமாகவும், அழுகை சிரிப்பாகவும் நொடியில் மாறிவிட்டன.
என்ன ஆகாஷ், எதுலதான் விளையாடறதுன்னு இல்லையா உங்களுக்கு? உயிரே போற மாதிரி ஃபீல் பண்ணேன்.
அச்சச்சோ,
‘உயிரின் உயிரே, உயிரின் உயிரே’ என்று பாட ஆரம்பித்தான்.
ஓ.கே, ஒ.கே, ஒத்துக்கறேன். உங்க உயிரின் உயிர்தான் நான்.
அப்பாடா, என் மகாராணிக்கு கோபம் போயி¢டுச்சு. இப்ப சொல்லு ஜனனி, ஒரு மாசம் கழிச்சா கல்யாணத்தை வச்சுக்கணும்?
பின்ன, ஒரு வாரத்திலயா பண்ண முடியும்?
ஓ, அதுவே லேட்டுங்கறியா, நாளைக்கே பண்ணிக்கலாமா?
ஹேய், எப்பவுமே வேடிக்கை, விளையாட்டுதானா ஆகாஷ்?
விளையாட்டு இல்ல ஜனனி, சீரியஸாகவே சொல்றேன். ஒவ்வொரு நிமிஷமும், ஒரு வருஷம் மாதிரி நகருது. ஸோ, நெக்ஸ்ட் வீக் நம்ம மேரேஜ். ஓ.கே. டார்லிங்?
ஓ.கே. ஆனால் எப்படி?
அதெல்லாம் என் பொறுப்பு. நீ கவலைப்படாத. உன் வேலை என்ன தெரியுமா? கண் முழிச்சுக்கிட்டு இருக்கும்போது கற்பனை பண்ணு. கண் மூடும்போது கனவு காண். ஓ.கே. டியர்?
உத்தரவு அரசே! என்றாள்.
தட்ஸ் குட், மை லவ். எனிதிங் எல்ஸ் டா?
ஐ மிஸ் யூ ஆகாஷ்.
சில விநாடிகள் அமைதி. பின்பு ஐ டூ ஜனனி என்றான். ஓ.கே. நைட் கிளம்பறேன். லெட் அஸ் மீட் டுமாரோ, பை ஜனனி.
பை ஆகாஷ்.
ஜனனியின் மனது சிறகு இல்லாமலே பறந்தது.
சொன்னபடியே ஆகாஷ் ஒரு வாரத்தில் திருமண நாள் குறிக்க இரு பெற்றோர்கள், தாத்தா, பாட்டியின் சம்மதத்தையும் வாங்கி விட்டான்.
இருவர் வீட்டிலும் ஒரே மகன், ஒரே மகள் என்பதால், பெரிய மண்டபம், ரெண்டு நாள் விருந்து, பார்ட்டி, புடவை, நகை, வானவேடிக்கை, சிறப்பான வரவேற்பு, உறவினர்களுக்கெல்லாம் ட்ரெஸ் என்று பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. பணக்காரர்கள் எப்பொழுதும் தன் பிள்ளைகள் மீது இருக்கும் பாசத்தை, பணத்தின் மூலம் ஊருக்கும், உறவுக்கும் அறிவிக்க ஆசைப்படுவார்கள். சபா தம்பதியரும், நாதன் தம்பதியரும் இந்த ஆடம்பர விஷயத்தில் விதிவிலக்கல்ல.
ஆனால், ஆகாஷ், ஜனனி இருவரும் இந்தப் பேச்சில் ஆர்வம் காட்டவில்லை. அதைக் கவனித்த தாத்தா, எல்லாரும் பேச்சை நிறுத்துங்க. கல்யாணம் அவங்களுக்கு. அவங்க வாயே திறக்கலையே. அதோட கண்கள்ல ஒரு சுவாரஸ்யம் கூட காணலையே.
ஏம்மா ஜனனி, ரெண்டு பேரும் என்ன, ஏதோ யோசிச்சுக்கிட்டே இருக்கீங்க? ஏதோ சொல்ல நினைக்கிறீங்க. ஆனால் சொல்ல மாட்டேங்கறீங்க. நம்ம வீட்ல என்ன தயக்கம்? தைரியமா சொல்லுங்க.
ஜனனி ஆகாஷைப் பார்த்தாள்.
ஆகாஷ் பேச ஆரம்பித்தான்.
நா இப்ப எங்க விருப்பத்தை சொன்னவுடனே நீங்கள்லாம் காச், மூச்சுன்னு கத்தக் கூடாது.
பெரியவர்களின் மௌனமும், முகமும் அவர்களின் அதிருப்தியை வெளிக்காட்டியது.
ஆகாஷ் சொன்னான், எங்க கல்யாணம் ஒரு சின்ன கோவில்ல எளிமையா நடக்கணும்னு நாங்க ஆசைப்படறோம்.
இதைக் கேட்டவுடனே தாத்தாவும், பாட்டியும் அமைதியாக இருந்தார்கள். இரு பெற்றோர்களும் கோபமுற்றனர்.
தீயில்லாமலேயே 1000 வாலா வெடித்தது. (தொடரும்)
10
எல்லாரும் சத்தத்தை நிறுத்தறீங்களா? என்று கத்தினாள் பாட்டி.
சட்டென்று பேச்சு நின்றதில், ஹாலில் அசாதாரண அமைதி நிலவியது.
ஜனனிக்கு எங்கோ படித்த வரிகள் நினைவிற்கு வந்தன.
“மக்கள் ஆசைப்படக் கூடாதென்று புத்தர் ஆசைப்பட்டார்”. அதுபோல, இன்று இங்கு பிள்ளைகள் சத்தம் போடக் கூடாதென்று பாட்டி சத்தம் போட்டாள். மனதிற்குள் வந்த சிரிப்பு, உதடுகளில் ஒட்டிக் கொண்டது. கண்களிலும் எட்டிப் பார்த்தது. இந்த சீரியஸான நேரத்திலும் தன் பேத்தி தன் மனதிற்குள் எதையோ ரசித்து சிரிக்கிறாள் என்பதைக் கண்டு கொண்ட தாத்தா பேத்தியை ரசனையுடன் பார்த்தார். பின்பு தன் இடத்திலிருந்து எழுந்து ஆகாஷின் அருகே வந்து, சொல்லு ஆகாஷ், நீயும் ஜனனியும் நல்லா கலந்து பேசி தானே இந்த முடிவுக்கு வந்தீங்க?
ஆமாம் தாத்தா
சரி, இது மட்டும்தானே? வேற ஏதாவது வச்சிருக்கீங்களா?
ஏதோ சொல்ல வாயெடுத்த ஆகாஷ் தன் அம்மா கமலியின் கடுகடுத்த கண்களைக் கண்டவுடன் கப்சிப்பானான். அதைப் பார்த்த ஜனனியின் மனம் துணுக்குற்றது. சில நொடிகளில் திடப்படுத்திக் கொண்டு ஜனனி பேசத் தொடங்கினாள்.
எல்லாரு¢மே எங்க முடிவை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நான் சொல்லி முடிச்சப்புறம் ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்க.
இந்த உலகத்தில எல்லாப் பொருள்களுமே ரெண்டு மாறுபட்ட நிலையில் செயல்படுகின்றன. ஆண், பெண், இரவு, பகல், உள்ளும், வெளியும் இப்படி எல்லாமே ரெண்டு ரெண்டா இருக்கும். நம்ம வாழ்க்கையிலும் பிறப்பு, இறப்பு ரெண்டும் இருக்கு. ஆனால் ரெண்டுக்கும் நடுவுல வாழ்வுங்கற பெரிய அல்லது சிறிய அத்தியாயம் இருக்கு.
