inidhu inidhu - 2nd half


16

இரண்டு சந்தோஷம் நிறைந்த வீடுகள் துக்க வீடுகளாக மாறிப் போயின. சாரதி வீட்டில் சாரதியின் அப்பா மிகவும் உடைந்து போனார். மஞ்சுவிற்கு அம்மா, அப்பா இல்லை. ஸோ, தூர சொந்தங்கள் வந்துவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால், கம்பெனி ஸ்டாஃப் கூட்டம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு உயர்ந்த மனிதனுக்கு இவ்வளவு சோதனைகளா என்று கம்பெனி ஊழியர்கள் அங்கலாய்த்தார்கள்.
சாரதி, மூன்றாம் நாளே மஞ்சுவின் காரியத்தை முடித்துவிட்டதால் உறவினர்கள் கிளம்பி விட்டார்கள். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. லட்சுமி அம்மா ஸ்ரீயைப் பார்த்துக்கொண்டார்கள். சாரதியின் அப்பா பெரிய கைதேர்ந்த டாக்டர். தன் சொந்த ஊரில் பெரிய ஹாஸ்பிடல் நடத்தி வருபவர். தன் தொழலில் எவ்வளவோ இறப்புகளை சந்தித்திருந்தாலும் மருமகளின் இழப்பு அவர் மனதைப் பாதித்தது. சாரதி, ஸ்ரீயின் எதிர்காலம் அவர் மனதில் பெரிய கவலைக்குரிய கேள்விக்குறியாய் உருவெடுத்தது.
ஆகாஷின் காரியம் பதினோராம் நாள் நடந்தது. பிறந்தது முதல், படிப்பு விளையாட்டு, வேலை, காதல், கல்யாணம் எல்லாவற்றிலும் மின்னலாக இருந்த ஆகாஷ் மின்னலாகவே மறைந்துவிட்டான். எதிலும் வேகம் ஆகாஷ§க்கு. முடிவும் வேகமாகவே வந்துவிட்டது. ஆகாஷின் அம்மா கமலி பித்து பிடித்ததுபோல் காணப்பட்டாள். நினைத்த எல்லாவற்றையும் சாதித்தே பழக்கப்பட்ட பூமிநாதனுக்கு இது பேரதிர்ச்சி. தன் பிஸினஸிலும் சரி, வாழ்க்கையிலும் சரி பல இக்கட்டான சூழ்நிலைகளைத் தன் பணபலத்தால் சர்வசாதாரணமாக சரி செய்தவர் அவர். ஆனால், இப்பொழுது தன் மகனின் அசாதாரணமான மரணத்தின் முன் அவர் பணம் வலுவற்று நின்றது.
அவரையும் அறியாமல், தன் திருமணத்திற்கு முன்பு மகேஷ், அவருடைய கமலியை அவரிடம் கொடுக்குமாறு கெஞ்சியதும், பின்பு கமலி கிடைக்காததால் ஏற்பட்ட மகேஷின் மரணமும் இப்பொழுது பூமிநாதனின் மனதை வெகுவாக உலுக்கியது. ஆடிப்போனார். ஓ, என் மகனி¢ன் மரணம் என் பாவத்தின் பலனா?
ஐயோ, கடவுளே, நான் செய்த பாவத்துக்கு என்னையல்லவா பனிஷ் பண்ணணும்? ஏன் என் பிள்ளைய தண்டிச்சிட்ட? என்று படத்திலிருந்த பெருமாளைப் பார்த்தார். அவர் என்றைக்கும்போல் அன்றைக்கும் சிரித்தார். சட்டென்று பூமிநாதனுக்குப் புரிந்தது. தன் பிள்ளை போனதுதான் தனக்குப் பெரிய தண்டனை. இது புரிந்தவுடன், அவர் தன் வீட்டிலேயே, தன் மனதிற்குள்ளேயே ஆயுள் தண்டனைக்குத் தயாரானார்.
ஜனனியின் அம்மா லலிதா ஆற்றாமையால் அழுது தீர்த்தாள். சபாபதி, தாத்தா, பாட்டி மூவரும் லலிதாவை எதிர்நோக்க முடியாமல் குற்ற உணர்வில் தவித்தனர். ஜனனி என்ன செய்வாள்? இனி அவள் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகள் அவர்களை அச்சுறுத்தின.
ஆனால், ஜனனி ஆகாஷ் இறந்த அன்று அழுததோடு சரி. பின், தன் அழுகை தன் குடும்பத்தினரை அதிக துக்கத்தில் ஆழ்த்திவிடும் என்று அமைதியாகி விட்டாள். ஆகாஷ§டன் வாழ்ந்தது மூன்று மாதங்கள்தான். அதற்குள் அவன் அவளை நிறைய சிரிக்க வைத்துவிட்டான். இப்பொழுதும் ஒரே நாளில் நிறைய அழ வைத்து விட்டான். அழுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. நான் ஆகாஷின் மனைவி மட்டுமல்ல, எனக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன. அவற்றை நான் சரியாக செய்ய வேண்டும். தெளிவு பெற்றாள் ஜனனி. தன் ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். அங்கே சோகத்தை டன் கணக்கில் சேர்த்து வைத்திருந்த பெரியவர்கள் அனைவரும் அவளை கவலையோடு பார்த்தார்கள்.
ஜனனி பேசினாள், அங்கிள் உங்க பிள்ளையோட 3 மாசம் வாழ்ந்தாலும் 30 வருஷம் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்திருக்கார் என்றவுடன், பூமிநாதன் உடைந்து போய் கதறி அழுதார். அனைவரும் அழுதனர். ஜனனி மட்டும் அமைதியாக இருந்தாள். பின் பூமிநாதன் சொன்னார்,
ஜனனி நீதான் எங்களுக்குன்னு இருக்கிற ஒரே வாரிசு. என் சொத்தையெல்லாம் உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிடறேன். எங்களோட வந்துடும்மா.
ஜனனியைத் தவிர அனைவரும் அதிர்ந்தனர். ஜனனி மென்மையாகப் பார்த்தபடி, உறுதியாகச் சொன்னாள்.
ஸாரி அங்கிள். ஆகாஷே போயிட்டார். அவர் சொத்து எனக்கெதுக்கு? ப்ளீஸ் அங்கிள், டோன்ட் மிஸ்டேக் மி. நீங்க வாழும்போதே உங்க சொத்தையெல்லாம் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திடுங்க. அது மட¢டும்தான் உங்க மனசுக்கு ஆறுதல் தரக்கூடிய மருந்தா இருக்க முடியும்.
பூமிநாதனின் கனத்த மௌனம் ஜனனியின் கருத்துகளை ஆமோதிப்பதுபோல் இருந்தது. ஆனால், பூமிநாதன் சட்டென்று கேட்டார்,
ஏன்மா, ஆகாஷ§ம், நீயும் கல்யாணத்தில் வந்த பணத்தைக்கூட தர்மம் பண்ணீங்க. ஆகாஷ் முழு மனசோடதான் ஒத்துக்கிட்டான். இப்ப என்ன ஆச்சு அவனுக்கு?
கரெக்ட் அங்கிள். அதான் நானும் சொல்ல வர்றேன். நாம நல்லது செய்யணும்னு ஆசைப்பட்டோம்னா உடனே செஞ்சுடணும் பாருங்க, இப்ப ஆகாஷோட வாழ்க்கை சீக்கிரமா முடிஞ்சு போச்சு. ஆனால், அவர் செஞ்ச தர்மம் எப்பவும் நிக்கும். எவ்வளவு பேர் மனசுல இருக்கார் அவர்! ஸோ, நாம எவ்வளவு காலம் வாழறோங்கிறதை விட எப்படி வாழறோம்ங்கறது ரொம்ப முக்கியம் அங்கிள்.
சரிம்மா, நல்லா புரியுதுன்னார் பூமிநாதன்.
இரண்டு நாட்களில் பூமிநாதனும், கமலியும் புறப்பட்டார்கள். இருவரையும் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒரு வாரத்தில் சபாவும், லலிதாவும் கிளம்பினார்கள். மறுபடியும் தாத்தா பாட்டியின் செல்ல பேத்தியாக வாழ்க்கையைத் தொடர்ந்தாள் ஜனனி.
வென்றது காதலா? விதியா?

17

ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு நாள், சாரதி ஜனனியை சில பேப்பர்ஸ்ல கையெழுத்துப் போடவேண்டுமென்று ஆபீசுக்கு அழைத்தான்.
ஜனனி சாரதியின் ஆபீஸ§க்குச் சென்றாள். வெளியிலேயே சுந்தரம் ஜனனியைப் பார்த்து வணக்கம் சொல்லி, சாரதியின் இடத்திற்குக் கூட்டிப் போனான்.
சாரதியின் முகத்தில் சிறிது களை குறைந்திருந்தாலும், அந்த சீட்டுக்கே உரிய கம்பீரத்துடன் காணப்பட்டார்.
வெல்கம் ஜனனி, ப்ளீஸ் டேக் யுவர் சீட்
தேங்க்¢ யூ.
எப்படியிருக்கீங்க ஜனனி?
உண்மையை சொல்லணும்னா எனக்குத் தெரியலை சார். நீங்க? 
நல்லாயிருக்க ட¢ரை பண்றேன். நான் மஞ்சுவோட ஹஸ்பண்ட் மட்டுமில்ல. பல கடமைகள் இருக்கு. அதெல்லாம் நான் சரியா செய்யணும்.
ஜனனி தன் எண்ணங்களும், வார்த்தைகளும் சாரதியிடமிருந்து வருவதை ஆச்சரியத்துடன் பார்த்தாள். பின் மெதுவாக கேட்டாள்,
சார் ஸ்ரீ...?
சில நொடிகள் மௌனமாக இருந்தான் சாரதி.
ஏன் சார்? வாட் ஹேப்பண்ட் டு ஸ்ரீ? ஜனனியின் குரல் பதறியது.
ஸ்ரீ இரண்டாவது முறையா, இந்த சின்ன வயசுல பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாயிருக்கான். மஞ்சுவின் இழப்பு அவனை ரொம்ப பாதிச்சிருக்கு. எதுலயும் அவனால ஒன்ற முடியல. ஏதோ இருக்கான். என்னால முடிஞ்சவரைக்கும் ஹெல்ப் பண்றேன். பட், மதர் கேன் நாட் பி ரீப்ளேஸ்டு, யு நோ.
ஜனனி, ஸ்ரீயைப் பற்றி தான் யோசிக்காததை நினைத்து வெட்கப்பட்டாள். சார், உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா, அப்பப்ப ஸ்ரீயை சுந்தரத்தோட எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்களேன்.
ஷ்யூர் ஜனனி. இது டைம்லி ஹெல்ப். தாத்தா, பாட்டி ஒண்ணும் நினைக்க மாட்டாங்களா?
நோ, நோ, அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
ஓகே மா, நீங்க சில இன்ஸ்யூரன்ஸ், பி.எஃப். பேப்பர்லெல்லாம் சைன் பண்ணிடுங்க.
ஒரு வெறுமையான வறட்டுப் புன்னகையுடன் ஜனனி கையெழுத்துப் போட்டாள்.
இரண்டு டீ வந்தது.
ப்ளீஸ் ஹேவ் இட் ஜனனி.
தேங்ஸ் சார்.
டீ சாப்பிட்டுக் கொண்டே ஆஃபீஸ் ரூமைப் பார்த்தாள். பட்டென்று கண்ணில் பட்டது புக்ஸ். எழுந்து சென்று கலெக்ஷனைப் பார்த்து முகம் மலர்ந்தாள். அவள் முகமலர்ச்சி சாரதியையும் தொற்றிக் கொண்டது.
சார், எவ்வளவு பிஸி நீங்க? இதெல்லாம் படிக்க எங்க டைம் இருக்கு உங்களுக்கு?
அதெல்லாம் சும்மாங்க. படிக்கறதுல இன்ட்ரஸ்ட் இருந்துச்சுன்னா, தானா டைம் கிடைக்கும்.
கரெக்ட் சார்.
சிறிது நேரம் பேசியதில், பல விஷயங்களில் ரெண்டு பேருக்கும் ஒரே ரசனை இருப்பது ரெண்டு பேருக்குமே சந்தோஷமாக இருந்தது.
ஓகே சார், கிளம்பறேன்.
இருங்க ஜனனி, சுந்தரம் வந்து ட்ராப் பண்ணுவார்.
இட்ஸ் ஓகே சார். ஆட்டோ பிடிச்சுப் போயிடுவேன்.
ஷ்யூர்?
யா, ஷ்யூர்.
ஓகே, டேக் கேர், பை.
பை சார்.
ஜனனி சென்ற பிறகும் அவளை உணர்ந்தான் சாரதி.
ஜனனி அப்படியே ரோஸி வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அனைவரும் அவளோடு அதிகமான அன்போடு பேசியதுபோல் உணர்ந்தாள். ஒரு மணி நேரம் கழித்துக் கிளம்பினாள். வினோத் கேட்டான்.
நான் வந்து ட்ராப் பண்ணவா ஜனனி?
எஸ்.
தோ வர்றேன். நான் ஜனனியை அவங்க வீட்லயே ட்ராப் பண்ணிட்டு வந்துடறேன் ரோஸ¤.
சரி வினோத்.
இருவரும் புறப்பட்டார்கள். காரில் வினோத் அவங்க ஸ்கூல் டேஸ் பற்றி நிறைய பேசினான். இந்த மாறுதலான, இயல்பான பேச்சு ஜனனிக்கு இதமாக இருந்தது. வினோத் சில காமெடியான சம்பவங்களை நினைவுபடுத்தினான். இருவருமே மனசு விட்டு சிரித்தார்கள். பேசிக்கொண்டே வந்ததில் வீடு உடனே வந்துவிட்டதுபோல் இருந்தது.
ஜனனி, எனக்கு ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன்.
ஹேய், அப்புறம் ஏன் வினோத் என்னை ட்ராப் பண்ண வந்த?
உனக்காகத்தான் ஜனனி, உன்னை சிரிக்க வைக்கத்தான்டா.
ஜனனி கண்கலங்கினாள். வினோத் ரோஸியின் ஹஸ்பண்ட், பட், ஜனனியின் நண்பன். நட்பு அனைத்து உறவுகளை விடவும் உயர்ந்தது, தூய்மையானது, அழகானது.
நோ ஜனனி ப்ளீஸ் கலங்காத. கலங்க வேண்டிய பெண் இல்ல நீ. கலங்கி நிக்கறவங்கள கைதூக்கி விடற பெண். உற்சாகமா இரு. வீ ஆர் ஆல்வேஸ் தேர் ஃபார் யூ.
ஜனனி சுதாரித்துக்கொண்டு, புன்னகையுடன், சரி வினோத், தேங்ஸ் என்றாள்.
ம், தட்ஸ் குட் என்று காரைக் கிளப்பினான். கார் ஷட்டர் வழியே குனிந்து ஜனனி கேட்டாள்,
ஒரு கப் காஃபி சாப்பிட்டுப் போலாமே. ரெண்டு நிமிஷத்துல போட்டுடறேன். 
அது முடியாதே என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் வினோத்.
ஏன்?
மீட்டிங் இருக்கு. ரெண்டு ப்ரபோஸல்ஸ் வேற ரெடி பண்ணணும். அதெல்லாம் போஸ்ட்போன் பண்ண முடியாது ஜனனி.
ஜனனி புரியாமல் முழித்தாள். பின் கேட்டாள், ‘ஸோ வாட்?’
என்ன ஜனனி இப்படி ட்யூப் லைட்டா போயிட்ட?
ஹேய் என்ன சொல்ற வினோத்? நீ மீட்டிங் அட்டெண்ட் பண்றதுக்கும், நான் காஃபி போடறதுக்கும்... என்று நிறுத்தி விட்டாள்.
ஓ... என்று கலகலவென சிரித்தாள்.
அப்பா, டியூப்லைட் எரிஞ்சிடுச்சே!
ஹேய், அடி வாங்கப் போற. என் காஃபி அவ்வளவு மோசமாவா இருக்கும்? என்று சிரித்தாள்.
நாம ஸ்கூல்ல படிச்சப்போ, நீ எங்களுக்கெல்லாம் போட்ட காஃபியை மறக்க முடியாதும்மா.
ஐயோ... அத இன்னுமா மறக்கல நீ?
மறக்கக் கூடிய காஃபியாம்மா அது?
அச்சோ... என்று வெட்கத்தில் சிரித்தாள் ஜனனி. சரி கிளம்பு, பை என்றாள்.
முதல் காஃபி ஞாபகத்திற்கு வந்தது. பாலில் காப்பி பொடியை போட்டு, கொதிக்க வைத்து, ஃபில்டர் பண்ணி காஃபி போட்டாள். அன்றிலிருந்து வேற எதுவும் டாப்பிக் கிடைக்கலன்னா, ஜனனியோட காஃபிதான் வினோத்திற்கு சுவாரஸ்யமான டாப்பிக். சிரிக்க சிரிக்க விவரிப்பான். ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே ஜனனியை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். ஜனனியும்கூட சேர்ந்து ரசித்துச் சிரிப்பாள்.
சிரிப்புடனே உள்ளே நுழைந்த ஜனனியைப் பார்த்து தாத்தா, பாட்டி மகிழ்ந்தனர்.
சிரிப்புதானே மனிதனின் மகத்துவம்!

