Posts

inidhu inidhu - 2nd half

16 இரண்டு சந்தோஷம் நிறைந்த வீடுகள் துக்க வீடுகளாக மாறிப் போயின. சாரதி வீட்டில் சாரதியின் அப்பா மிகவும் உடைந்து போனார். மஞ்சுவிற்கு அம்மா, அப்பா இல்லை. ஸோ, தூர சொந்தங்கள் வந்துவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால், கம்பெனி ஸ்டாஃப் கூட்டம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு உயர்ந்த மனிதனுக்கு இவ்வளவு சோதனைகளா என்று கம்பெனி ஊழியர்கள் அங்கலாய்த்தார்கள். சாரதி, மூன்றாம் நாளே மஞ்சுவின் காரியத்தை முடித்துவிட்டதால் உறவினர்கள் கிளம்பி விட்டார்கள். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. லட்சுமி அம்மா ஸ்ரீயைப் பார்த்துக்கொண்டார்கள். சாரதியின் அப்பா பெரிய கைதேர்ந்த டாக்டர். தன் சொந்த ஊரில் பெரிய ஹாஸ்பிடல் நடத்தி வருபவர். தன் தொழலில் எவ்வளவோ இறப்புகளை சந்தித்திருந்தாலும் மருமகளின் இழப்பு அவர் மனதைப் பாதித்தது. சாரதி, ஸ்ரீயின் எதிர்காலம் அவர் மனதில் பெரிய கவலைக்குரிய கேள்விக்குறியாய் உருவெடுத்தது. ஆகாஷின் காரியம் பதினோராம் நாள் நடந்தது. பிறந்தது முதல், படிப்பு விளையாட்டு, வேலை, காதல், கல்யாணம் எல்லாவற்றிலும் மின்னலாக இருந்த ஆகாஷ் மின்னலாகவே மறைந்துவிட்டான். எதிலும் வேகம் ஆகாஷ§க்கு. முடிவும் வேகமாகவே வந்து...