அதிலயும் இரண்டு வேறு உலகத்து இயற்கை இருக்குங்கறார் வள்ளுவர். பற்று, துறவு, கஞ்சத்தனம், ஈகை, ஏழ்மை, வளமை, பெறுதல், கொடுத்தல்னு இருக்கு. இந்த குணங்களுள்ள மனுஷாளைதான் நாம தினமும் சந்திச்சுக்கிட்டே இருக்கோம். இதில் இரக்கம், வளம், ஈகை குணங்களை சில பேருக்குத்தான் கடவுள் ஒரு சேரக் கொடுத்திருக்கார்.
இந்த நவீன கால வாழ்க்கையில மக்கள் உண்மையான வேல்யூஸைத் தொலைச்சிட்டு, பணத்தைத் தேடி அலையறாங்க. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை ஒரே நேரத்துல பல வகையில வேஸ்ட் பண்றாங்க. இப்ப நம்மையே எடுத்துப்போமே. இந்த மேரேஜுக்காக எத்தனை வேளை விருந்து, அலங்காரம், மண்டபம்னு பணம், சக்தி, நேரம் எல்லாமே நிறைய வேஸ்ட் ஆகுது.
அப்பா சபா குறுக்கிட்டார், நம்ம கிட்ட பணமா இல்ல? இதைப் பத்தியெல்லாம் நீ ஏன்மா யோசிக்கிற?
நீங்க சொல்றது கரெக்ட்பா. ஆனால், நாம செய்யறதப் பாத்துதான் மிடில் க்ளாஸு மக்களும் ஆசைப்பட்டு, கடன் வாங்கியோ, வீட்டை வித்தோ ஆடம்பரமா கலயாணம் பண்றாங்க.
இப்ப என்னதாம்மா சொல்றீங்க ரெண்டு பேரும்?
கல்யாணத்தை கோவில்ல எளிமையா நடத்திடலாம்ப்பா. ஒரு வாரம் கழித்து ஒரு ஹால் புக் பண்ணி ரிஸப்ஷன் வச்சுக்கலாம்ப்பா.
பூமிநாதன் குறுக்கிட்டார், ஏதோ அதுக்காவது ஒத்துக்கிட்டீங்களே, சந்தோஷம்.
தாத்தா கேட்டார், ஜனனி வேறென்ன சொல்லணும்?
ஜனனியின் தயக்கத்தைப் பார்த்து ஆகாஷ் அடுத்த விஷயத்தை ஆரம்பித்தான்.
ஏன் தாத்தா, கல்யாணத்துக்கு வர்றவங்க நிறைய கிஃப்ட் ப்ரெஸண்ட் பண்றாங்களே, இந்தப் பழக்கம் எதனால வந்தது?
அந்தக் காலத்துல எல்லாம் இப்படி பரிசு எல்லாம் வாங்கிட்டு வரமாட்டங்கப்பா. பணமாத்தான் தருவாங்க.
அது எதுக்கு தாத்தா?
கல்யாண வீட்ல நிறைய செலவு இருக்கும். இந்த மொய்ப் பணம் கொஞ்சம் உதவியா இருக்கட்டுமேன்னு.
கரெக்ட் தாத்தா. நீங்களே சொல்லுங்க, அப்பாவும் சரி, அங்கிளும் சரி நிறைய சம்பாதிக்கிறாங்க. நானும், ஜனனியும் சம்பாதிக்கிறோம். இப்ப நம்ம வீட்டு கல்யாணத்துக்கு மொய்ப்பணம் வந்து ஏதாவது ஆக வேண்டியிருக்கா?
புரியுதுப்பா. அன்பளிப்பு வேணாம்னு சொல்லலாம்ங்கிறியா?
நாம என்னதான் சொன்னாலும் அவங்க கேட்க மாட்டாங்க.
நாங்க வேணாம்னு சொல்லவேயில்லையே.
வேறென்ன செய்யணும்கறீங்க?
தாத்தா, கி¢ஃப்ட்டுக்கு பதிலா பணமா தரச்சொல்லுவோம். அப்புறம்...
சொல்லு.
தாத்தா நமக்கு கல்யாண செலவு 20 லட்சமாவது ஆகுமில்ல. அதை நாம ஆசிரமத்திற்கு டொனேட் பண்ணிடுவோம். அதே மாதிரி நம்ம கல்யாணத்துக்காக செய்யணும்னு நினைக்கிற பணத்தை மூணு ஆசிரமங்கள்ல ஏதாவது ஒரு ஆசிரமத்துக்கு அனுப்பச் சொல்லி முகவரியையும், வேண்டுகோளையும் பத்திரிகையில சேர்த்தே அடிச்சிடுவோம்.
என்னடா புரிஞ்சுதான் பேசறியா? இப்படி ஏதாவது தத்துபித்துன்னு செஞ்சா நம்ம சொந்தக்காரங்க, நண்பர்கள்லாம் என்ன பேசுவாங்க தெரியுமா? கமலி கத்தினாள்.
எதுவும் பேசமாட்டாங்கம்மா. அப்படியே பேசினாலும் நாம கண்டுக்கக் கூடாது. ஏன்னா, இது அறச் சிந்தனை. புதுசா நல்லது செய்யறோம். மத்தவங்களையும் செய்ய வைக்கிறோம்.
பூமிநாதன் ஆகாஷ் அருகில் வந்து தட்டிக் கொடுத்து சூப்பர் ஐடியாடா. ஐ ஃபீல் ப்ரௌட் ஆஃப் யூ என்றார்.
அப்பா, ஐடியா ஜனனியோடது.
அப்படியா? என்றபடியே ஜனனிகிட்ட வந்து, ‘’ஜனனி, உன்ன நெனைச்சா பெருமையா இருக்கும்மா’’ என்றபடியே சபாகிட்ட சொன்னார்.
சபா, பெண்ணை பிரமாதமா வளர்த்திருக்கடா.
சபா, தன் கையை பெற்றோரை நோக்கி நீட்டினார்.
ஓஹோ, வேர் தாத்தா, பாட்டியா? என்றபடியே தாத்தா, பாட்டியைப் பார்த்து சபா கைகூப்பினார். தாத்தா, பாட்டி கண்களில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும்.
சொன்னபடியே ஒரு வாரத்தில் எளிமையாக கடவுள் சன்னிதியில் பெற்றோர், தாத்தா, பாட்டி முன்னிலையில் திருமணம்.
ஆகாஷ், ‘’தாத்தா, பாட்டி உங்களுக்கு லட்சம் நன்றிகள்’’ என்றபடியே, ஜனனியுடன் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.
அன்பளிப்பாக நிறைய பணம் ஆசிரமங்களை அடைந்தது. பத்திரிகையைப் பார்த்து, வெகு சிலரே கேலி பேசினார்கள். பலர், ‘’வட்டியில்லாக் கடன், அவங்க இஷ்டப்படி அனுப்பிட்டுப் போவோமே?’’ என்றார்கள். சிலர் பாராட்டினார்கள்.
ஆகாஷ§ம், ஜனனியும் ஹனிமூன் போய்விட்டு வந்தார்கள். புதுமணப் பூரிப்பு ரெண்டு பேர் முகத்திலேயும் நன்றாகவே தெரிந்தது.