18

ஒரு மாதத்திற்கு பிறகு எல்லோருக்கும் வாழ்க்கை இயல்பாகச் சென்றது. அவ்வப்போது ஸ்ரீ, ஜனனி வீட்டுக்கு வந்தான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்தார்கள். எப்பொழுதாவது ஸ்ரீயை அழைத்துப் போக சாரதி வருவான். சிறிது நேரம் பேசி விட்டுச் செல்வான். ஜனனிக்கும், சாரதிக்கும் இடையில் ஒரு நல்ல நட்புணர்வு மலர்ந்தது. இப்படியே ஒரு வருஷம் ஓடிவிட்டது. ஸ்ரீயின் அனைத்து செயல்களிலும் முன்னேற்றம் காணப்பட்டது. சாரதியும், லட¢சுமி அம்மாவும் அது குறித்து மகிழ்ந்தனர்.
ஒரு வருஷம் ஓடிவிட்டதால் மஞ்சுவிற்கும், ஆகாஷிற்கும் அவரவர் வீட்டில் தலை திதி கொடுக்கப்பட்டது. அதற்கு வந்த பூமிநாதனும், கமலியும் மறுநாள் கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன்னால் அனைவரையும் வைத்துக்கொண்டு பூமிநாதன் ஜனனியிடம் சொன்னார்.
ஜனனி, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்மா.
சொல்லுங்க அங்கிள்.
நீ சொன்ன மாதிரி பெரும்பாலான சொத்தை, நிறைய சேவாஸ்ரமங்களுக்கு தர்மம் பண்ணிட்டம்மா. இப்ப ஓரளவுக்கு நிறைவா ஃபீல் பண்றேன்.
சந்தோஷம் அங்கிள்.
அப்பறம்மா...
எதாயிருந்தாலும் சொல்லுங்க அங்கிள்.
நீ எத்தனை காலம்தாம்மா இப்படி தனியாவே இருப்ப?
ஜனனி மௌனம் சாதித்தாள்.
ஜனனியின் பெற்றோரும் தாத்தா பாட்டியும் பூமிநாதனை வியப்புடன் பார்த்தார்கள்.
பூமிநாதன் தொடர்ந்தார், நம்ம இந்து சாஸ்திரப்படி இறந்தவங்களோட ஆத்மா ஒரு வருஷம் வரை நம்மகூட இருக்கும். தலை திதிக்கப்புறம் சாந்தி அடையும்னு சொல்வாங்க. அதனால, பேசாம இருந்தோம்மா. இனிமேலும் நீ இந்த சின்ன வயசுல இப்படி இருக்க வேணாம்மா.
என்ன செய்ய முடியும் அங்கிள்?
நீ மனசு வச்சா, ஆகாஷோட கடைசி ஆசையை நிறைவேற்றலாம்.
அனைவரும் ஆவலுடன் ஜனனியைப் பார்த்தார்கள்.
சில நிமிட அமைதிக்குப் பின் ஜனனி பேசினாள், அங்கிள் நீங்கள்லாம் நினைக்கிற அளவுக்கு நான் சின்னக் குழந்தையில்ல. அதோட, இது என்னோட முடிவு மட்டுமில்ல. ஸ்ரீ, சாரதி சார், அவரோட அப்பா எல்லாரும் முழு மனசா ஒத்துக்கணும்.
இந்தப் பேச்சே அனைவரின் மனத்திலும் மகிழ்ச்சியை அளித்தது.
அதுபத்தில்லாம் நாங்க பாத்துக்கறோம்மா.
தயங்கிக் கொண்டே ஜனனி சொன்னாள், ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க அங்கிள்.
சொல்லும்மா.
இது பத்தி நானே சாரதி சார் கிட்டயும், அவர் அப்பாகிட்டயும் பேசறேன். நீங்களெல்லாம் அஸ்யூம் பண்ற சில விஷயங்கள் பின்னாடி தப்பா முடியலாம். ஸோ, நானே பேசிடறது பெட்டர்னு நினைக்கிறேன்.
ஜனனியின் பக்குவமும், புத்திசாலித்தனமும், நற்பண்பும் தெரிந்ததால் பெரியவர்கள் அதற்கு சம்மதித்தார்கள்.
அப்பன்னா, நாங்க இன்னும் ஒரு நாள் தங்கி, நல்ல செய்தியோட ஊருக்குக் கிளம்பறோம்மா.
ஓகே அங்கிள்.
ஜனனி சாரதியை மொபைலில் கூப்பிட்டாள்.
ஹலோ, சொல்லுங்க ஜனனி.
சார், உங்ககிட்ட ஒரு அரைமணி நேரம் பேசணும். முடியுமா?
ஷ்யூர் ஜனனி. பட், ஈவினிங் 7க்குதான் ஃப்ரீயாவேன்.
தட்ஸ் ஓகே சார்.
எங்கே மீட் பண்ணலாம்?
உங்க ஆஃபீஸ்ல சார்.
ஏன் ஜனனி?
அதான் வசதியாயிருக்கும். சார் உங்கப்பாவும் வரணும்.
அப்பா இங்கதான் இருக்கார். நைட் 10 மணிக்குதான் கிளம்பறார்.
நல்லது சார். நான் தாத்தாவோட 7 மணிக்கு உங்க ஆபீஸ்ல இருப்பேன்.
ஓகேமா.
சரியா 7 மணிக்கு தாத்தா, ஜனனி, சாரதி அவரோட அப்பா நான்கு பேரும் சாரதியின் ஆபீஸ் கான்பரன்ஸ் ஹாலில் மீட் பண்ணினார்கள். முதல் ஐந்து நிமிடங்கள் நலம் விசாரிப்பதில் சென்றது.
சாரதியின் அப்பா கேட்டார்,
சொல்லும்மா ஜனனி, எனிதிங் இம்பார்ட்டன்ட்?
எஸ் அங்கிள்.
சொல்லும்மா.
அங்கிள் எனக்கும், சாரதி சாருக்கும் ஒரே மாதிரி பேரிழப்பு ஒரே நாளில் ஏற்பட்டது. இந்த ஒரு வருஷமா அப்பப்ப மீட் பண்ணி பேசினதுல எனக்கும் சாருக்கும் நிறைய விஷயங்கள்ல டேஸ்ட் ஒண்ணா இருக்கு. எங்களுக்குள்ள இருக்கிற வேவ்ஸ்  சிங்க் ஆகுது. ஒரு சில நொடிகள் நிறுத்தினாள்.

அவர்கள் வெயிட் பண்ணினார்கள்.
ஜனனி தொடர்ந்தாள், அதுக்கும் மேல, எனக்கும் ஸ்ரீக்கும் நடுவே ஒரு டீப் அட்டாச்மெண்ட் வளர்ந்துடுச்சு. சனிக்கிழமை எப்படா வரும், எப்படா ஸ்ரீயைப் பார்ப்போம்னு தவி¢ச்சுப் போறேன். ஸ்ரீ கிட்டயும் அதை உணர முடியுது. சாரதி சார், நீங்க இதை ஸ்ரீ கிட்ட கவனிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
‘எஸ், யூ ஆர் கரெக்ட்’ என்றான் சாரதி.
ஸோ, நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கிற நானும், சாரதியும் வாழ்க்கையில சேர்ந்தோம்னா எங்களை விட, எங்க வீட்டுப் பெரியவங்க சந்தோஷப்படுவாங்க. இன்ஃபேக்ட் ஆகாஷோட அப்பாதான் ரொம்ப ஆசைப்படறார். இதுல ஸ்ரீயோட எதிர்காலமும் அடங்கியிருக்கு.
இங்க நான் ஒரு உண்மையைச் சொல்லியே ஆகணும். ஆகாஷ் இன்னும் என் மனச விட்டு சுத்தமா மறையல. இதேதான் சாரதி சார் நிலைமையும். மஞ்சு மேடமை அவராலும் மறந்திருக்க முடியாது.
அங்கிள் நீங்களும், சாரதி சாரும் சம்மதிச்சா, நாங்க மேரேஜ் பண்ணிக்கறோம். நல்ல ஃப்ட்ரெண்ட்ஸா இருக்கோம். பட், ஸ்ரீக்கு ஒரு நல்ல அம்மாவா இருப்பேன். முடித்துவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாள்.
சாரதிக்கும், அவன் அப்பாவிற்கும் பார்வைப் பரிமாற்றங்கள் நடந்தன. சாரதியின் அப்பா சாரதியிடம், சம்மதம் என்பதைத் தலையசைப்பில் தெரிவித்தார்.
சிறு புன்னகையுடன் சாரதி ஜனனியின் அருகில் வந்து அவளை நேராகப் பார்த்தான்.
ஜனனியின் கண்களில் தெரிந்த தெளிவும், உறுதியும் சாரதிக்குப் பிரமிப்பூட்டின. பின் தன் கையை நீட்டினான்.
புன்னகையுடன் ஜனனியும் கைநீட்டினாள். நட்புடன் கைகுலுக்கிக் கொண்டார்கள். பெரியவர்கள் சந்தோஷத்தில் திளைத்தார்கள்.
கைகள் இணைந்தன, இதயங்கள் இணையுமா?


