இனிதினும் இனிது…
தமிழ் மொழியில் சிறந்த கதைகளை தொடர்ந்து ரசித்தும், ருசித்தும் வந்ததால் என்னுள் உதித்த கற்பனையில், அனுபவத்தில் கண்ட காட்சிகளையும் கருத்துகளையும் கொண்டு பிறந்த என் முதல் புதினம் தங்கள் பார்வைக்கு... ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்... இனிதினும் இனிது… 1 காலை மணி 7. ஜனனி பெசன்ட் நகர் பீச் ஸ்டாப்பில் இறங்கினாள் . சாலை ஓரத்தில் நின்றபடியே கடலைக் கண்டாள் . ஆர்ப்பரிக்கும் அலைகள் மனதிற்கு உற்சாகத்தைத் தந்தன . ஜனனி முகத்தில் குதூகலத்துடன் கடலை ரசித்தாள் . சட்டென அவள் முகம் சுருங்கியது . இன்னும் சூரியனைக் காணோமே ? அப்பொழுது அவள் மனதுள் துள்ளல் . மெலிதாக தன் இனிய குரலில் பாரதியின் பாடலைப் பாடினாள் . வேதம் பாடிய சோதியைக் கண்டு வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன் ; நாத வார்கட லின்னொலி யோடு நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன் ; காத மாயிரம் ஓர்கணத் துள்ளே கடுகியோடும் கதிரினம் பாடி ஆத வா ! நினை வாழ்த்திட வந்தேன் அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே . ஆதவனை அழைக்கும் பூபாளத்தைப்பாடி முடித்தவுடன் , அவள் ...