ஒரு வாரத்திற்குப் பின் ஞாயிற்றுக்கிழமை பெரிய ஹாலில் வரவேற்பு சிறப்பாக நடந்தது. ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனை பேரும், சாரதி மேடைக்கு வந்தபொழுது அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அனைவரிடமும் இல்லாத ஒரு ‘கரிஸ்மா’ அவனிடம் இருந்தது. புன்னகைத்தபடியே
‘வாழ்த்துக்கள் ஆகாஷ்’ என்று கைகொடுத்தான். பின்பு கைகுவித்து ஜனனிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தான். கூடவே, ‘மிஸஸ் ஜனனி யூ ஆர் லக்கி டு ஹேவ் ஆகாஷ்’’ என்றான். ஜனனி புன்சிரிப்புடன் ஆமோதித்தாள்.
அப்பொழுது அங்கு வந்த ரோஸி,
‘’எஸ் சார், பட¢ ஆகாஷ் ஈஸ் லக்கியர் டு ஹேவ் ஜனனி’’ என்றாள்.
அனைவரும் சிரித்தனர். வரவேற்பு சிறப்பாக நடந்தது. எல்லாரும் மணமக்களை மனதார வாழ்த்தினார்கள். வந்த விருந்தினர்கள் வீட்டுக்குத் திரும்பும்பொழுது ரிடர்ன் கிஃப்ட் மாதிரி நான்கு பக்கம் கொண்ட கவர் வழங்கப்பட்டது.
சிறிய கவரில் பெரிய உலகம் விரிந்தது. (தொடரும்)
11
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
‘’தாங்கள் அனுப்பியது வெறும் காசோலை அல்ல.
எங்கள் பாலைவனத்தில் நீர் வார்த்த மலர்ச் சோலை’’
அன்புடன் ---அறிவொளி.
“நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா”
- - - பிரியமுடன் ப்ரீத்தி
-
அங்கிள் ஆண்ட்டி நீங்க எனக்கு கண் கொடுத்திருக்கீங்க.
உங்க எல்லாருக்கும் கண் தெரியணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.
- - - அன்புடன் அர்ஜுன்.
“உங்கள் மெய்யான காசோலையால்
எனக்கு பொய்யான கால்கள் கிடைத்தன, -நன்றி”
---- பாபு.
பன்றி: நான் இறந்தப்புறம் நல்ல மாமிசத்தையும், தோலையும் தர்றேன். நீ பால் மட்டும் தர்றே. உன்னைப் பார்த்தா கும்பிடறாங்க. என்னைக் கல்லால அடிக்கிறாங்க, ஏன்?
பசு: நான் வாழும்போதே பயன் தர்றேன். நீ செத்த பிறகுதான் பயன் தர்ற.
அங்கிள், ஆண்ட்டி இது எங்க மிஸ் க்ளாஸ்ல சொன்னாங்க. என் படிப்புக்கு நீங்க உதவி செஞ்சிருக்கீங்க. நான் நல்லா படிப்பேன். எல்லாருக்கும் நல்லதை மட்டுமே செய்வேன். பசு மாதிரி வாழும்போதே உதவி செய்ற உங்களை கைகுவித்து வணங்குகிறேன்.
- - வந்தனா.
அன்புள்ள அம்மா / ஐயா,
தாங்கள் செய்த பண உதவியால் என் கல்லூரிக்கு பணம் செலுத்தி விட்டேன். தாங்களெல்லாம் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள் என்பதை அறிந்தேன். பணக்காரர்கள் என்றாலே பெரிய நட்சத்திர ஓட்டல்களில், கருவி இசையின் இடையில் நடனமாடிக் களிப்பவர்கள், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மட்டற்ற மகிழ்ச்சியோடு சுயநலவாதிகளாக வாழ்பவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
உங்கள் கொண்டாட்டங்களின் உரத்த சத்தத்தில், அநாதைக் குழந்தைகளின் அழுகைக் குரலோ, பாசமற்று தவிக்கும் முதியவர்களின் முனகலோ, ஊனமுற்றவர்களின் ஈனக் குரலோ காதில் விழாது என்று எண்ணியதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
தவறாகக் கருதியதற்கு மன்னிக்கவும். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்.
- - அன்புடன் அரவிந்த் (எம்.காம்.)
உங்கள் உதவிக்கு முன்
பிறை நிலா நான்.
உங்கள் உதவிக்குப் பின்
முழுநிலா நான்.
வாழ்க, வளர்க!
- - மதிவாணன்.
அன்புடையீர்,
அவ்வைக்கு நெல்லிக் கனி கொடுத்தார் அதியமான்
ஆண்டவனுக்கே தானமளித்தார் கர்ணன்
முல்லைக்குத் தேர் கொடுத்தார் பாரி
மயிலுக்குப் போர்வை கொடுத்தார் பேகன்.
இவை புத்தகத்தில் படித்த உதாரணங்கள்.
குஜராத் பூகம்பத்தினால், ஆழிப்பேரலையால், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்கள் கண்ணால் கண்ட உதாரணங்கள். இன்றோ, தங்களின் கருணையால் செய்த பேருதவி எங்கள் வாழ்க்கையில் ஒளியூட்டியது. தங்கள் எதிர்காலம் ஒளி பெறும்.
- - பரத்.
(தொடரும்)
12
திருமண வரவேற்பு முடிந¢து அடுத்த இரண்டு நாட்கள், ஆசிரம வாழ்த்துக்கள் பற்றியும், நன்றிகள் பற்றியும் மொபைல், ஈமெயில், தொலைபேசி, கடிதம் மூலமும் பாராட்டுகள் வந்தபடியே இருந்தன. ஒரு வாரத்தில் தாத்தா வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி, ஆகாஷ§ம், ஜனனியும் தனிக் குடித்தனம் தொடங்கினர்.
ஜனனி,
சொல்லுங்க ஆகாஷ்.
எவ்ளோ பேர் கூப்பிட்டு பாராட்டறாங்க. க்ரேட். ஆல் த க்ரெடிட் கோஸ் டு யூ.
ஆகாஷ் நினைக்கிறது எப்பவுமே ஈஸி, இம்ப்ளிமென்ட் பண்றதுதான் கஷ்டம். ஸோ, எல்லாப் புகழும் உங்களுக்கே என்றபடி காஃபி கொடுத்தாள். தவறி காஃபி கப் கீழே விழுந்து விட்டது. அவன் ட்ரெஸ்ஸிலும் கொஞ்சம் பட்டுவிட்டது.
அச்சச்சோ, சாரி, சாரி, எக்ஸ்ட்ரீம்லி சாரி. ஏதோ கேர்லஸ்ஸா கொடுத்துட்டேன் போல.
இல்ல ஜனனி, நான்தான் பேச்சு சுவாரஸ்யத்தில் சரியாக கப்பை வாங்கல. தப்பு என் மேலதான்.
நோ, நோ... என்று ஜனனி சொல்லும்பொழுதே தாத்தாவும், பாட்டியும் வந்தனர்.
வாங்க தாத்தா, வாங்க பாட்டி.
வர்றோம், வர்றோம். இன்னைக்கு மாதிரி என்னைக்கும் நீங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா வாழணும்.
ஜனனி கேட்டாள், என்ன தாத்தா, ஹஸ்பண்ட் அன் வொய்ஃபை ஃப்ரெண்ட்ஸ் மாதிரி வாழணும்னு வாழ்த்தறீங்க.
ஆமாம்மா, நல்ல தம்பதிகள் நல்ல நண்பர்களா இருப்பாங்க.
புரியலையே தாத்தா.