19

ஒரு வாரத்தில் ஒரு கோவிலில் இரு குடும்பங்களின் பெரியவர்கள், நண்பர்கள், சாரதியின் ஆஃபீஸ் நண்பர்கள் முன்னிலையில் சாரதி, ஜனனி திருமணம் எளிமையாக நடந்தது. ஸ்ரீக்கு குஷி தாங்க முடியவில்லை. ஜனனி, சாரதி வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
முன்பே கூறியது போல் ஜனனி ஸ்ரீக்கு நல்ல அம்மாவாக இருந்தாள். சாரதியும் ஜனனியும் மிகவும் தேவை ஏற்பட்டால் மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டனர். சாரதி மாடியில் தனியாக தன் ரூமில் இருந்துகொண்டான். ஸ்ரீ, ஜனனியுடன் கீழ் ரூமில் தங்கிக் கொண்டான். லட்சுமி அம்மா மட்டும் இதுபற்றி வருத்தப்பட்டார்கள்.
ஜனனி தினமும் ஸ்ரீயை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, சாரதிக்கு லஞ்ச் எடுத்து வைத்து விட்டு தன் வேலைக்கு கிளம்பி விடுவாள். மாலை ஸ்ரீயுடன் படிப்பு, கதை, விளையாட்டு என்று இரண்டு மணி நேரம் ஓடிவிடும். இரவு ஸ்ரீ, சாரதியுடன் அரை மணி நேரம் இருப்பான். பின் 9 மணியளவில் தூங்கி விடுவான். பிறகு ஜனனி தன் பி.எச்.டி. வேலையில் மூழ்கி விடுவாள். பல நாட்கள் அவள் ரூமில் 1 மணி வரை கூட லைட¢ எரிவதை சாரதி பார்த்தான். அவளுக்கு ஏதேனும் உதவி செய்ய ஆசைப்பட்டான்.
ஒருநாள் நைட் ஸ்ரீ தூங்கிய பிறகு சாரதி ஜனனி ரூம் கதவைத் தட்டினான்.
எஸ் என்றாள் ஜனனி.
ஜனனி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.
ஷ்யூர் என்றபடியே தன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, ஸ்ரீயின் பக்கத்தில் தலையணைகளை வைத்துவிட்டு வெளியில் வந்தாள்.
மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசலாமா?
எஸ் சார்.
ரெண்டு பேரும் மாடியில் சில்லென்ற காற்றில் அப்படியே தரையிலேயே உட்கார்ந்தார்கள்.
என்ன சார், ஏதோ பேசணும்னீங்க?
ஜனனி, நீங்க சந்தோஷமா இருக்கீங்களா இந்த வீட்ல?
என்ன சார், இப்படி கேட்கறீங்க? நான் நல்லா இருக்கேன்.
சரி, சந்தோஷம். ஒரே வீட்ல இருந்துகிட்டு நாம யாரோ மாதிரி இருக்க வேணாமே.
அப்பா, நானே சொல்லணும்னு நினைச்சேன் சார். தாத்தா, பாட¢டியோடு பேசிப் பழகிட்டனா? பேசாம இருக்கறது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு சார்.
சின்னதாக சிரித்துவிட்டு கேட்டான். ஏன் ஜனனி என் லைப்ரரியில நிறைய புக்ஸ் இருக்கும். எடுத்துப் படிக்கலாமே நீங்க?
அது வந்து...
சொல்லுங்க...
உங்க அனுமதி இல்லாம உங்க ரூமுக்கு எப்படி வர்றதுன்னு...
ஓ, சாரி ஜனனி, நான் அந்த மாதிரி யோசிக்கவே இல்ல. நீங்க எப்ப வேணா என் ரூமுக்கு வரலாம். எந்த புக் வேணும்ன£லும் எடுத்துக்கலாம்.
அப்படியா சார். அப்படீன்னா, உங்க பீரோ சாவியை கொடுங்க.
ஏன்? சாரதி புரியாமல் பார்த்தான்.
என்ன சார், நீங்கதானே எந்த புக் வேணும்னாலும் எடுத்துக்கலாம்னு  சொன்னீங்க?
ஆமாம்.
எனக்கு உங்க பாஸ் புக் மட்டும் போதும் சார்.
ஹ, ஹா...
ஜனனியும் சிரிப்பில் சேர்ந்து கொண்டாள்.
ஜனனி, உங்களுக்கு செலவுக்குப் பணம் தேவைப்பட்டாலும் கேளுங்க.
சார், நானே உங்ககிட்ட அதுபத்தி பேசணும்னு நினைச்சேன்.
எவ்வளவு வேணும் ?
அது இல்ல சார். நாங்க ஹோம் நடத்தறோமில்ல. அதுல பல தொழில்களும் நடக்குது. என் பங்கு 25,000 மாவது வரும். பேங்க்ல க்ரெடிட் ஆயிடும்.
சாரதி ஆச்சரியமாகப் பார்த்தான்.
ஒ!
ஏன் சார்? நாங்களெல்லாம் சம்பாதிக்கக் கூடாதா?
ஏன் கூடாது? ஆனாலும் எனக்கு ஆச்சர்யமாயிருக்கு? நீங்க வேற என்ன சொல்லணும்?
சார், நீங்க என்னை வாங்க, போங்கன்னு கூப்பிடுறதை விடுங்க.
சிரித்துக்கொண்டே சாரதி சொன்னான், ஜனனி நீ கூட சார் போட்டுக் கூப்பிடறதை நிறுத்திடேன். 
சரி, வேற எப்படி கூப்பிடறது?
எப்படி வேணும்னாலும். ஜனனி நீ வந்தபிறகு ஸ்ரீகிட்ட நிறைய முன்னேற்றம் தெரியுது.
ஆமாம், நானும் கவனிச்சேன். ரொம்ப சந்தோஷமாயிருக்கு. உங்க கம்பெனி எப்படி போயிட்டு இருக்கு?
ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. உன் படிப்பெல்லாம் எப்படி போகுது? நிறைய நாள் லேட் நைட் முழிக்கிற போல?
ஆமாம். நிறைய படிக்க வேண்டியிருக்கு.
நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா ஜனனி?
ஓ... பண்ணுங்களேன். நான் டிக்டேட் பண்றேன். நீங்க வேகமா டைப் அடிச்சுக் கொடுங்க. தூக்கம் வரும்போது, சூடா டீ போட்டுக் கொடுங்க. அப்பறம் பஸ்ல கூட்டமா இருக்கறதால நின்னுக்கிட்டுதான் போறேன். ஆட்டோ ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லி சிரித்தாள்.
அப்படியே ஆகட¢டும் மேடம், டீ போட மட்டும் கத்துக்கணும் மேடம், ரெண்டு நாள் டைம் கொடுக்க முடியுமா மேடம் என்று கை கட்டி கேட்டான் சாரதி.
ஜனனி சிரித்துக் கொண்டே நினைத்தாள், சாரதிக்குள் இன்னொரு சாரதி இருக்கிறார்.
என்ன யோசிக்கிற ஜனனி?
உங்களைப் பார்க்கறப்ப எனக்கு பொன்னியின் செல்வன் ஹீரோ அருள்மொழிவர்மன் ஞாபகத்திற்கு வருவார்.
ஹேய், எங்க அப்பா கூட இதைச் சொல்வார் ஜனனி.
ஓ! பாத்தீங்களா? க்ரேட் பீப்பிள் திங்க் அலைக்.
என் அப்பா, க்ரேட்தான். இன்னொருத்தர் யாரு?
சாரதியின் கிண்டல் புரிந்ததும் இன்னொருத்தி மிஸஸ் ஜனனி சாரதி என்று சொல்லிச் சிரித்தாள். லட்சுமி அம்மா அழைக்கவும் ஜனனி குட்நைட் சொல்லி விட்டுச் சென்றாள்.
“மிஸஸ் ஜனனி சாரதி”.
சாரதியின் மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது.