நல்ல நண்பர்களா இருந்தாங்கன்னா, தப்பு நடந்தா, அதை தன் மேல போட்டுக்குவாங்க. இப்ப நீங்க ரெண்டு பேரும் காஃபி கப் தவறுனது, என் கவனக் குறைவாலதான்னு ரெண்டு பேரும் சொல்றீங்களே.
அதே மாதிரி, சிறப்பா ஏதாவது நடந்தா அது உங்களாலதான்னு கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் காரணமா காட்டிடுவாங்க. அதான், இப்ப ஆஸ்ரமத்துக்கு ஹெல்ப் பண்ணதை மாற்றி, மாற்றி அடுத்தவங்களைப் பாராட்டினீங்களே.
சில வீட்டில அப்படியே தலைகீழா நடக்கும். அங்க அடிக்கடி நாம போர்க்களத்தை பார்க்கலாம். ஆனால், நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடிதான்.
இருவரும் சிறிது வெட்கம் கலந்த சிரிப்பு சிரித்தனர். பின் ஜனனி பாட்டி, தாத்தாவுக்கு காஃபி போட்டுக் கொண்டு வந்தாள். தாத்தா சாப்பிட்டுவிட்டு, ஆஹா... அப்படியே பாட்டி போடற மாதிரி இருக்கு. பேஷ், பேஷ் என்றார். அனைவரும் சிரித்தனர். உடனே தாத்தா, ஜனனி உன் கையைக் காட்டு, ஆகாஷ் எத்தனை மோதிரம் வாங்கிப் போட்டிருக்கார்னு பார்க்கலாம்.
சிரித்துக்கொண்டே ஜனனி கைகளை நீட்டவும், அவள் இடது கையில் ஒரே ஒரு மோதிரம்தான் இருந்தது.
என்னப்பா? என்றார் ஆகாஷைப் பார்த்து.
உங்களுக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா தாத்தா? தாத்தா எவ்வழி, பேரன் அவ்வழி.
ஓஹோ, கெட்டிக்காரப் பிள்ளைப்பா நீ.
தேங்ஸ் தாத்தா.
சரி, வேலையெல்லாம் எப்படி போகுது?
எல்லாம் எக்ஸலென்ட்டா நடக்குது தாத்தா. ஆ... ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே, எங்க எம்.டி. சாரதி சார் எங்களை நாளைக்கு டின்னர்க்கு இன்வைட் பண்ணியிருக்கார் தாத்தா.
சந்தோஷம். போயிட்டு வாங்க.
உனக்கு ஓ.கே.தானே ஜனனி?
ஓ.கே. தான். சார் வீட்ல யார், யாரெல்லாம் இருக்காங்க?
ஏன்?
எல்லார்க்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கிட¢டு போலாம்ல?
ஓ, ஃபைன். சார், மேடம், அவங்க பையன்.
மூணு பேர்தானா?
ஆமாம்.
ட்ரைவர், குக், வீட்டு வேலை செய்யறவங்க யாராவது இருக்காங்களா?
அவங்களுக்கு எதுக்கு ஜனனி?
ஏன்? அவங்களும் மனுஷாள்தானே. அன்பா கொடுத்தா, எவ்ளோ சின்ன பரிசுகூட அவங்களை ரொம்ப சந்தோஷப்படுத்தும்.
ஓ.கே., யூ ஆர் ரைட். ஐ ஃபீல் ப்ரௌட் ஆஃப் யூ மா.
தேங்க் யூ ஆகாஷ், சொல்லுங்க.
ட்ரைவர் சுந்தரம், ஒரு 30 வயசு இருக்கும். அப்பறம் ஹெல்ப்புக்கு லட¢சுமி அம்மா, 45 வயசிருக்கும். தட்ஸ் ஆல்.
சரி, சாரோட பையனுக்கு என்ன வயசிருக்கும்?
ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான். ஆறு வயசிருக்கும்.
ஓ.கே.
ஆ.. இ¢ன்னொரு விஷயம். நாளைக்கு ஈவினிங் 4 மணிக்கு சாரதி சார் நம்ம வீட்டுக்கு வந்து, அவரோட கார்லயே கூட்டிட்டு போறார்.
ஏன் ஆகாஷ், அவருக்கெதுக்கு அநாவசிய சிரமம்?
ஏம்ப்பா, நம்ம காரை எடுத்துட்டு போங்களேன். தாத்தா சொன்னார்.
அது ஒண்ணும் பிரச்னை இல்லை தாத்தா. ஆனா, அவர் வர்றேன்னு சொல்லும்போது என்னால அப்ஜெக்ட் பண்ண முடியல. நாளைக்கு சனிக்கிழமைதானே, லீவ் தான். ஃப்ரீயாதான் இருப்பார்.
ஓ.கே., ஃபைன் என்றாள் ஜனனி.
தாத்தா சொன்னார், ஆகாஷ் நாளைக்கு உங்க எம்.டி. வரும்போது நானும், பாட்டியும் இங்க வரறோம்.
ஏன் என்பது போல் பார்த்தாள் ஜனனி.
நல்லவங்களை பார்க்கறது அபூர்வமா போச்சு இப்பல்லாம். அதுவும் உங்க எம்.டி. மாதிரி அன்பு, அறிவு, பணம் எல்லாம் உள்ள நல்லவங்களைப் பாக்கறது ரொம்பவே அபூர்வமா ஆயிடுச்சு.
ஷ்யூர் தாத்தா. வாங்க, அவரும் ரொம்ப சந்தோஷப்படுவார். என்னமோ தெரியல. அவரைப் பார்க்கும்போது ரொம்ப வருஷம் பழகின மாதிரி ஒரு உணர்வு.
கேட்கவே சந்தோஷமாயிருக்கு. அவருக்கு பக்தியெல்லாம் உண்டா?
பாட்டி கேட்டாள்.
பக்தி, பிரார்த்தனை, தியானம் எல்லாம் உண்டு பாட்டி. சும்மாவா? நான் டெய்லி சாமி கிட்ட கேட்டனா, கொடுத்துட்டார்.
அனைவரும் அதிசயமாய் பார்த்தார்கள்.
ஆகாஷ் சொன்னான், நான் தினமும் சாமியைக் கேட்டேன்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்! (தொடரும்)
13
அடுத்த நாள் மாலை மணி 3.45. பாட்டி, தாத்தா, ஜனனி, ஆகாஷ் அனைவரும் சாரதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். சரியாக 4 மணிக்கு சாரதி வந்தான்.
தன்னையுமறியாமல் அனைவரும் எழுந்து வரவேற்றனர். பார்த்தவுடன் மனதில் மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
சாரதி புன்சிரிப்புடன் கைகளைக் குவித்து வரவேற்பை ஏற்றுக் கொண்டு ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்தான்.
அப்பப்பா, சாரதி சார்,
பார்வையில் கனிவும், உறுதியும்
முகத்தில் புன்சிரிப்பும், தேஜஸ்ஸும்.
குவித்த கைகளை பிரிக்காமல் சாரதியை பிரமிப்புடன் பார்த்தாள் ஜனனி. சில வினாடிகளுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு வந்த அவள் ஆகாஷ் அடிக்கொரு தரம் சாரதி சாரைப் பற்றி பெருமையாகப் பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று நினைத்தாள்.
சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பேசினார்கள். திடீரென்று பாட்டி சொன்னாள், ‘சரி எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க’
ஏன் சிவகாமி, என்ன ஆச்சு? தாத்தா கேட்டார்.
சாரதி தம்பி ஏதோ முக்கியமான விஷயத்தை சொல்லணும்னு வந்திருக்க மாதிரி தோணுது, நான் சொல்றது சரிதானேப்பா?
சாரதி பாட்டியின் அனுபவ அறிவில் அசந்து போனான். பின் அமைதியாக ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.
சில நொடிகள் கனத்த அமைதி.
ஆகாஷ் சொன்னான், சார், எதாயிருந்தாலும் சொல்லுங்க. ஏதாவது பிரச்சனையா? கே¢ன் வி டு எனிதிங் டு யூ சார்? ப்ளீஸ் கம் அவுட்.
சாரதி சிநேகத்துடன் ஆகாஷ் அருகில் நெருங்கி உட்கார்ந்தான். பின் தொடங்கினான்.
ஆகாஷ் எனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு. டாக்டர்ஸ் என் மனைவி மஞ்சுளா தாயாக முடியாதுன்னுட்டாங்க. ஸோ, மஞ்சு ரொம்பவே அப்ஸெட். நாங்க ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணோம். கருணை இல்லத்துக்குப் போய் நிறைய குழந்தைகளைப் பார்த்தோம். அத்தனை குழந்தைகளிலும், அமைதியாக, அழகாக பெய்¢ண்ட் பண்ணிக்கிட்டிருந்தான் ஸ்ரீ. கண்கள் துறுதுறுவென இருந்தன. ஒரு கன்னத்தில் அழகான குழி, சுருள் முடி, அழகு சிரிப்பு. நாங்க ரெண்டு பேரும் எங்களை மறந்து போனோம். நேரா சிஸ்டர்கிட்ட போய் இந்தக் குழந்தையை எடுத்துக்கறோம்னு சொன்னோம். அப்பதான் எங்களுக்கு ஒரு ஷாக்.
‘வாட் ஹேப்பண்ட் சார்?’ ஆகாஷ் கேட்டான்.
சிஸ்டர் சொன்னாங்க, ஸ்ரீ அந்த கருணை இல்லத்துக்கு வந்து ரெண்டு வருஷம்தான் ஆச்சாம். நல்லா அறிவா, அழகா பேசிக்கிட்டிருந்த குழந்தையாம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால அவனோட அம்மா, அப்பாவை ஒரு விபத்துல ஸ்ரீ பறிகொடுத்துட்டானாம். விபத்தை நேர்ல பார்த்த அதிர்ச்சியில பேசும் சக்தியை இழந்துட்டானாம்.
ஏற்கெனவே குழந்தை பிறக்காதுங்கறது எங்களுக்கு இடி மாதிரி இருந்தது. ஸ்ரீயால பேச முடியாதுங்கறது பேரிடியா இருந்தது. ஆனால், எங்களுக்கு அவனை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதோட, ஏதோ ஒரு வயசுல சர்ஜரி மூலமா அவன் பேச வாய்ப்பு இருக்குன்னு டாக்டர்ஸ் சொன்னாங்களாம். ஒவ்வொருத்தர் கிட்ட ஒரு குறை. ஸோ, நாங்க சந்தோஷமா ஸ்ரீயையே தத்து எடுத்துகிட்டோம். நம் வீட்டுக்கு வந்து ஆறு மாசம்தான் ஆகுது. ஓரளவுக்கு எங்க கிட்ட ஒட்டிக்கிட்டான். பேசதான் முடியாதே தவிர காது கேட்கும், நிறைய மியூஸிக் கேட்பான், வயலின் வாசிப்பான், பெயிண்ட் பண்ணுவான். ஒரே ஒரு விஷயத்துல டிஸ்டர்ப் ஆயிடறான்.
எதுலப்பா? தாத்தா கேட்டார்.
அவனைப் பார்த்து யாரும் பரிதாபப்பட்டா புரிஞ்சுக்கறான். அவங்ககிட்டர்ந்து ஒதுங்கிடறான்.
‘ஓ’ என்றான் ஆகாஷ்.
ஸோ, நீங்க ரெண்டு பேரும் எங்க வீட¢டுக்கு வரும்போது அவனை ஒரு நார்மல் குழந்தையா ட்ரீட் பண்ணீங்கன்னா, அவன் ஈஸியா ஃபீல் பண்ணுவான். உங்கள மாதிரி நல்லவங்களோட அவன் பழகணும்னு நானும், மஞ்சுவும் ஆசைப்படறோம்.
ஜனனி எழுந்து சாரதியிடம் சொன்னாள், கவலைப்படாதீங்க சார். என் பி¢.ஹெச்.டியே குழந்தைகள் மன உளவியல் பற்றிதான். அவனுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன். உங்கள மாதிரி பெரிய மனசு எத்தனை பேருக்கு வரும்? நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னா, நான¢ ஸ்ரீயை அவுட்டிங்லாம் கூட்டிட்டுப் போறேன் சார்.
ஜனனியின் குரலில் அக்கறை இருந்தது. கண்களில் கனிவு தெரிந்தது. வார்த்தைகளில் வாஞ்சை இருந்தது.
சந்தோஷத்தில் வார்த்தைகள் வர மறுத்தன சாரதிக்கு.
என்ன சார்?
தேங்ஸ் மிஸஸ் ஜனனி என்று கண்கலங்கினார் சாரதி.
சார், கம் ஆன், கூல். ஜனனி, சாருக்கு டீ கொண்டு வா என்று சகஜ நிலைக்கு சூழ்நிலையை மாற்றினான் ஆகாஷ்.
சாரதி ஆகாஷ¤ன் கைகளைப் பிடித்தான். ஆகாஷும் தன் பிடியை இறுக்கி, தன் அன்பையும் ஆதரவையும் சாரதிக்கு உணர்த்தினான்.
அப்பொழுது பாட்டி, தோ பாருங்க தம்பி, உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும். கடவுள் அருளால ஒருநாள் பிள்ளை உங்களை அப்பான்னு கூப்பிடப்போறான் பாருங்களேன். இவ்வளவு புத்திசாலியா இருக்கிற பிள்ளை, வாய் திறந்தவுடன் திருஞான சம்பந்தராட்டம் அருவியாய்ப் பொழிவான் பாருங்க என்றாள்.
சாரதி பாட்டியிடம் சொன்னான், சாட்சாத் அந்த அம்பாளே நேர்ல வந்து சொல்ற மாதிரி இருக்கு பாட்டி. உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்தால குழந்தைக்கு நல்லதே நடக்கும்னு தோணுது.
ரொம்ப சரி, சந்தோஷம்ப்பா. மணி 4.30 ஆயிடுச்சு. கிளம்புங்க.
ஹேவ் அ நைஸ் டைம் என்றார் தாத்தா.
நீங்களும் முடிஞ்சப்ப அவசியம் வீட்டுக்கு வரணும் தாத்தா.
கண்டிப்பா வர்றோம்னார் தாத்தா.
கையசைத்தவாறே காரைக் கிளப்பினான் சாரதி.
பாட்டி, தாத்தாவிடம் சொன்னாள், சாரதி, மஞ்சு மாதிரி நல்லவங்க இருக்கிற வரைக்கும் நாட்டுல மழை பெய்யும்.
காரில் ஆகாஷிடம் சாரதி சொன்னான், உங்கள மாதிரியெல்லாம் நல்லவங்க வாழற வரைக்கும் தண்ணிப் பஞ்சம் வராது.