20

ஒரு வாரம் சென்றது. ஒருநாள் இரவு சாரதி தன் ரூமில் படித்துக்கொண்டிருந்தபோது ஜனனி மாடி ஏறி வரும் சத்தம் மென்மையாகக் கேட்டது.
சாரதி நினைத்தான், அப்பா இந்தப் பெண் சாதாரணமாகத் தெரிகிறாள். ஆனால், அசாதாரணமான செயல்களைச் செய்கிறாள்.’’ஜனனி பால் கொண்டு வந்தாள்.
எனக்கெதுக்கு இப்ப பால்?
ஜனனி சிரித்த முகத்துடன் சொன்னாள், உங்களுக்கு தொண்டை வலியாமே? அதனால, பாலில் மஞ்சள் தூள், பனங்கல்கண்டெல்லாம் போட¢டு லட¢சுமி அம்மா கொடுத்தாங்க. இந்தாங்க.
உனக்கு?
எனக்கு எதுக்கு? என் குரல் நல்லாத்தானே இருக்கு?
ஆமாம், ஆமாம். உன் குரல் இனிமையாவே இருக்கு. ஏன் ஜனனி நீ பாடுவியா?
ஏதோ பாடுவேன். அஞ்சு வருஷம் கத்துக்கிட்டேன். நீங்க பாடுவீங்களா?
சுமாரா, சும்மா கேள்வி ஞானம்தான்.
சூப்பர் சார். நான் உங்க லைப்ரரியைப் பார்க்கலாமா?
தாராளமா. அதோ, அந்தக் கதவைத் திற, இன்னொரு ரூம் இருக்கும்.
ஜனனி, குஷியாக கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
வாவ், ஆயிரக்கணக்கான புத்தகங்கள். எல்லா வகையான புக்ஸ§ம் இருந்தன. ஓர் ஓரத்தில் ஒரு கம்ப்யூட்டர், ஒரு டேபிள், 4 நாற்காலிகளும் இருந்தன. ஒவ்வொரு வகை புக்ஸையும் பார்க்க, பார்க்க சாரதியின் மேலிருந்த மரியாதை கூடிக்கொண்டே வந்தது. கொஞ்ச நேரம் பொறுத்து சாரதி உள்ளே வந்தான்.
என்ன ஜனனி? உனக்கு ஏதாவது புக்ஸ் வாங்கணுமா சொல்லு.
எனக்குப் பிடிச்செதல்லாம் ஏற்கெனவே வாங்கி வெச்சிருக்கீங்க சாரதி. நான் எப்ப வேணா இங்க வரலாமா?
............
என்ன? ஏன் அமைதியா இருக்கீ¢ங்க?
ஜனனி...
சொல்லுங்க.
இது நம்ம வீடு ஜனனி. இந்த வீட்ல இருக்கற ஒவ்வொரு பொருளும் உனக்கும் சொந்தம். நீ என்கிட்ட இப்படி அனுமதி கேக்கறது மனசு வலிக்குது.
ஜனனி சட்டென்று அமைதியானாள். சாரதியின் ஆழ்ந்த குரல் உண்மையை மென்மையாகச் சொன்னது. ஆனால், சாரதியின் மன வலிக்கு தான் காரணமாகி விட்டோம் என்பது புரிந்து செய்வதறியாமல் தவித்தாள்.
பின்பு மெதுவாக சாரதியின் அருகே வந்து, ‘சாரி சாரதி’ என்றாள். சொல்லும்போது அவள் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.
உடனே சாரதி சாதாரணமாகி, ஜனனி, அந்த கப்போர்டைப் பாரு.
ஜனனி ஆவலாகத் திறந்தாள். அப்பா, ஆடியோ சி.டி. கலெக்ஷன்.
என்ன டேஸ்ட் உங்களுக்கு? எனக்கு இந்த உலகம் போதும் சாரதி.
அடடா,
ஏன்? என்னாச்சு?
உனக்காக விலைபேசி வாங்கிடலாம்னு தேவேந்திரன் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி வச்சிருக்கேன்?
அவனுடைய கேலியை ரசித்து கலகலவென சிரித்தாள்.
சாரதி அவள் சிரிப்பை ரச¤த்தான்.
ஹேய், என்ன நினைக்கிறீங்க? அப்படியே சொல்லிடுங்க.
சிரிப்பு சத்தத்தை விட, சிறந்த சங்கீதத்தை கேட்க முடியுமா?
அப்பா, நீங்க கவிதை எழுதுவீங்களா சாரதி?
ஊஹ¨ம். படிப்பேன்.
யாரோடது ரொம்பப் பிடிக்கும்?
பாரதி. உனக்கு?
எனக்கு... சாரதிக்குப் பிடித்த பாரதிதான்.
மனம் விட்டுச் சிரித்தான் சாரதி.
சரி, நான் கீழே போறேன். குட்நைட்.
குட் நைட்.
ஜனனி சென்றவுடன் ஃப்ரோஸன் தாட்ஸில் மூழ்கிப் போனான் சாரதி. 11 மணிக்கு லைட் ஆஃப் பண்ணிவிட்டு, நைட் லேம்ப்பை போட்டான். படுக்காமல் கீழே இறங்கினான். ஜனனியின் ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது. இவன் கதவைத் தட்டலாமா என்று தயங்கி நிற்கும்போது கதவு திறந்தது.
இரண்டு பேருக்குமே ஆச்சரியம் கலந்த சந்தோஷம். 
என்ன சாரதி?
ம்... ஒண்ணுமில்ல.
ஆ, ஒண்ணுமில்லாததுக்கா இறங்கி வந்தீங்க?
ஆமாம். நீ இப்ப ஏன் கதவ திறந்த?
உங்கள வெல்கம் பண்ணத்தான்.
எப்படி தெரியும்?
தோணுச்சு.
எப்படி?
எனக்கு உங்களப் பார்க்கணும்னு தோணிச்சு. உங்களுக்கும் தோன்றி, வருவீங்களோன்னு நினைச்சு கதவைத் திறந்தேன். வந்துட்டீங்க என்று முகம் மலர்ந்தாள்.
எனக்கும் தோணுச்சு ஜனனி.
சட்டென்று இருவரும் அமைதியானார்கள். ஒரு நிமிஷம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் தலையசைத்து விட்டு சாரதி மாடிக்குச் சென்றான்.
மௌனத்தை விட மேலான மொழி ஏது?
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் லேட்டாக எழுந்தார்கள். ஸ்ரீ மட்டும் தூங்கிக் கொண்டிருந்தான். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் தூங்கலாம் என்பது ஒரு வரம் போல் ஆகிவிட்டது.
ஜனனி எழுந்து வந்தபோது சாரதி வெளியில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். ஜனனி காஃபியுடன் வெளியில் வந்தாள்.
ஹேப்பி மார்னிங் சாரதி.
ஹேப்பி மார்னிங். உனக்கு ஃப்ரோஸன் தாட்ஸ் புக் பிடிக்குமா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க? நான் ரங்கராஜன் சாரோட ரசிகை தெரியுமா? அவரோட சிந்தனைகளே உயர்ந்த சிந்தனைகள். அந்த புக் படிக்கும்போது அழகான ஏரியில, சுகமான படகு சவாரி செய்ற அனுபவம் கிடைக்கும்.
ஜனனியின் ரசனையை ரசித்தான் சாரதி.
சாரதி
சொல்லு.
இன்னைக்கு பீச்சுக்குப் போலாமா?
ஓ, போலாமே, அப்பறம்?
உங்களுக்கு ஞாபகம் இருக்கா, என் ஃப்ரெண்ட்ஸ் வினோத், ரோஸி?
எஸ். அவங்களுக்கென்ன?
இன்னைக்கு அவங்களோட கல்யாண நாள். நம்மள டின்னருக்கு இன்வைட் பண்ணியிருக்காங்க. வினோத் உங்களைக் கூப்பிடுவார். நாம மூணு பேரும் போனா, அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
போலாமே.
தேங்க் யூ சாரதி. நான் இப்பவே ரோஸிக்கு சொல்லிடறேன் என்று உள்ளே ஓடினாள்.
சிரித்துவிட்டு பேப்பரில் மூழ்கினான் சாரதி.
ஸ்ரீயை எழுப்பி, அவனுடைய அடுத்த நாள் வேலையை முடிக்க வைத்தாள். பின் ஸ்ரீயிடம் சொன்னாள், ஸ்ரீ நாம இன்னைக்கு பீச்சுக்குப் போறோம்.
ஸ்ரீயின் முகத்தில் சந்தோஷம்.
அப்பறம் அங்கேர்ந்து என் ஃப்ரெண்ட் ரோஸி ஆண்ட்டி வீட்டுக்குப் போறோம். அங்க ரோஸி ஆண்ட்டி, வினோத் அங்கிள், ஒரு பாட்டி, அப்பறம் பப்பின்னு ஒரு நாய்க்குட்டி இருக்கும். அது, உன்னோட நல்லா விளையாடும். ஸ்ரீ உடனே எக்ஸைட் ஆனான்.
ஸ்ரீ என்னோட ஃப்ரெண்டுக்கு ஏதேனும் ப்ரெசன்ட் பண்ணணும்? என்ன கொடுக்கலாம்?
ஸ்ரீ யோசித்தான்.
எனக்கு ஒரு ஐடியா.
என்ன? என்று சைகையில் கேட்டான்.
நீ அவங்களுக்கு ஒரு படம் வரைஞ்சு கொடேன்.
உடனே, குஷியாக ஒத்துக்கொண்டான்.
ஸ்ரீ அதை, யார்கிட்டயும் சொல்ல வேணாம். சர்ப்ரைஸா கொடுக்கலாம்.
சந்தோஷமாய் தலையாட்டினான் ஸ்ரீ.
அன்று மாலை பீச்சுக்குப் போனார்கள். பந்து, பலூன், பட்டம் என்று மூணு பேருமே ஜாலியாக விளையாடினார்கள். ஸ்ரீயின் குஷி இருவரையும் உற்சாகப்படுத்தியது. பின்பு ரோஸியின் வீட¢டிற்குப் போனார்கள். எல்லோருக்கும் ஜனனி, தன் குடும்பத்துடன் வந்தது சந்தோஷமாக இருந்தது.
ஸ்ரீ ஒரு படத்தை எடுத்து ரோஸியிடம் கொடுத்தான். அதில் மிகவும் அழகான பூங்கொத்தை வரைந்து, பெயிண்ட் பண்ணியிருந்தான். ‘வித் லவ்- ஸ்ரீ என்றும் எழுதியிருந்தான். ரோஸி ஸ்ரீயைத் தூக்கி, சுற்றி இரு கன்னத்திலும் முத்தமிட்டாள். சந்தோஷ மிகுதியில் ஸ்ரீயும் ரோஸிக¢கு முத்தமிட்டாள்
பின்பு ஜாலியாக பேசியபடியே சாப்பிட்டார்கள். ஒரே கலகலவென்று, பேச்சு, சிரிப்பு...
திடீரென ரோஸ¤ ஜனனியிடம் கேட்டாள், ஜனனி, இன்னிக்கு எங்க கல்யாண நாள்தானே? நான் கேட்டா, நீ செய்வதானே?
சொல்லு என்ன?
எனக்காக ஒரு பாட்டு பாடேன் ஜனனி, ப்ளீஸ்.
ஆமாம்மா, எவ்வளவு நாளாச்சு. உன் பாட்டைக் கேட்டு? என்று வினோத்தின் அம்மாவும் கேட்டார்கள்.
ஜனனி ஸ்ரீயிடம் கேட்டாள்,
அம்மா பாட்டுமா?
ஸ்ரீ தலையாட்டவும்,
‘’காற்றினிலே வரும் கீதம்‘’ என்ற பக்த மீரா பாடலைப் பாடினாள் ஜனனி. குரலில் நெகிழ்ச்சி, உணர்ச்சி, பக்தி எல்லாம் பிரவாகமெடுத்து ஓடியது. எல்லோரும் மெய்மறந்து போனார்கள். சாரதி கரைந்தே போனான்.
பாட்டு முடிந்தவுடன் எல்லோரும் கைதட்டிப் பாராட்டினார்கள். ஸ்ரீ ஜனனியைக் கட்டிக்கொண்டான். சாரதி காரில் கூட ஒன்றுமே பேசவில்லை. ஜனனிக்கு ஏதோ புரியாத உணர்வு மனதிற்குள். வீட்டிற்கு வந்த பிறகும், ஒன்றும் பேசாமல் தன் ரூமுக்குப் போய்விட்டான்.¢
ஜனனிக்கு தூக்கம் வரவில்லை, படிக்கவும் ஓடவ¤ல்லை. மனசுக்குள் நினைக்கிறாள், ‘’ஏன் சாரதி ஒண்ணும் சொல்லலை? அவங்க வீட்ல நான் பாடியது பிடிக்கலையா? ஏன் இந்த மௌனம்? அது என்னை வதைக்கிறதே...’’
ஏதோ வேகம் வந்ததுபோல் கிடுகிடுவென ஏறி சாரதி ரூமுக்குப் போய் கதவை லேசாகத் தட்டினாள்.
சாரதி ‘எஸ்’ என்றான்.
தன் கட்டிலில் சாய்ந்தபடி, மொபைலில் ஹெட் ஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். வா ஜனனி, உட்கார்.
உட்கார்ந்து, ஜனனி கேட்டாள்,
சாரதி!
சொல் ஜனனி.
நான¢ பாடினது பிடிக்கலையா உங்களுக்கு?
அவன் ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு அவன் ஹெட்ஃபோனை அவள் காதில் பொருத்தி ஆன் செய்தான். ஜனனி பாடியது பாதியிலிருந்து தொடர்ந்தது.
ஓ! அப்பறம் ஏன் ஒண்ணும் சொல்லலை? உங்களோட மௌனம் எனக்கு தவிப்பாகவும், பயமாகவும் இருந்தது. சாரதி, நீங்க ஒரு வார்த்தைகூட பாராட்டலைன்னு ஏக்கமாகூட இருந்துச்சு தெரியுமா?
ஜனனி, வெறும் வார்த்தைகள் போதாது.
அவள் நிமிர்ந்து ஆச்சரியமாகப் பார்த்தாள்.
அவன் கையை நீட்டினான்.
தன்னிச்சையாக அவளும் கையை நீட்டினாள்.
சாரதி தன் இரு கைகளுக்குள் அவள் ஒரு கையை வைத்துக் கொண்டு சில நிமிடங்கள் அமைதியாயிருந்தான். அவனால் சொல்ல முடியாததையெல்லாம் அவன் ஸ்பரிசம் உணர்த்தியது.
சாரதி...
ம்...
எனக்காக நீங்க ஒரு பாட¢டு பாடுங்களேன்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு சாரதி,
‘’சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ...’’
என்று ஆழமாக உணர்ந்து மிக இனிமையாகப் பாடினான்¢. ஜனனி உலகம் மறந்தாள்.
சாரதி பாடி முடித்தவுடன் ஜனனி தன் கையை நீட்டினாள்.
இம்முறை அவனது கை அவளது இரு கைகளில் தஞ்சம் புகுந்தது.
கரங்கள் பற்றிக்கொண்டன! மனங்கள்?