அந்த நேரம் பார்த்து சிறு தூறல் போட்டது.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை. (தொடரும்)
14
கார் சாரதியின் வீட்டை அடைந்தது. வீட்டைச் சுற்றியும் மிக அழகான பூச்செடிகளும், மரங்களும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. வெளியில் போர்ட்டிகோவை அடுத்து, சிறிய சிட்அவுட், உள்ளே ஒரு ஹால், டைனிங் ஹால், இரண்¢டு பெட் ரூம்ஸ், பூஜை ரூம், கிச்சன், மாடியில் ஒரு ஸ்டடி ரூம், பெட்ரூம் அன் டெரஸ்ஸிங் ரூம் அவ்வளவுதான். பெரிய கம்பெனியின் எம்.டி.யின் வீடுபோல் ஆடம்பரமில்லாமல், எளிமையாக இருந்தது. ஹால் சுவரில் ஒரே ஒரு படம்தான் இருந்தது.
படத்தில் நல்லதையே நினைப்போம், நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம், நல்லது தானாகவே வரும்.
இதைப் பார்த்தவுடன் ஜனனிக்கு விவரிக்க முடியாத உணர்வு ஏற்பட்டது.
சாரதி, ஜனனியையும், ஆகாஷையும் ஹாலில் உட்காரச் சொல்லி தானும் அமர்ந்தான். கதவைத் திறந்த லட்சுமி அம்மாவிடம்
மஞ்சு எங்கே? என்றான்.
பூஜை ரூம்ல இருக்காங்க, தோ வந்துடுவாங்க.
ஓ.கே. என்று சொல்லும்போதே ‘ஸ்ரீ’ இவங்க ஆகாஷ் அங்கிள், நம்ம கம்பெனியில என்னோட வொர்க் பண்றாங்க. அவங்க, அங்கிளோட வைஃப் ஜனனி ஆன்ட்டி, ஸ்ரீ வெட்கத்துடன் சிரித்தான்.
உடனே ஜனனி, ஹாய் ஸ்ரீ எங்கே உன் பெயிண்டிங்ஸைக் காட்டு பார்க்கலாம் என்றாள்.
கண்கள் பளிச்சிட ஸ்ரீ அருகில் வந்தான்.
ஜனனி சோபாவில் தன் பக்கத்தில் ஸ்ரீயை உட்கார வைத்தாள். இயல்பாக அவன் மேல் கையைப் போட்டுக் கொண்டு ட்ராயிங் புக்கை திறந்தாள்.
வாவ், அழகா பெயிண்ட் பண்ணியிருக்கியே, ப்யூட்டிஃபுல்.
ஸ்ரீ முகத்தில் சந்தோஷம்.
ஆஹா, பூ, கார்ட்டூன், வன்னத்துப்பூச்சி… சூப்பர். ஆமாம், உனக்கு இந்த மூணு வன்னத்துப்பூச்சியில எது ரொம்ப பிடிக்கும்?
ஸ்ரீ ஆரஞ்சில் ப்ளாக் டாட்ஸ் போட்டதை விரலால் காட்டவும், ஹை, எனக்குக் கூட அதான் ரொம்பப் பிடிக்கும். கை கொடு என்று கை நீட்டினாள். அவனும் சந்தோஷமாக கை கொடுத்தான். இப்படியே ஜனனி அந்தப் படங்களை ஒட்டிய கதைகளை முக பாவங்களோடு, சுவாரஸ்யமாகச் சொன்னாள். கால் மணி நேரத்தில் ஸ்ரீயும், ஜனனியும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள்.
அப்பொழுது அங்கு வந்த மஞ்சு, வாங்க வாங்க என்று புன்சிரி¢ப்புடன் அழைத்தாள்.
மஞ்சுவின் முகத்தில் அமைதியும், அழகும் தெரிந்தன. சிறிது நேரம் ஸ்போர்ட்ஸ், சினிமா, சமுதாயம் என்று பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஜனனி ஸ்ரீயுடன் நிறையவும், பெரியவர்களுடன் கொஞ்சமாகவும் பேசிக் கொண்டிருந்தாள்.
ஜனனி திடீரென்று ஞாபகம் வந்தவளாக சாரதி, மஞ்சு பக்கம் திரும்பி, நாம எல்லோரும் இப்ப ஸ்ரீயோட வயலின் இசையை என்ஜாய் பண்ணப் போறோம். ப்ளீஸ் மேடம், ஸ்ரீயோட வயலினை எடுத்துட்டு வாங்களேன்.
ஜனனி கேட¢டு முடிக்குமுன் லட்சுமி அம்மா வயலினைக் கொடுத்தார்கள். ஸ்ரீ தன் வயலின் நோட்டை எடுத்து வந்தான். சில பாட்டுகளுக்கு அதில் நோட்ஸ் இருந்தது. ஸ்ரீயுடன் ஜனனியும் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
ம்... வாசி என்றாள் ஜனனி.
‘’சொல்ல சொல்ல இனிக்குதடா -- முருகா,
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா‘’
அவ்வளவு அட்சர சுத்தமாக, அழகாக வாசித்தான் ஸ்ரீ. அனைவரும் மெய் மறந்தனர். பின் பலமாக கைதட்டினார்கள். ஜனனி ஸ்ரீயின் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தாள். அப்பொழுது ஆகாஷ் அருகில் வந்து தான் வாங்கி வந்த கீ போர்டை ஸ்ரீக்குத் தந்தான். ஸ்ரீ கண்கள் விரிய வாங்கிக் கொண்டு ஆகாஷின் கையைப் பிடித்துக் கொண்டான். பிறகு ஆகாஷ், சாரதிக்கும், சுந்தரத்திற்கும் பரிசுகளைக் கொடுத்தான். ஜனனி, மஞ்சுவிற்கும், லட்சுமி அம்மாவிற்கும் கொடுத்தாள். லட்சுமி அம்மா நன்றியைப் பார்வையில் காட்டி வாங்கிக் கொண்டார்கள்.
சுந்தரம் வெட்கப்பட்டுக் கொண்டே ‘எனக்கெல்லாம் எதுக்கு சார்?’ எனற£ன்.
ஜனனி கேட்டாள்,
‘என்ன சுந்தரம், எனக்கெல்லாம் எதுக்குன்னு சாதாரணமா கேட்டுட்டீங்க. நீங்க சாரதி சாருக்கே சாரதியாச்சே?’ என்றாள். சுந்தரம் புரியாமல் விழித்தான். சாரதியே விளக்கம் தரவும் சுந்தரத்துக்கு பெருமை பிடிபடவில்லை. சிரித்துக் கொண்டே ‘தேங்ஸ் சார், தேங்ஸ் மேடம்‘ என்றான் சுந்தரம்.
பிறகு ஜனனியும் சமையலறைக்குள் நுழைந்தபடியே மஞ்சுவிடம் கேட்டாள், ஏதாவது வேலை இருக்கா?
ஒண்ணும் வேலையில்லைங்க, அல்மோஸ்ட் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டோம். அதோட லட்சுமி அம்மா எல்லாத்தையும் ஃபாஸ்டாவும், டேஸ்டாவும் செஞ்சிடுவாங்க. அப்படி ஒரு கைப்பக்குவம் அவங்களுக்கு.
ஓகே மேம். அப்ப நான் ஸ்ரீயோட விளையாடறேன் என்றபடியே ஹாலுக்குப் போனாள். ஜனனி ஸ்ரீயுடன் சில விளையாட்டுகள் விளையாடினாள். விளையாட்டில் சில சமயம் அவள் ஜெயித்தாள். பலமுறை ஸ்ரீயை ஜெயிக்க வைத்து கை தட்டினாள். ஸ்ரீ சந்தோஷத்தில் குதித்தான்.
நைட் 8 மணிக்கு எதை எதையோ பேசியபடியே சாப்பிட்டார்கள்.