22

மறுநாள் திங்கள்கிழமை. எல்லோரும் பிஸியாகி விட்டார்கள். அந்த வாரம் ஸ்ரீக்கு தேர்வு வேறு. அதனால், அவன் படிப்பில் அவனோடு சேர்ந்து ஜனனியும் உட்கார்ந்தாள். ஸ்ரீ நன்றாக சுடர் விடும் தீபம்தான். இருந்தாலும் தூண்டிவிட ஒருத்தர் இருந்தால் வெளிச்சம் பிரகாசமாக இருக்குமல்லவா?
அந்த வாரம் வியாழக்கிழமை மாலை மழை ‘சோ’வெனப் பெய்தது. சுந்தரம் ஸ்ரீயைக் காரில் பத்திரமாக அழைத்து வந்துவிட்டார். சாதாரணமாக சாரதியின் ஆஃபீஸ் நேரத்தில் ஃபோனில் அழைக்க மாட்டாள், ஆனால் இன்று கூப்பிட்டாள்.
ஹலோ ஜனனி, சொல்லுமா
சாரதி, ஒரே மழை.
ஆமாம். உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா?
ஆமாம். நீங்க சீக்கிரமா வீட்டுக்குப் போய் ஸ்ரீயைப் பார்த்துக்கோங்க. அவனுக்கு டெஸ்ட் இருக்கு. அவனை எழுதிப் பார்க்கச் சொல்லுங்க. அப்பறம் தூங்கறதுக்கு முன்னாடி பால் சாப்பிட வச்சிடுங்க. நான் 7 மணிக்குள்ள மழை நின்னுடுச்சின்னா வந்துடறேன். இல்லன்னா... 
சொல்லுமா...
மழை விடலைன்னா பாட்டி வீட்ல தங்கிக்கட்டுமா?
ம்.. ஒண்ணும் பிரச்னையில்ல. நான் ஸ்ரீயைப் பார்த்துக்கறேன்.
தேங்ஸ் சாரதி, பை.
பை மா..
ஜனனி,¢ ஸ்ரீக்கு ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்வது மனதுக்கு இதமாக இருந்தது சாரதிக்கு. வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டுக்குப் போனான் சாரதி.
மழையா இருக்கறதுனால அம்மா நாளைக்குத்தான் வருவாங்க ஸ்ரீ.
ஸ்ரீயின் முகம் சுருங்குவதைக் கவனித்தான் சாரதி. பின்பு தன்னால் முடிந்தவரை ஸ்ரீயுடன் இருந்தான். ஸ்ரீ தூங்கிய பிறகு சாரதி, ஜனனியை மிஸ் பண்ணுவதை உணர்ந்தான். அந்த நேரத்தில் லட்சுமி அம்மா சாரதியிடம் சொன்னார்கள்,
ஜனனி அம்மா இல்லாம வீடு வெறிச்சின்னு இருக்கு தம்பி.
நானும் அதைத்தான் நினைச்சேன் லட்சுமி அம்மா.
அந்த நேரம் மொபைல் அடித்தது. தாத்தா அழைத்தார்.
ஹலோ தாத்தா,
ஹலோ மாப்ளே, நல்லாயிருக்கீங்களா?
நல்லாருக்கேன் தாத்தா. என்ன இந்த நேரத்துல, மணி¢ 9 ஆகுதே?
தம்பி, எட்டு மணிக்கு மழை நின்னுடுச்சு. ஜனனிக்கு உங்களையெல்லாம் விட்டுட்டு இங்க இருக்க முடியல. ரொம்ப தவிச்சுட்டா. ஸ்ரீயைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தா. அப்பறம் திடீர்னு என் காரை எடுத்துட்டு கிளம்பிட்டா. நல்லாதான் ஓட்டுவா. இருந்தாலும் அவ வந்தவுடன் நீங்க எனக்கு சொல்லிடுங்க.
ஷ்யூர் தாத்தா.
விஷயத்தைச் சொன்னவுடன் லட்சுமி அம்மா கவலைப்பட்டார்கள். மணி 9ஐத் தாண்டியதும் சாரதிக்கும் சிறிது கவலையாயிருந்தது. 9.20க்கு மணி அடித்தது. சாரதி கதவைத் திறந்தான். ஜனனி பூவாய் சிரித்தாள். அவனுடைய கவலை பறந்தது.
சாரதி, காரை போர்ட்டிகோல நிறுத்திடுங்களேன். அப்படியே கதவை பூட்டிடுங்க. சாரல்ல கொஞ்சம் நனைஞ்சிட்டேன். போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துடறேன்.
சரி என்று, சாரதி காரை போர்ட்டிகோவில் பார்க் செய்துவிட்டு உள்ளே வரும்போது ஜனனி தன் ரூமுக்குள்ளேர்ந்து, ”லட்சுமி அம்மா, தலை வலிக்கிற மாதிரி இருக்கு, ஒரு காஃபி போட்டுக் கொடுங்களேன்”.
லட்சுமி அம்மா தன் ரூமில் படுத்து விட்டதைக் கவனித்த சாரதி தானே காஃபி போட்டு வந்தான். ஜனனி சோஃபாவில் உட்கார்ந்திருந்தாள்.
ஜனனி, காஃபி.
அச்சச்சோ, லட்சுமி அம்மா தூங்கிட்டாங்களா? சாரி சாரதி என்று வெட்கப்பட்டாள்.
பரவாயில்ல, குடி.
உங்களுக்கு?
வேண்டாம்.
தேங்க் யு என்று காஃபி சாப்பிட்டாள்.
ம்.. ரொம்ப நல்லாயிருக்கு. எதை செஞ்சாலும் முழுமையாதான் செய்வீங்க போல.
சின்னதாக புன்னகைத்தான் சாரதி.
காஃபியை முடித்தவுடன் ஜனனி சொன்னாள், சரி சாரதி, ஆரம்பிங்க.
என்ன?
நீங்க நினைக்கிறத ஆரம்பிங்க...
நான் என்ன நினைக்கிறேன்?
நான் சொல்லட்டுமா?
ம்..
“ஜனனி, நீ சின்ன குழந்தை இல்ல. இந்த மழைல, இந்த நேரத்துல, தனியா கார் எடுத்துட்டு அவசியம் வரணுமாம்மா? இனிமே இந்த மாதிரி ரிஸ்க் எடுக்காதே. நாங்கள்லாம் பதறிப் போயிட்டோம¢ தெரியுமா?” - சரியா சாரதி?
ரொம்ப சரி என்று வாய்விட்டுச் சிரித்தான் சாரதி.
பிறகு சாரதி, தாத்தாவிற்கு ஃபோன் பண்ணி சொன்னான்,
ஜனனி வந்துட்டா தாத்தா.
இவ்வளவு நேரமாயிடுச்சே. வழியில கார் நின்னுடுச்சா?
இல்ல, இல்ல. ஜனனி வந்து அரைமணி நேரம் இருக்கும் தாத்தா. ஆனா, வந்தவுடனே காரை பார்க் பண்ணு, கதவ லாக் பண்ணு, சூடா காஃபி போடுன்னு ஒரே அதிகாரமா போட்டுட்டிருந்தா உங்க பேத்தி, அதான் லேட்டாயிடுச்சு.
கையிலிருந்த நியூஸ் பேப்பரால், தாத்தா கிட்ட புகாரா பண்றீங்க? என்றபடியே சாரதியை மென்மையாக அடித்தாள்.
‘ஐயோ தாத்தா, ஜனனி அடிக்கிறா’ என்று சத்தமாக கத்த, தாத்தா அந்தப் பக்கத்தில் சத்தம் போட்டுச் சிரித்தார். பின்பு குட்நைட் சொல்லி ஃபோனை வைத்தான் சாரதி.
ஜனனி,
சொல்லுங்க.
உண்மையைச் சொல்லு.
நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை யுவர் ஹானர்.
‘நாட்டி கேர்ள்’ என்று சிரித்தான்.
நான் மட்டும்தான் உண்மை சொல்லணுமா? நீங்க பொய் சொல்லலாமா?
நான் என்ன பொய் சொன்னேன்?
அடடா! மறதி வேறவா?
சாரதி என்ன சொன்னோம் என்று யோசித்தான்.
நான் நாட்டி பெண் இல்ல, நல்ல பெண்.
சரி, சரி ஒத்துக்கறேன் சொல்லு. ஜனனி, நீ எதுக்காக இந்த நேரத்துல கிளம்பி வந்த?
என்னமோ தெரியல, நம்ம வீட்டுக்கு வந்துடணும்னு தோணுச்சு.
சாரதி முகம் மலர்ந்தான்.
பின் ஜனனி கேட்டாள்,
சாரதி, ஸ்ரீ சமத்தா இருந்தானா? எழுதினானா?
நல்லா எழுதினான். என்ன அபார அறிவு ஜனனி, ஸ்ரீக்கு!
சாரதி, நான் ஸ்ரீக்கு நல்ல அம்மாவா இருக்கேனா?
சாரதி சின்னதாய் முகம் மாறி, பின் சொன்னான். அதிலென்ன சந்தேகம்? நீ நல்ல அம்மாதான்.
ஆனா, நீங்க எதையோ சொல்ல வந்து நி¢றுத்திட்டீங்க சாரதி?
ஒண்ணுமில்ல மா.
சொல்லுங்க ப்ளீஸ்.
ஜனனி, தப்பா எடுத்துக்காதே, இது யதார்த்தமா என் கருத்தில் பட்ட விஷயம்.
சொல்லுங்க.
மஞ்சு எப்பவும் ‘ஸ்ரீ’யை ‘என் பிள்ளை’ ‘என் பிள்ளை’ன்னு சொல்லுவா. ஆனா, நீ ஒருமுறை கூட சொன்னதில்லை.
ஜனனி புன்சிரிப்புடன் கேட்டாள், சாரதி உங்க அம்மாவோ, அப்பாவோ உங்களை என் பிள்ளை, என் பிள்ளைன்னு அடிக்கடி சொல்வாங்களா?
யோசித்துவிட்டு இல்லை என்றான்.
எங்கம்மா கூட என்னை என் பொண்ணுன்னு சொல்லிக்கிட்டு இருக்க மாட்டாங்க.
ஓ, நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியல.
சாரதி, இது உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம். எது நமக்கு உண்மையா உரிமை இல்லையோ, அது நம்மகிட்ட இருக்கும்போது, அது நம்ம கைய விட்டுப் போயிடக் கூடாதுங்கற பயம். அது மட்டுமில்லாம நமக்குச் சொந்தமானது இல்லைன்னு யாராவது சொல்லிடுவாங்களோன்னு பயத்துல எம் புள்ளைன்னு சொல்றது. உண்மையில சொந்தமா இருந்தா அத சொல்லிக்கிட்டு இருக்க மாட்டாங்க. ஏன்னா, அது எல்லோருக்கும் தெரியும். அதனால, நான் ஸ்ரீயை என் பிள்ளைன்னு சொல்ல விரும்பலை.
ஜனனி, நான் உன்னை காயப்படுத்திட்டனா?
ஜனனி புன்சிரிப்புடன் சொன்னாள், என்னை காயப்படுத்தணும்னு நீங்க மனசாலகூட நினைக்க மாட்டீங்க சாரதி.
சாரதி நெகிழ்ந்து தேங்ஸ் ஜனனி என்றான்.
சடாரென நிமிர்ந்து பார்த்தாள் ஜனனி.
என்னாச்சு ஜனனி?
ஒண்ணுமில்ல, குட்நைட் என்று சொல்லி விட்டு தன் ரூமுக்குப் போய் படுத்துக்கொண்டு ஜனனி குமுறி, குமுறி அழுதாள். சாரதி அதிர்ந்து போனான். அழுகை சத்தம் கேட்டு, செய்வதறியாமல் தவித்தான்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்!

23

ஜனனியின் அழுகைக்குக் காரணம் என்ன? ஜனனிக்கு ஆகாஷ் ஞாபகம் வந்துவிட்டது.
ஒருநாள் ஆகாஷ் சொன்னான், ஜனனி நமக்குள்ள ஒரு ஒப்பந்தம்.
என்ன சொல்லுங்க.
சொன்ன பிறகு நோ சொல்லக் கூடாது.
சரி, விஷயத்தைச் சொல்லுங்க.
ஜனனி, நமக்குள்ள எப்பல்லாம் தேங்ஸ் சொல்லணும்னு தோணுதோ அப்பல்லாம் ஒரு கிஸ் பண்ணணும். எப்பல்லாம் சாரி சொல்லணும்னு தோணுதோ அப்ப ரெண்டு கிஸ் பண்ணணும். சரியா?
அய்ய, ஆசையைப் பாருங்க, அதெல்லாம் முடியாதுப்பா.
ஹேய், ஹேய் நீதான சரின்னு ஒத்துக்கிட்ட?
தெரியாம ஒத்துக்கிட்டம்பா, சாரி, சாரி, சாரி என்றாள்.
ஹையா, மூணு சாரி, அப்ப 6. இதோ என்று அருகில் வந்து தன் முகத்தைக் காட்டினான்.
மறுக்க முடியவில்லை ஜனனியால், கொடுத்தாள்.
ஆகாஷ் தன்னை மறந்து சொன்னான், தேங்ஸ், தேங்க் யூ வெரி மச்.
ஜனனி குறும்புடன் தன் முகத்தைக் காட்டினாள்.
என்னடா?
என்ன என்னடா? ரெண்டு தேங்ஸ் சொன்னீங்கள்ல, அப்ப ரெண்டு கொடுக்க வேணாமா? ச்ச... கஞ்சம்ப்பா 6 வாங்கிட்டு 2 கொடுக்கறது?
‘ஹேய்...’ என்று கத்திக்கொண்டே மழையாய்ப் பொழிந்தான்.
நினைத்துக்கொண்டே, அழுது அழுது தேம்பிக்கொண்டே தூங்கிப் போனாள்.
ஆனால், சாரதியால் தூங்க முடியவில்லை. மனதில் சோகமும், கவலையும். ஒருவித இயலாமையால் தவித்துப் போனான். அப்படியே களைத்துப் போய் விடியற்காலையில் தூங்கினான்.
மறுநாள் காலை ஜனனிக்கு கண்ணெல்லாம் எரிந்தது. முதல்நாள் மழையில் நனைந்தது, தலைவலி எல்லாம் சேர்ந்துகொண்டு நல்ல ஜூரம் அடித்தது. அவளால் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை. லட்சுமி அம்மா வந்து தொட்டுப் பார்த்துவிட்டுப் பதறிவிட்டார்கள். அவர்களே ஸ்ரீயை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, பின் ஜனனிக்கு கஞ்சி கொண்டு வந்தார்கள்.
எனக்கு ஒண்ணும் வேண்டாம் லட்சுமி அம்மா. சாரதியை கொஞ்சம் கூப்பிடுங்களேன்.
சில நிமிடங்களில் சாரதி அவள் ரூமுக்கு, ஒரு டம்ளர் கஞ்சியுடன் வந்தான். எங்கோ பார்த்தபடி, ‘சொல்லும்மா’ என்றான்.
ஜனனிக்கு ஓர் உண்மை அப்போதுதான் உறைத்தது. ஓ... நான் என் சோகத்தில், அழுகையில் சாரதியை காயப்படுத்தி விட்டேன். இவர் தவித்திருப்பார், தூங்கியிருக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டே பார்த்தாள். சாரதியின் கண்கள் சிவந்திருந்தன. அவன் கம்பீரமான முகம் களையிழந்து காணப்பட்டது. கண்களில் உல்லாசம் போய் தவிப்பு தெரிந்தது.
ஜனனிக்கு தன் தவறு புரிந்தது. ஆனால், என்ன செய்வதென்று புரியவில்லை.
சொல்லு ஜனனி, கூப்டியாமே? அவன் குரலில் உயிர் இல்லை.
கொஞ்சம் உட்காருங்களேன்.
கட்டிலில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்தான்.
சாரதி, ரொம்ப முடியல. ரொம்ப ஜூரமாயிருக்கு. எனக்கு லீவ் சொல்லிடுங்களேன்.
‘சரி, வேற ஏதாவது?’ மொட்டையாகக் கேட்டான்.
ஜனனிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவளுக்கு முடியவும் இல்லை. அசதியில் கண் மூடினாள்.
ஜனனி
சொல்லுங்க.
இந்தக் கஞ்சிய குடிச்சிடேன். அப்பதானே மாத்திரை போட முடியும். டாக்டர்கிட்ட போலாமா?
சாயந்தரம் வரைக்கும் குறையலன்னா போலாமே.
சரி, பாட்டிய வேணா கூப்பிடட்டுமா ஜனனி?
வேண்டாம். ரொம்ப கவலைப்படுவாங்க.
சரி, நீ கஞ்சி சாப்பிடு.
மெல்ல எழுந்து பல் துலக்கி, முகம் துடைத்து கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள். மெதுவாக கஞ்சியைக் குடித்தாள். பிறகு மாத்திரை போட்டுக் கொண்டு படுத்தாள். அப்படியே நன்றாகத் தூங்கி விட்டாள்.
சாரதி லட்சுமி அம்மாகிட்ட திரும்ப, திரும்ப, ‘ஜனனியை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க’ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
மதியம் ஜனனி கண்விழித்தாள். இன்னும் தலைவலித்தது. களைப்பாக இருந்தது. லட¢சுமி அம்மா வந்தார்கள்.
இப்ப எப்டிம்மா இருக்கு?
ரொம்ப முடியலம்மா. சுந்தரத்தைக் கூப்பிடுங்களேன்.
சுந்தரம் உங்க காரை தாத்தா வீட்ல விட்டுட்டு, அப்படியே தன் சொந்த வேலையை முடிச்சிட்டு வர்றேன்னு போயிருக்காப்ல. இன்னும் வரலையே மா.
ஓ! நானும் காரை கொண்டு விடத்தான் கூப்பிட்டேன்.
கொஞ்சம் ரசம் சாதம் சாப்ப¤டறீங்களா?
சாப்பிடவே பிடிக்கலம்மா.
அப்டிதான் இருக்கும். ஆனா, சாப்பிடணும்ல?
சோர்வுடன் கண்களை மூடினாள். பின், சாரதியை மொபைலில் கூப்பிட்டாள்.
சாரதி கட் பண்ணிவிட்டு, மீட்டிங் என்று மெஸேஜ் அனுப்பியிருந்தான்.
ஜனனிக்கு ஏமாற்றமாயிருந்தது. கண் மூடி பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தாள். அப¢பொழுது சாரதி கூப்பிட்டான்.
ஹலோ... ஜனனி...
ம்..
இப்ப எப்படி இருக்கு?
ரொம்ப முடியல சாரதி.
சாப்டியா?
பிடிக்கல.
என்னம்மா, இப்படி சொன்னா எப்படி?
சாரதி...
சொல்லும்மா...
எனக்கு சரியாகற வரைக்கும் நீங்க சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்களேன். ஸ்ரீக்கு உதவியா இருக்கும்.
சரிம்மா.
நான் உங்கள ரொம்ப காயப்படுத்திட்டேன், சாரி.
ஐயோ, நான்தான்மா சாரி சொல்லணும். ஸ்ரீயை வளர்க்கறதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது சுயநலமோன்னு தோணுது. என் வசதிக்காக உன்னை கஷ்டப்படுத்தறனோன்னு தோணுது. எது எப்டியோ? இப்ப எதுக்கு அதெல்லாம் பேசி கஷ்டப்படணும்? சூடா சாப்பிட்டு தூங்குமா, நான் சீக்கிரம் வந்துடறேன்.
மொபைல் கட் ஆனது.
ஜனனிக்கு கஷ்டமாக இருந்தது. இன்று முதல் எந்த விதத்திலும் சாரதியை தான் கஷ்டப்படுத்திவிடக் கூடாது என்று நினைத்தாள். சாப்பிட்டு, மாத்திரை போட்டு, திரும்பவும் தூங்கி விட்டாள்.
மாலை வீட்டிற்கு வந்தவுடன் ஜனனி முடியாமல் படுத்திருப்பதைப் பார்த்து ஸ்ரீயின் முகம் வாடிவிட்டது. பின்பு தானே தன் வேலையெல்லாம் முடித்தான்.
6 மணிக்கு சாரதி வீட்டுக்கு வந்தான். ஜனனியிடம் வந்து, எப்படி இருக்குமா இப்ப? என்று தன் புறங்கையை அவள் நெற்றியில் வைத்தான். பதறிப் போய் கையை எடுத்து விட்டு உடனே தன் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி விவரம் சொன்னான். அடுத்த ஒரு மணி நேரத்தில், ஒரு டாக்டரும், நர்ஸ§ம் வந்து அவளை செக் பண்ணிவிட்டு, மாத்திரைகள் எழுதி, ஊசியும் போட்டார்கள். அவள் ரத்தத்தையும் டெஸ்டுக்காக எடு¢த்துச் சென்றனர். அடுத்த நாளே, டைஃபாய்டு என்று ரிசல்ட் வந்தது. சாரதி, ஜனனியின் பெற்றோர், தாத்தா, பாட்டி அனைவருக்கும் ஃபோனில் விஷயத்தைச் சொன்னான்.
கலகலன்னு சிரிச்சிகிட்டு, துறுதுறுன்னு வளைய வந்துக்கிட்டு இருந்த பொண்ணு இப்படி படுத்துக் கிடப்பது கஷ்டமா இருக்கு என்று லட்சுமியம்மா வருந்தினார்கள்.
மறுநாள் காலை எல்லாரும் வந்துவிட்டார்கள். சாரதியின் அப்பாவும் வந்துவிட்டார். ஸ்ரீ குழந்தையாக இருப்பதால் அவனுக்கும் ஜூரம் வந்தால் கஷ்டம் என்பதால், பாட்டியும் லலிதாவும் ஜனனியை தங்கள் வீட்டிற்கு அழைத்தார்கள்.
தாத்தா சொன்னார், ஜனனி உன் இஷ்டம்மா, நீயே முடிவு பண்ணு.
அவள் மெதுவாக சாரதியின் அப்பாவைப் பார்த்துக் கேட்டாள்.
அங்கிள், உங்களோட வந்து, நம்ம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிடறேனே? உங்களுக்கு ஏதாவது சிரமமா இருக்குமா அங்கிள்?
சாரதியின் முகத்தில் அப்படியரு ஒளி.
என் மருமகளைப் பாத்துக்கறதை விட எனக்கு வேறென்ன முக்கிய வேலை? நாளைக்கே நாம கிளம்பிடலாம்.
லஞ்சுக்குப் பிறகு தாத்தா, பாட்டி, லலிதா, சபா எல்லாரும் கிளம்பினார்கள்.
தங்கிட்டுப் போகலாமே? என்றான் சாரதி.
பரவாயில்ல மாப்ளே, நாங்க கிளம்பறோம்னார் சபா.
சாரதியின் அப்பா பிரஸாத், ஸ்ரீயுடன் மாடிக்குப் போய் விட்டார். ஜனனி சாரதியைப் பார்த்தாள்.
சாரதி...
சொல்லும்மா...
எனக்கு ரொம்ப முடியல.
புரியுதுடா. உனக்கு எப்படி உதவி பண்றதுன்னு தெரியல.
சாரதி, நேத்து எனக்கு ஆகாஷ் ஞாபகம் வந்துடுச்சு. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல என்று கண்கலங்கினாள்.
சாரதிக்கு அப்பாடா என்றிருந்தது.
ஏன்மா? இதுல நான் தப்பா நினைக்க என்ன இருக்கு? ஆகாஷை என்னாலேயே மறக்க முடியல. எதையுமே வற்புறுத்தி மறக்கணும்னு முயற்சி பண்ணாதே. காலம் எல்லாத்தையும் மாற்றும். காத்திருப்போம். நான் எப்பவும் உனக்கொரு நல்ல நண்பனா இருப்பேன். கவலைப்படாம தூங்கு என்று சொல்லி, ஜனனியின் தலைமுடியை நேசத்துடன் வருடிவிட்டு எழுந்தான்.
புன்னகையுடன் ஜனனி கண் மூடினாள்.
இருவருமே நிம்மதியாக உணர்ந்தார்கள்.
தணிந்தது தவிப்பு, பெருகியது நேசம்!

24

மறுநாள் ஜனனி தன் மாமனாருடன் தஞ்சாவூர் சென்று, அவர்கள் ஹாஸ்பிட்டலில் சேர்ந்தாள். நல்ல சிகிச்சையும், கவனிப்பும் இருந்ததால் நான்கு நாட்களில் சரியாகி விட்டாள். ஆனால், ஓய்வு தேவை என்பதால் அங்கேயே இருந்தாள்.
அந்த நாட்களில் சாரதி பற்றி பல விஷயங்களை அவள் அறிய நேர்ந்தது. அவன் ஸ்கூல் முதல் காலேஜ் வரை எல்லாவற்றிலும் முதல். மிகவும் நன்றாக பியானோ வாசிப்பான். அவன் அம்மா இறந்த பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டான். டேபிள் டென்னிஸ், வாலிபால் இரண்டிலும் சேம்பியன். வீட்டில் தானே வரைந்த நிறைய படங்கள் வைத்திருக்கிறான். அவை மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தன. அவற்றில் கலை நுணுக்கங்கள் தெரிந்தன.
இவை ¢எல்லாவற்றிற்கும் மேலாக, நிறைய மனிதநேய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறான். நிறைய மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடை வாங்கித் தருகிறான். நிறைய பெண்கள் சிறு தொழில் செய்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும், உதவிகள் செய்கிறான். பல ஏழைகளுக்கு, அறுவை சிகிச்சைகளுக்கு பண உதவியுடன் பக்க பலமாகவும் இருக்கிறான். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசளித்து, நடச் செய்து ஒரு பசுமைப் புரட்சியே செய்து வருகிறான். நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறான்.
ஜனனிக்கு பிரமிப்பாக இருந்தது. ஓர் உண்மையை அறிந்ததும் அசந்து விட்டாள். எதையும் தான் செய்வதாக உதவி பெறுபவர்களுக்கே தெரியாமல் செய்கிறான்.
சாரதி எவ்வளவு உயர்ந்த மனிதன். உடனே, சாரதியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. 
அந்த வார இறுதியில் சாரதியும், ஸ்ரீயும் தஞ்சாவூருக்கு வந்து ஜனனியை அழைத்துப் போவதாக இருந்தார்கள். இந்த இரண்டு வாரங்களும் சாரதியும் ஸ்ரீயும் நெருங்கிய நண்பர்கள் போல் ஆகிவிட்டார்கள். ஸ்ரீக்கு 8 வயது ஆவதால் நிறைய ஏன்? எப்படி? கேள்விகள். சாரதியும் விளக்கினான்.

லட்சுமி அம்மா கேட்டார்கள், தம்பி, ஜனனி அம்மா எப்படி இருக்காங்களாம்?
நல்லாயிருக்காளாம். வெள¢ளிக்கிழமை நானும், ஸ்ரீயும் கிளம்பறோம்மா. ஞாயிற்றுக்கிழமை வந்துடுவோம். செக்யூரிட்டி ரெண்டு நாள் நம்ம வீட்ல இருப்பார்.
சரிங்க தம்பி, நான் பாத்துக்கறேன். அப்புறம், - நான் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?
கேளுங்கம்மா.
எத்தனை நாளு தம்பி இப்படி ரெண்டு பேரும் தனியாவே இருப்பீங்க?
லட்சுமி அம்மா, வாழ்க்கைங்கறது வெறுமனே ரெண்டு பேர் கட்டாயத்தின் பேரில் கடமையேன்னு சேர்றது இல்ல. இது ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அது இயல்பா தானா கனியணும். வற்புறுத்தினா, அது அடிச்சு பழுக்க வைக்கிற மாதிரி ஆயிடும். அப்பறம் என்னைக்குமே கனியாது, வெம்பிப் போயிடும். நமக்கு மேல ஒருத்தர் ரிமோட் வச்சிக்கிட்டு நம்மள எல்லாம் இயக்கிக்கிட்டு இருக்கார்ல, என்ன செய்யறார்னு பாப்போமே!
இந்த வயசுல உங்களுக்கு எவ்வளவு ஞானம் தம்பி? ஜனனி கூட ரொம்ப நல்லவங்களா இருக்காங்க தம்பி.
ஆமாம்மா. அதோட ரொம்ப திறமையான பொண்ணு. நிறைய கதை சொல்லியே நம்ம ஸ்ரீயை நிறைய விஷயங்கள்ல தைரியமா, உறுதியா, தெளிவா இருக்க கத்துக்கொடுத்திருக்கா. ஸ்ரீ இப்பவெல்லாம் ரொம்ப தன்னம்பிக்கையோட செயல்படறான்.
ஆமாம் தம்பி, நான்கூட கவனிச்சேன்.
சரிங்கம்மா, நான் இப்ப ஜனனியோட தாத்தா வீட்டுக்குப் போறேன். சும்மாதான், பேத்தியை நினைச்சு கவலைப்படுவாங்க. நேர்ல போய் விவரம் சொல்லிட்டு வந்தேன்னா அவங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.
போயிட்டு வாங்க தம்பி. நான் ஸ்ரீயை பாத்துக்கறேன்.
சாரதி கிளம்பி தாத்தா வீட்டை அடைந்தான். மாலை 6 மணி. தாத்தா ஹாலில் உட்கார்ந்து மகாராஜபுரம் சந்தானத்தின் கிருஷ்ண கானத்தைக் கண் மூடி, தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.
சாரதி உள்ளே போய், தாத்தா, நான் வந்து உங்களை தொந்தரவு பண்ணிட்டனா? என்று கேட்டான்.
வாங்க மாப்ள, நீங்க வர்றது எங்களுக்கு சந்தோஷம்தானே என்றவா«ற பாடலை நிறுத்தினார்.
ஏன் தாத்தா மணி 6 ஆயிடுச்சி. முக்கால்வாசி வீடுகள்ல இந்த நேரம் ஆனா டி.வி. முன்னாடி உட்காந்துடுவாங்க. 9.30 வரை அங்க, இங்க திரும்ப மாட்டாங்க. நீங்க என்னன்னா பாட்டு கேக்கறீங்க. பாட¢டி என்னன்னா பகவத் கீதை படிக்கிறாங்க.
என்னப்பா சாரதி, வயசான காலத்துல என்னத்த சீரியல் பாக்கறது? அது அறியாதவங்களோட செயலி¢ல்லையா?
பட்டினத்தார் பாடுவார்,
‘’ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல
பெண்டிர் சதமல்ல, பிள்ளைகள் சதமல்ல
நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே’’
அது மாதிரி சிவ சிவான்னு நினைக்கிறதை விட நிறைவு தரக்கூடியது வேறு என்னவா இருக்க முடியும்?
கிரேட¢ தாத்த£!
அங்கு வந்த பாட்டி சாரதியிடம் காஃபியை கொடுத்துவிட்டு கேட்டாள்,
என்ன, தாத்தாவைப் பாராட்டற மாதிரி தெரியுது?
ஆமாம் பாட்டி, நீங்க சொல்லுங்க, நீங்களும் சிவனேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா?
எல்லாம் நம்ம திருப்திக்குதானேப்பா.
‘’ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்’’
அதனால, சிவனைக் கும்பிடறேன். ஆனா அவர்கிட்ட நான் ஒண்ணும் கைலாசத்தில சீட்லாம் ரிசர்வ் பண்ணல. எந்த ஆசையோ, பற்றோ இல்லை. நம்மால முடிஞ்ச நல்லத செஞ்சிட்டுப் போவோம் என்றாள்.
சூப்பர் பாட்டி!
ஓ, தாத்தா கிரேட். நான் சூப்பரா? என்று பாட்டி சிரித்தபொழுது அவன் அதிசயப்பட்டான்.
சரி பாட்டி, கிளம்பறேன். வர்ற ஞாயிற்றுக்கிழமை, ஜனனியைக் கூட்டிட்டு வந்துடுவேன.
ரொம்ப சந்தோஷம் என்றார்கள் பாட்டியும், தாத்தாவும்.
சாரதி நினைத்தான், 
பழுத்த பழங்கள் இந்த தம்பதியரா? இவர்கள் சொற்களா?