திடீர்னு ஜனனி சாரதியைப் பார்த்துப் பேசினாள்,
சார் நீங்க தினமும் உங்ககிட்ட வேலை பாக்கற ஒரு எம்¢ப்ளாயீயோட சேர்ந்து லஞ்ச் சாப்பிடுவீங்களாமே? ப்ரில்லியண்ட் ஐடியா சார். ஹெள க்ரேட் யூ ஆர்! என்று பாராட¢டினாள்.
சாரதி ஒரு சின்ன புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான். 9 மணிக்கு ஜனனியும் ஆகாஷும் கிளம்பினார்கள்.
சுந்தரம், சாரையும், மேடத்தையும் ட்ராப் பண்ணிட்டு வந்துடுங்க என்றான் சாரதி.
சரிங்க சார்.
மஞ்சு, ஜனனியின் கைகளைப் பிடித்துச் சொன்னாள், வீடு கலகலன்னு இருந்துச்சு மிஸஸ் ஜனனி.
மேடம், இந்த மிஸஸ் எல்லாம் வேணாம். சும்மா ஜனனின்னே கூப்பிடுங்க.
ஓகே ஜனனி, அப்பப்ப வாங்க. ஸ்ரீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்ல. தேங்ஸ் மா.
நான்தான் தேங்ஸ் சொல்லணும். இந்த லிட்டில் ப்ரின்ஸை என்னோட விளையாட விட்டதுக்கு, இல்லையாடா கண்ணா? என்றபடியே குனிந்து ஸ்ரீக்கு கிஸ் பண்ணிவிட்டு பை சொன்னாள். ஆகாஷும், ஜனனியும் கிளம்பி விட்டார்கள்.
கார் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்து விடு மஞ்சு, சாரதி, ஸ்ரீ உள்ளே திரும்பினர்.
லட்சுமி அம்மா சொன்னார்கள், என்ன ஒரு ஜோடி பொருத்தம்! இல்லம்மா? அப்பா, கண்ணே பட்டுடும் போல இருக்கு!
மஞ்சுவும் சிரித்தபடியே அக்கருத்தை ஆமோதித்தாள். சாரதி கேட்டான், அவங்க பாட்டிகிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போடச் சொல்லுவோமா அம்மா?
சொல்லுங்க தம்பி.
பெரியவர்கள் தன் சந்தோஷத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டனர். ஆனால், ஸ்ரீ?
ஜனனி பலமுறை முத்தமிட்ட தன் கன்னங்களைத் தொட்டுப் பார்த்தான். பின்பு மெதுவாக குனிந்து கீ போர்டுக்கு மென்மையாக முத்தம் கொடுத்தான்.
மௌனம் ஓசையல்ல! இசை! (தொடரும்)
15
இரவு வீட்டுக்குப் போய் ஜனனியும், ஆகாஷும் சாரதி, மஞ்சு பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தனர். அதேபோல மஞ்சு சாரதியிடம் ஆகாஷ், ஜனனி பற்றி பெருமையாகப் பேசினாள்.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் இரவு ஆகாஷ் கேட்டான்.
ஏன் ஜனனி உனக்கு என்.வி. சமைக்கத் தெரியாதா?
வாட்? சிறிது அதிர்ந்தாள் ஜனனி.
ஆகாஷ் நீங்க என்.வி. சாப்பிடுவீங்களா?
எஸ், வாட்ஸ் ராங் இன் தட்?
ஜனனி பதில் சொல்லாமல் திணறினாள். அவளால் ஆகாஷ் என்.வி. சாப்பிடுவான் என்ற உண்மையை டைஜஸ்ட் பண்ண முடியவில்லை. ஆனால், அது வேண்டாம் என்ற தன் கருத்தை அவன் மேல் திணிக்கவும் அவள் விரும்பவில்லை. ஒன்றுமே சொல்லாமல் அமைதியாகி விட்டாள்.
ஆகாஷ் சொன்னான், ஹேய் ஜனனி, தெரியாதுன்னா பரவால்ல. கவலைப்படாதே, நான் ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டுக்கறேன்.
ம்... என்றாள்.
படுத்தவுடன் ஆகாஷ் தூங்கி விட்டான். ஆனால், ஜனனிக்குள் ஒரு ஏமாற்றம். எதையோ யோசித்தபடி புரண்டு புரண்டு படுத்தாள். தன்னையும் மீறி களைப்பாகி 2 மணி அளவில் தூங்கினாள். மறுநாள் விழித்தபொழுது சகஜமாகி விட்டாள்.
பின் இரண்டு மாதங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றது. சாரதி, ஆகாஷ் இருவரின் குடும்ப நட்பு ஆழமாகியது.
ஒருநாள் ஆகாஷ் சொன்னான், ஜனனி, இன்னைக்கு நைட் டின்னருக்கு வரமாட்டேன். ஆபீஸ்ல பார்ட்டி, ஃபாரின் க்ளையன்ட்ஸ் வர்றாங்க.
ஓகே ஆகாஷ்.
இரவு 10 மணிக்கு கதவு மணி அடித்தது. ஜனனி சாவி துவாரம் வழியே பார்த்தாள். சாரதியைப் பார்த்து ஒன்றும் புரியாமல் கதவைத் திறந்தாள். ஆகாஷ் மயங்கிய நிலையில் சாரதியின் தோளில் சாய்ந்திருந்தான். ஜனனி பதறி விட்டாள்.
என்னாச்சு சார்? என்றாள்.
நத்திங் டு வொர்ரி மிஸஸ் ஜனனி, கொஞ்சம் அதிகமா ட்ரிங்ஸ் சாப்பிட்டுட்டார். ஹி வில் பி ஆல்ரைட் டுமாரோ.
சார்! அதிர்ச்சியில் ஜனனியின் முகம் வெளிறியது. கண்களில் சொல்ல முடியாத தவிப்பும் ஏமாற்றமும் தெரிந்தது. சாரதி அதைக் கண்டும் காணாதது போல் ஆகாஷை சோபாவில் படுக்க வைத்துவிட்டு ”ப்ளீஸ் மிஸஸ் ஜனனி கவலைப்படாதீங்க. டேக் கேர்” என்று சொல்லிவிட்டு திரும்பினான். காரில் ஏறி மீண்டும் கேட்டருகே நின்ற ஜனனியைப் பார்த்தான். அவன் கண்களில் இருந்த கனிவு ஜனனியின் மனதில் இருந்த வலிக்கு மருந்தாக இருந்தது.
ஜனனி மனசு பொறுக்காமல் தாத்தாவிற்கு ஃபோன் செய்து எதையோ பேசினாள்.
தாத்தா கேட்டார், ஜனனி நீ எதுக்காக இப்ப ஃபோன் பண்ண? எதையோ மறைக்கிற? கம் அவுட். எதையுமே ஷேர் பண்ணிக்கிட்டா, கஷ்டம் பாதியாயிடும்.
ஜனனி மெல்ல, ஆகாஷ் ட்ரிங்ஸ் சாப்பிட்டு மயங்கியிருப்பதையும், சாரதி கொண்டு வந்து விட்டுச் சென்றார் என்றும் சொன்னாள்.
தாத்தா சில நொடிகள் அமைதியாக இருந்தார். பின் சொன்னார், ஜனனி, இதெல்லாம் இந்தக் காலத்துல சகஜமாயிடுச்சும்மா.
சகஜமானதால ஒரு தப்பு சரியாயிடுமா தாத்தா?
ஆகாதுதான். ஆனால் இப்ப என்னம்மா பண்ண முடியும்?
அவசரப்பட்டுட்டமா தாத்தா?