25

வெள்¢ளிக்கிழமை நைட் சாரதியும், ஸ்ரீயும் வந்துவிட்டார்கள். ஜனனி நிறைய இளைத்திருந்தாள். சாரதிக்குக் கஷ்டமாக இருந்தது. ஒரு மணி நேரம் ஸ்ரீயும், ஜனனியும் ஒரே கொஞ்சல்தான். ஒருவரை ஒருவர் விடவேயில்லை. பின், வந்த களைப்பில் ஸ்ரீ தூங்கிவிட்டான்.
ஜனனி பால்கனியில் உட்கார்ந்து நட்சத்திரங்களை ரச¤த்துக் கொண்டிருந்தாள். சாரதி வந்து உட்கார்ந்தான்.
சொல்லு ஜனனி, எப்படியிருக்க?
பரவாயில்ல, நீங்க?
நல்லாயிருக்கேன். ஜனனி அப்பாவுக்கு உன்னைப் பற்றி ஒரே பெருமை. எல்லா பேஷன்ட்ஸ் கிட்டயும் அன்பா இருந்தியாம். நிறைய ஹெல்ப் பண்ணியாம். குழந்தைகளுக்கெல்லாம் கதை சொல்லி சாப்பிட வச்சியாம். அதோட இல்லாம, நீ நல்ல நிர்வாகியாம். சொல்லும்போது பார்க்கணுமே, என்ன சந்தோஷம் அவர் முகத்தில்!
ஜனனி சிரித்துக்கொண்டே சொன்னாள், போதும் போதும். உங்களப் பத்தியும் நான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்.
என்ன இருக்கு தெரிஞ்சுக்கிறதுக்கு?
ம்... நீங்க பயங்கர வாலாம். ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் எப்பவும் லாஸ்ட்டாம். கொஞ்சம் கூட கலையார்வம் கிடையாதாம். சமுதாயத்தைப் பத்தி அக்கறையே இல்லாதவராம்.
அவள் குறும்பை நமட்டுச் சிரிப்புடன் ரச¤த்தான் சாரதி.
அப்புறம்... மக்களெல்ல£ம் வேற பேசிக்கிட்டாங்க.
என்ன?
ம்... சாரதி சார் மாதிரி உள்ள ஒரு சாதாரண மனிதருக்கு ஜனனி மாதிரி அற்புதமான மனைவி கிடைச்சிருக்கிறது, கடவுள் அருளும், உங்க முன்னோர் செய்த புண்ணியமும்தானாம்.
சாரதி மௌனமாக இருந்தான்.
என்ன? ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க?
அவங்களுக்கெல்லாம் உண்மை தெரியாது. ஸ்ரீ போன பிறவியில் செஞ்ச புண்ணியம், நீ அவனுக்கு அம்மாவா கிடைச்சிருக்கன்னு.
சட்டென்று அமைதியானாள் ஜனனி. பின் கண்கலங்கிக் கேட்டாள்.
அப்ப நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா சாரதி?
சற்று மௌனமாயிருந்துவிட்டு ஒரு கையால் அவள் கையைப் பற்றினான், மறு கையால் அவள் முகத்தை நிமிர்த்தினான், என்னடா இப்படி கேட்டுட்ட? நீ எனக்கு எல்லாமுமேடா.
குரல் தழுதழுக்க தேங்ஸ் சாரதி என்றாள்.
நான் உனக்கு யார் ஜனனி?
சொல்லத் தெரியல சாரதி. ஆனால், நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்.
சாரதி கண்களில் ஒளியுடன் தேங்ஸ் மா என்றான்.
சரி இதுக்கு முன்னாடி நீ தஞ்சாவூர் சுத்திப் பாத்திருக்கியா?
இல்லையே...
அப்ப, நாளைக்கு பெரிய கோவில், பேலஸ்லாம் போலாமா?
ஹை, போலாமே, ஆனா அங்கிள் என்னை அலைய விடமாட்டாங்களே.
நான் சொன்னா விடுவார்.
எப்படி?
அவருக்குத் தெரியும், அவர் மருமகள் மேல இருக்கற அக்கறையை விட எனக்கு என் மனைவி மேல அதிக அக்கறை இருக்கும்னு.
ஓகே, தட்ஸ் ஃபைன், குட்நைட்.
குட்நைட்.
அடுத்த நாள் காலை சாரதி, அப்பாவிடம் கேட்டான். அப்பா, நான் ஜனனியையும் ஸ்ரீயையும் கோவிலுக்கும், பேலஸ§க்கும் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன்.
.........
என்னப்பா?
நானும் வரலாம்னு யோசிச்சேன்.
ஹை, ரியல்லி அங்கிள்? வாங்க அங்கிள் என்றாள் ஜனனி.
எல்லோருமாக கோவிலுக்குப் போனார்கள். சாரதி கோவிலின் சிறப்புகளை சிறிய கதை போல ஸ்ரீக்கு சொல்லினான். ஸ்ரீ, பெரிய நந்தி, கோபுரம், சிவலிங்கம் எல்லாவற்றையும் அதிசயமாகப் பார்த்தான்.
கோவிலில் சிறிது நேரம் உட்கார்ந்தார்கள். அதைக் கட்டிய ராஜராஜ சோழன் பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது சாரதி சொன்னான், அப்பா, ஜனனி கூட உங்கள மாதிரியே ஒண்ணு சொன்னா...
அது என்னப்பா?
அவளுக்கும் என்னைப் பார்க்கும்போது பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் ஞாபகம் வருதாம்.
ஓஹோ, அப்படியா? பார்த்தியா, ‘’க்ரேட் பீப்பிள் திங்க் அலைக்‘’ 
ஹேய், அங்கிளும் நான் சொன்னதையே சொல்றாங்க பாருங்க என்று சந்தோஷமாக ஆர்ப்பரித்தாள் ஜனனி.
சரி, சரி மாமனாரும், மருமகளும் ஒரு கட்சியா? வாடா ஸ்ரீ நானும், நீயும் ஒரு கட¢சியா இருப்போம்.
சரி, என்று தலையாட்டி அப்பாவுக்கு கைகொடுத்தான் ஸ்ரீ.
சரிம்மா நீ சொல்லு, உனக்கு ஏன் இவனைப் பார்த்தா அருள்மொழி ஞாபகம் வந்துச்சி?
சற்று யோசித்துச் சொன்னாள், நிறைய விஷயத்துல ரெண்டு பேருக்கும் ஒற்றுமை இருக்கிறதா தோணுச்சி அங்கிள்.
அப்படியா, என்னன்னு சொல்லு?
அங்கிள், அருள்மொழி வர்மனைப் பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க. அருள்மொழி வெளியில பார்க்க கொஞ்சம் சீரியஸான மனிதர் மாதிரி தோன்றும். ஆனா உள்ளுக்குள்ளே நிறைய குறும்பும், துடிப்பும் இருக்கும். எல்லாத்தையும் ரசிக்கிற தன்மை இருக்கும். அவர் எதுலயும் பற்று வைக்க மாட்டார். எந்த ரிஸ்க்கையும் சாதாரணமாக சமாளிக்கக் கூடியவர். மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர். அசாதாரண செயல்களைச் செய்துவிட்டு சாதாரணமாக தெரிபவர். முகத்துல எப்பவுமே ஒரு தேஜஸ் தெரியும். எல்லாத்துக்கும் மேலே...
என்னம்மா?
அவர் தன் மனைவியை அளவுக்கு அதிகமா நேசித்தவர். மனைவிக்காக எதையும் தியாகம் செய்வார்.
ஹ, ஹா... அப்படி போடும்மா. என் பிள்ளையும் அப்படிதானா?
சாரதியோ அவ¬ள வைத்த கண் வாங்காமல் அதிசயமாகப் பார்த்தான்.
பின்பு பேலஸ¤லும் பொன்னியின் செல்வனை அசை போட்டார்கள்.
ஜனனி கேட்டாள், அங்கிள் உங்களுக்கு எந்த கேரக்டர் ரொம்பப் பிடிக்கும்?
அநிருத்த பிரம்மராயர்.
என்ன அங்கிள், ஹீரோ ஹீரோயினெல்லாம் விட்டுட்டு இவர சொல்றீங்க?
கரெக்ட்மா. இவர் ஹீரோ இல்ல, ஆனால் கிட்டத்தட்ட டைரக்டர் மாதிரி. அவர் கீ பெர்ஸன் மா. இந்தக் கதையைப் பொறுத்தவரை அவர் ஆம்னிபொடென்ட் அன்ட் ஆம்னிப்ரெஸன்ட். சரி நீ சொல்லு, உனக்கு யாரைப் பிடிக்கும்?
எனக்கு பூங்குழலிதான் அங்கிள்.
நினைச்சேன், குட்.
உங்களுக்கு சாரதி?
எனக்கு வந்தியதேவன்தான்.
ஏன்?
அவன் வம்புல மாட்டிக்கிட்டா கூட நாம சிரிப்போம். அவன் அவசரம்கூட நம்மை ரசிக்க வைக்கும். அதெல்லாம் விட, அவன்தான் குந்தவை, பூங்குழலி, நந்தினி, ஆதித்த கரிகாலன், அருள்மொழி, சேந்தன்அமுதன், ஆழ்வார்க்கடியான்னு முக்கியமான கேரக்டர்களோட அதிகம் பழகுகிறவன். அவன் மூலமாதான் நாம நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுப்போம். அவன் மேல் உயிராய் இருந்த ஆதித்த கரிகாலனும், மணிமேகலையும் இறந்துடறாங்க. இருந்தாலும் வாழ்க்கையை பாஸிடிவா பார்க்கிறான்.
சூப்பர் சாரதி என்றாள் ஜனனி.
அன்று நைட், ஸ்ரீ தூங்கிய பிறகு சாரதியின் அப்பா, நான் உங்ககிட்ட பேசணும்னு சாரதி, ஜனனியிடம் சொன்னார்.
சொல்லுங்கப்பா.
சாரதி, ரெண்டு வாரம் போனதே தெரியல. எனக்கு ஒரு மகள் இருந்தா எப்படி இருப்பாளோ, அப்படியே இருந்தது இந்தப் பொண்ணு. அதோட என்ன ஒரு புத்திசாலித்தனம், உதவி செய்யற குணம், குறும்புத்தனம், பெருந்தன்மை...
போதும் அங்கிள்.
உண்மைதானம்மா?
அப்பா, உங்க சந்தோஷம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.
ஜனனி...
சொல்லுங்க அங்கிள்.
ஸ்ரீ வளர்ந்துகிட்டு இருக்கான். அவனை எல்லாவிதத்திலும் நல்லா வளர்க்கணும்.
ஷ்யூர் அங்கிள்.
அப்பறம்மா...
சொல்லுங்க அங்கிள்.
எழுந்து பால்கனியை விட்டு தாண்டியபடியே, சாரதியையும் பார்த்துக்கோம்மா, குட்நைட் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஜனனி ஸ்தம்பித்துப் போனாள்.
சாரதி, ஜனனியின் கையைப் பற்றி சில நொடிகளுக்குப் பிறகு ‘குட் நைட்மா’ என்று சொல்லி தன் ரூமிற்குப் போனான்.
அலைகடல் போல் இன்று அகக்கடலும் பொங்குவதேன்?