என்னம்மா இப்படியெல்லாம் யோசிக்கிற? ஆகாஷ் எவ்வளவு கெட்டிக்காரப் பிள்ளை. ரெண்டு நாளுக்கப்புறம் பொறுமையா பேசு. சரியாயிடும்.
ஓகே தாத்தா.
கவலையை கடவுள் திருவடிகள்ல போட்டுட்டு, போய் தூங்கும்மா.
சரி தாத்தா, குட்நைட்.
குட் நைட் மா.
அன்று இரவு ஜனனிக்கு சிவராத்திரியானது.
மறுநாள் மாலை இதுபற்றி ஜனனி ஆகாஷிடம் கேட்டபோது, இதெல்லாம் இந்த மாடர்ன்¢ வோர்ல்ட்ல அன்அவாய்டபிள். ஸோ, இது பத்தி நாம பேச வேணாம். ஓகே டார்லிங் என்று ஜனனியின் கன்னத்தைத் தட்டிவிட்டு சென்றான்.
ஜனனிக்குப் புரிந்தது. இது சரி செய்ய முடியாத பிரச்சனை.ஆகாஷை குறை, நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளத் தயாரானாள்.
தாத்தாவும், தன் பேத்தி பிரச்னையை இயல்பாக ஏற்றுக் கொண்டதைப் பார்த்து சமாதானமானார். வாழ்க்கை சாதாரணமாகச் சென்றது.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மஞ்சு, ஜனனிக்கு ஃபோன் பண்ணினாள்.
ஜனனி, ஆகாஷ் இருக்காரா?
எஸ் மேடம்.
ஜனனி, சாரதி இன்னைக்கு ஈவினிங் ஃப்ளைட்லதான் சென்னை வர்றார். பட் ஸ்கூல்லேர்ந்து ஃபோன் வந்திருக்கு. ஸ்ரீக்கு திடீர்னு ஹை ஃபீவராம். சுந்தரம் வேற இன்னும் வரல. எனக்கு தனியா போக பதட்டமா இருக்கு. ஆகாஷால ஹெல்ப் பண்ண முடியுமா ஜனனி?
என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க, இப்பவே ஆகாஷ் வந்து உங்கள ஸ்ரீயோட ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போவார்.
ஓகே ஜனனி, ரொம்ப தேங்ஸ்.
நமக்குள்ள எதுக்கு மேடம் தேங்ஸெல்லாம்?
‘’ஓகே ஐ ஆம் வெயிட்டிங் ஃபார் ஆகாஷ்’’ ஃபோனை வைத்தாள் மஞ்சு.
ஜனனி விவரத்தைச் சொல்லி ஆகாஷை அனுப்பி வைத்தாள். ஆகாஷ், தாத்தாவின் காரில் மின்னல் வேகத்தில் பறந்தான்.
ஜனனி நினைத்துக் கொண்டாள், எதிலும் வேகம்தான் ஆகாஷுக்கு. அவன் சிரிப்பு, பேச்சு, நடை, செயல் எல்லாம் மின்னல் மாதிரி.
ஒரு மணி நேரத்தில் ஒரு ஃபோன் கால். சுந்தரம் பேசினார். அம்மா... அழுதார்.
என்ன ஆச்சு சுந்தரம்? ஜனனியின் குரல் நடுங்கியது.
அம்மா ஸ்ரீயோட ஸ்கூலுக்குப் போற வழியிலேயே கார் ஆக்ஸிடெண்ட்ல மஞ்சு அம்மா ஸ்பாட்லயே போயிட்டாங்கம்மா. ஆகாஷ் சாரை பக்கத்துல இருக்கிற ஜி.ஹெச்ல சேர்த்திருக்கோம்மா என்று திணறியபடியே சொல்லி முடித்தான் சுந்தரம்.
ஜனனிக்கு சிறிது நேரம் உலகமே வேகமாக சுற்றியது போல் தோன்றியது. பின் உலகமே நின்று போனது போல் தோன்றியது. பின்பு தன்னைச் சுதாரித்துக் கொண்டு, தொலைபேசியில் தாத்தாவிற்கு விவரம் கூறினாள். தாத்தா ஐயோ என்படியே தலையில் அடித்துக் கொண்டார்.
தொடர்ந்து சில மணி நேரங்கள் அழுகை, தவிப்பு, அலறல், புலம்பல்...
மாலை ஆறு மணி. மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் ஆகாஷ் நிறைய கட்டுகளுடன். சுற்றிலும் ஜனனி, ஆகாஷ் இருவரின் பெற்றோர்கள். தாத்தா, பாட்டி, மனைவியை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி விட்டு காத்திருக்கும் சாரதியும், அவன் கையில் ஸ்ரீயும்.
நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன. ஆகாஷ் கண் விழித்தான். ஜனனியின் கண்களில் ஆயிரம் பூக்கள் பூத்தது போல மலர்ச்சி. அருகே போய் ஆகாஷைத் தொட்டாள். ஆகாஷ் சைகையினால் சாரதியைக் கூப்பிட்டான்.
மன்னிச்சிடுங்க சார், என் மேல தப்பில்ல. லாரிக்காரன்தான் என்று திணறினான்.
ப்ளீஸ் ஆகாஷ், காம். அவள் விதி முடிஞ்சிடுச்சி. நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க.
இல்ல சார், நான் பிழைப்பேன்னு...
ஜனனி குமுறி அழுதாள்.
ஆகாஷ் மெல்லிய குரலில் ”சார், ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஜனனி, ஷீ வில் டேக் கேர் ஆஃப் ஸ்ரீ’’.
சாரதியும், ஜனனியும் ஸ்தம்பித்துப் போனார்கள்.
ஆகாஷ் தாத்தாவை அருகில் அழைத்து கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான்,
ப்ளீஸ் தாத்தா, பாவம் ஜனனியும், சாரதியும். அதைவிட ரொம்ப பாவம் ஸ்ரீ. அவங்கள சேர்த்து வச்சீங்கன்னா... கோடி நன்றிகள்.
ஆகாஷின் ஆத்மா ஆகாயத்தை நோக்கிப் பறந்தது.
தாத்தாவின் மனதில் ஆகாஷ் விஸ்வரூபம் எடுத்தான்... (தொடரும்)
அன்புடையீர்,
Comments ஐத் தொடர்ந்து, கீழே உள்ள இனிது இனிது கதையின் இரண்டாம் பாதியை வாசிக்கவும்...
Super!! Expecting next!!!
ReplyDeleteSuper. I am waiting for coming Friday. Nice.
ReplyDeleteஅருமை ..பயணம் தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteInteresting! People introduced 'Jananin parvail'.Await next friday!
ReplyDeleteSuper mam next......
ReplyDeleteI think janani is the main role of this story....your expectations of doing psychology is satisfied by her
Excellent beginning! Eagerly awaiting!!
ReplyDeleteAwesome... Awaiting for next
ReplyDeletesupper
ReplyDeleteகருத்துக்களைப் பகிர்ந்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteGood start. First heroine intro. Waited few minutes to know her age. Then her character. Friends intro. Their background. Janani's maturity. Hero introduction la Interval blocku. Andha pookka kadai couples along with names dhaan idikkudhu. Guess there should be some connect with them in later stage of the story.
ReplyDeleteஅருமையான ஆரம்பம் அக்கா. மிக நன்றாக இருக்கிறது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood start. Go ahead. Eager to read the next episode. LikeTV serial dont murder /change the /hero /heroine if ur dream characters are not upto ur expectation.��
ReplyDeleteGood start.interesting to read with more expectations.
ReplyDelete