26

ஞாயிறு காலை 6 மணிக்கெல்லாம் சாரதி குடும்பத்துடன் கிளம்பி விட்டான். வழியில் ஸ்ரீ சைகையில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக, உதாரணத்தோடு விளக்கம் தந்தான். ஜனனி நடுநடுவே சில சுவையான கதைகளைச் சொன்னாள். பிறகு காலை சாப்பிட்டு விட்டு ஸ்ரீ தூங்கி விட்டான்.
ஏன் சாரதி, நீங்க ரொம்ப நல்லா பியானோ வாசிப்பீங்களாமே?
ஒரு காலத்துல...
இப்ப ஏன் வாசிக்கிறதில்லை?
என் அம்மாதான் என்னைக் கத்துக்கச் சொல்லி என்கரேஜ் பண்ணாங்க. அதோட நான் வாசிக்கும்போது மெய்மறந்து ரசிப்பாங்க. அவங்க போனப்புறம் வாசிக்கணும்னு தோணல.
சாரதி...
சொல்லு...
இசை ஞானம்கிறதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். அது எல்லாருக்கும் வராது. அப்படியே வந்தாலும் அதை நல்லவிதமா பயன்படுத்தறவங்க குறைஞ்சிட்டாங்க. இசையோட தாத்பர்யமே அதை கேக்கறவங்கள பரவசப்படுத்தறதுலதான் இருக்கு. ஸோ, நீங்க திரும்ப வாசிங்க ப்ளீஸ்...
புன்சிரிப்புடன் ஆமோதித்தான்.
குஷியாக தேங்க் யூ என்றாள்.
நம்ம ஸ்ரீக்கு படிக்கிற பழக்கத்தைக் கொண்டு வரணும் சாரதி.
ஆமாம், நான்கூட நினைச்சேன். படிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காதுங்கறத அவன் அனுபவிச்சிட்டான்னா அப்பறம் விடமாட்டான். ஆனா, இப்பல்லாம் படிக்கிற பழக்கமே குறைஞ்சிடுச்சு பசங்ககிட்ட.
அம்மா, அப்பா படிச்சால்ல பிள்ளைங்க படிக்கும்?
‘அதைச் சொல்லு’ என்று சிரித்தான் சாரதி.
சிறிது நேரம் தனக்குப் பிடித்த இடங்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள் என்று பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சி.டி.யில் பாட்டு போட்டான். பாட்டு கேட்டுக்கொண்டே ஜனனியும் அப்படியே தூங்கிப் போனாள். சாரதி, டிரைவருக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு கார் ஓட்டினான். மதிய சாப்பாட்டுக்கு சென்னைக்கு வந்து விட்டார்கள்.
லட்சுமி அம்மா, ஜனனி இளைத்து விட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டார்கள். ஸ்ரீயும் ஜனனியும் அடுத்த நாள் ஸ்கூலுக்கு தேவையானதெல்லாம் எடுத்து வைத்தார்கள்.
அடுத்த நாள் ஸ்ரீயை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு தானும் கிளம்பினாள். சாரதிக்கு லஞ்ச் பேக் பண்ணப் போகும்போது லட்சுமி அம்மா சொன்னார்கள்.
தம்பி இன்னைக்கு ஆபீஸ் போகலையாம்.
ஏன்?
தெரியலம்மா.
உடம்புக்கு ஒண்ணுமில்லையே லட்சுமி அம்மா?
அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா, முகம் வாடி இருக்கு.
ஓ, என்னவாயிருக்கும்?
மெதுவாக படியேறினாள். பாதி ஏறும்போது லட்சுமி அம்மா கூப்பிட்டார்கள்.
என்னம்மா?
லட்சுமி அம்மா காலண்டரைப் பார்த்தபடியே சொன்னார்கள். இன்னைக்கு சாரதி அய்யாவுக்கும், மஞ்சு அம்மாவுக்கும் கல்யாண நாள். அவங்க இருக்கும்போது பெரிய பார்ட்டியே ஏற்பாடு பண்ணிடுவாங்க. வீடு ஒரே கலகலன்னு இருக்கும்.
ஓ, ஜனனிக்கு மனது வலித்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள். மனதில்லாமலே வேலைக்குக் கிளம்பி விட்டாள். இரண்டு வாரங்கள் வராததால் நிறைய வேலைகள் இருந்தன. மதியம் லட்சுமி அம்மாவிற்கு ஃபோன் பண்ணி கேட்டாள்.
காலைலேர்ந்து தன் ரூமை விட்டு வெளியில வரலைம்மா. ஜனனி துணுக்குற்றாள். உடனே கிளம்ப வேண்டும்போல் தோன்றியது. ஆனால், முக்கியமான பொறுப்பில் உள்ளவர்களால், தன் சொந்த விஷயத்திற்காக நினைத்த நேரமெல்லாம் வீட்டிற்கு கிளம்ப முடியாது. அதுவும் அன்று மீட்டிங் வேறு இருந்ததால் 7 மணிக்குதான் வீட்டிற்கு வந்தாள்.
சாரதி மதியம் ஒரே ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடித்தான் என்று லட்சுமி அம்மா சொன்னார்கள். நைட் 10 மணியாகியும் சாரதி சாப்பிட வரவில்லை.
டிஃபன் எடுத்துக்கொண்டு ஜனனி, சாரதியின் ரூமிற்குப் போனாள். சாரதியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள். அவன் மடியில் மஞ்சுவின் ஃபோட்டோ இருந்தது. ஜனனியைப் பார்த்தவுடன் சட¢டென்று ஃபோட்டோவை டீப்பாயில் வைத்துவிட்டு, கட்டாயப்படுத்தி வரவழைத்த புன்னகையுடன்,
‘வா ஜனனி’ என்றான்.
ஜனனி சாரதியின் பக்கத்தில் போய், சாரதி, ஐ ஆம் ஸோ சாரி, உங்க உணர்வுகள் எனக்குப் புரியுது. அதுக்காக ஒண்ணுமே சாப்பிடாம இருந்தா எப்படி? ப்ளீஸ் எனக்காக சாப்பிடுங்க என்றபடியே இட்லியை சாம்பாரில் நனைத்து அவன் வாயில் ஊட்டினாள். நெகிழ்ச்சியுடன், கலங்கிய கண்களுடன் அவள் ஊட்டுவதைக் கூடத் தடுக்கத் தோன்றாமல் சாப்பிட்டான். தண்ணீர் குடித்துவிட¢டுச் சொன்னான்.
தேங்ஸ் ஜனனி.
ஆ... அதெல்லாம் முடியாதுப்பா, உங்களுக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா?
புரியலையே..
ம்... ஒரு கம்பெனி எம்.டி. இவ்வளவு அசமந்தமா இருந்தா எப்படி? என்று அங்காய்த்தாள்.
அவன் முகத்தில் முறுவல் எட்டிப் பார்த்து.
சொல்லுடா..
நானும் காலைலேர்ந்து ஒண்ணும் சாப்பிடல.
அச்சச்சோ, ஏம்மா?
லட¢சுமி அம்மாவ கேட்டேன். நீங்க சாப்பிடலைன்னாங்க. என்னமோ மனசே வரலை சாப்பிடறதுக்கு.
அடக் கடவுளே, ப்ளீஸ் உடனே சாப்பிடு.
ஆ... அதான் கேட்டேன். எல்லாருக்கும் ஒரே நியாயம்தானே? என்றாள் கண்களில் குறும்பு மின்ன.
உடனே கண்கள் பளிச்சிட சாரதி எழுந்து அவள் நெற்றியில் இதழ் பதித்து தோ வர்றேன் என்று கீழே சென்றான்.
ஜனனிக்குள் ஏதோ பரவியது. அழுகைகூட வந்தது. கட்டுப்படுத்த முடியவில்லை. சாரதி வருவதற்குள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
அங்கு வந்த சாரதி சிரித்துக்கொண்டே அன்புடனும் அக்கறையுடனும் ஊட்டினான். சந்தோஷமாக சாப்பிட்டாள்.
இப்போ என்னோட முறை, தேங்ஸ் என்றாள்.
அவன் சிறிதாக அழகாக சிரித்தான். பின் இரண்டுபேரும் மொட்டை மாடியில் உட்கார்ந்தார்கள்.
சாரதி, நான் பாடட்டுமா?
சாரதி ஆச்சரியமாகப் பார்த்தான்.
இல்ல, பாரதிதாசன் கூட சொல்லியிருக்கார்ல, துன்பம் நேரும்போது யாழ் வாசிக்கணும்னு. எனக்கு வாசிக்கத் தெரியாது. ஸோ, நான் பாடறேன். நான் பாடறதால உண்டாகிற கஷ்டம் உங்க கஷ்டத்தைக் குறைச்சிடும்.
சிரித்துக்கொண்டே ‘பாடு’ என்றான்.
ஆனா, ஒரு கண்டிஷன்.
என்ன?
நீங்க நிறுத்துன்னு சொல்ற வரைக்கும் பாடிக்கிட்டே இருப்பேன்.
ஹ...ஹ...ஹ...
‘எப்படிப் பாடினாரோ? ‘என்ன சொல்லி அழைத்தால் நீ வருவாயோ?’ என்று பாடி விட்டு, பாரதிக்குத் தாவினாள்.
‘மனதில் உறுதி வேண்டும்‘
‘சின்னஞ்சிறு கிளியே’
‘எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நானென்றான்’ என்று பாடினாள்.
ஒரேயடியாய் உருகிவிட்டான் சாரதி. ஜனனியின் கைகளைப் பற்றி தேங்ஸ் என்றான்.
பின் இரண்டு பேரும் உள்ளே வந்தார்கள்.
சாரதிக்கு எதிரில் உட்கார்ந்து நேராகப் பாரத்தாள்
சாரதி...
சொல்லுடா...
கொஞ்சம் கொஞ்சமா நீங்க என் மனசு முழுக்க நிறைஞ்சிட்டீங்க. ஆனா உங்களுக்கு... நீங்க... என்று கண் கலங்கினாள்.
ஜனனி, நீயும் என் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவி நிக்கிற. அதான் மஞ்சுகிட்ட கூட மானசீகமா மன்னிப்புக் கேட்டுக்கிட்டிருந்தேன் என்று சொல்லும்போது அவளும் நெகிழ்ந்து போனாள்.
அன்பு, நேசம், பரவசம், மௌனம்...
இதயங்கள் இணைந்தன. மனங்கள் கலந்தன!


27

ஜனனியின் மனதிற்கு நிறைவாக இருந்தது. மறுநாள் காலை சாரதி, ஜனனியை உல்லாசமாகப் பார்த்தான். இவள் கண்டும் காணாதது போல் தன் வேலைகளைப் பார்த்தாள்.
பின்பு வேலைக்குக் கிளம்பறப்போ, வர்றேன் லட்சுமி அம்மா, சுந்தரத்துக்கிட்ட சொல்லி, ரெண்டு ஆள போட்டு, கீழே என் ரூம்ல இருக்கிற திங்ஸ் எல்லாம் மாடி ரூமுக்கு மாத்திடுங்க.
லட்சுமி அம்மாவிற்கு மகிழ்ச்சி. எல்லாம் அவன் செயல்னு கடவுளுக்கு நன்றி சொன்னார்கள்.
அன்று நைட் அம்மா, அப்பா ரெண்டு பேரும் தன்னுடன் இருப்பதைப் பார்த்து ஸ்ரீ ரொம்ப சந்தோஷப்பட்டான். அவன் மகிழ்ச்சியைப் பார்த்து சாரதி, ஜனனியின் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கியது. ஸ்ரீ தூங்கிய பிறகு சாரதி தயங்கியபடியே ஜனனியிடம் சொன்னான்.
ஜனனி, நாங்க குழந்தையில்லாம வாழ்க்கையில் ஏங்கினப்போ ஸ்ரீ எங்களுக்கு வரமா வந்தான். இப்போ நமக்கும் அப்படித்தான் இருக்கான். ஆனா, எல்லாப் பெண்களுக்கும் இருக்கிற, தான் அம்மாவா ஆகணுங்கிற ஆசை உனக்கும் இருக்கும். ஆனால்...
ஜனனி புன்னகைத்தபடியே சொன்னாள்,
சாரதி, சுமந்து பெத்தால்தான் பிள்ளையா? ஸ்ரீயை என் மனசில் வச்சிருக்கேன். ஒளவையார், காரைக்கால் அம்மையார்லாம் எல்லாருக்கும், ஏன் கடவுளுக்கே அம்மாவானவங்க. அவ்வளவு ஏன்? நம்ம காலத்திலேயே பார்த்தோம்னா, அன்னை சாரதாவும், அன்னை தெரஸாவும் எல்லாருக்கும் அம்மாவா இருந்தாங்க. ஸோ, நீங்க இதெல்லாம் நினைச்சு மனச குழப்பிக்காதீங்க. நம்ம குழந்தை ஸ்ரீதான். மற்றபடி நம்மால முடிஞ்ச உதவிய தேவையான குழந்தைகளுக்கு செய்வோம். சரியா?
ரொம்ப சரிம்மா...
மனம் ஒத்துப்போன தம்பதியாயினர் சாரதியும் ஜனனியும். இவர்கள் வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடை போல் சென்றது. இருவருமே நிரம்பப் படித்த, பணிவான, பண்பாளர்கள். பாதி ரசனைகள், விருப்பங்கள் ஒத்துப்போயின. மாறுபட்ட ரசனைகளில், ஒருவரை ஒருவர் ஆக்ரமிப்பு நடத்தாமல், அடுத்தவர் உணர்வுகளை மதித்தார்கள். நேசம்ங்கற பெயரில் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்த நினைக்கவில்லை. மொத்தத்தில் சொல்லப் போனால், மிகவும் அழகாக, நிறைவாக, பயனுள்ள வகையில் குடும்பம் நடத்தினார்கள்.
அப்பா, அம்மாவிடம் குழந்தை ஸ்ரீ நிறைய கற்றுக்கொண்டான். அவனை நல்ல திறமையான மாணவனாக மட்டுமில்லாமல், தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீது அக்கறை கொண்டவனாகவும் வளர்த்தார்கள்.
சந்தோஷமும், கடமைகளும் நிறைய இருக்கும்போது வருஷங்கள் நிமிஷங்களாகும் என்பது அனுபவித்த எல்லாருக்குமே தெரியும். ஸ்ரீ 8வது வந்துவிட்டான். பேச முடியவில்லையென்றாலும், அவன் மாணவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்தான்.
ஜனனியின் பி.எச்.டிக்கான வைவா வந்தது. பல சிக்கலான கேள்விகளுக்கு பொறுமையாக, எளிமையான உதாரணங்களோடு விளக்கம் கொடுத்தாள். அன்று முதல் ஜனனி, டாக்டர் ஜனனி ஆனாள். சாரதியும், அவன் அப்பாவும் வந்தது ஜனனிக்கு மிகவும் சந்தோஷம். அன்று நைட் சாப்பிடும்போது சாரதியின் அப்பா லட்சுமி அம்மாவிடம் சொன்னார்.
அம்மா, இன்னையிலேர்ந்து என் மருமகள் டாக்டர் ஜனனி, தெரியுமா, லட்சுமி அம்மா சிரித்தபடியே சொன்னார்கள்.
ஐயா, நீங்க டாக்டர், உங்க மருமக டாக்டர், ஸ்ரீயை கூட டாக்டர்க்கு படிக்க வைக்கலாம். ஆனால் ஐயா, இந்தக் காலத்துல நிறைய படிச்சிட்டா, பணமும் சேர்ந்துடுது. தேவைக்கு அதிகமாகவே சம்பாதிக்கிறதால தலை, கால் புரியாம ஆடறாங்க.
அது பணக்காரங்களோட குறையில்லம்மா. தமிழ் வார்த்தைகள்லயே பார்த்தோம்னா லட்சம் வச்சிருந்தா லட்சாதிபதிங்கறாங்க. அதாவது கிட்டத்தட்ட அவங்கள கிரகங்கள் அளவுக்கு உயர்த்திடறாங்க. சுக்கிரனுக்கு அதிபதி, தனாதிபதின்னு சொல்லுவாங்கள்ல? அதுகூட பரவாயில்ல. கோடி ரூபா வச்சிருக்கறவங்கள கோடீஸ்வரன்னு சொல்றோம். அது எப்படி, எத்தனை கோடி வச்சிருந்தாலும் நம்மைக் காக்கும் ஈஸ்வரனின் பட்டத்தைக் கொடுக்கலாமா?
சூப்பர் அங்கிள், எப்படி இப்படியெல்லாம் தோணுது?
ஆ, மறந்துட்டேனே, சாரதி.
சொல்லுங்கப்பா.
எனக்குத் தெரிஞ்ச ஸ்பெஷலிஸ்ட், லண்டன்லேர்ந்து நாளைக்கு வர்றார். அவர்கிட்ட நம்ம ஸ்ரீக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருக்கேன். அவனைப் பேச வைக்க ஏதாவது சர்ஜரி பண்ணலாமான்னு பார்ப்போம்.
அப்பா...
சொல்லு...
அது அவனுக்கு எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் தராம இருக்கணுமே அப்பா?
பார்க்கலாம் சாரதி, உண்மைகளையும், யதார்த்தங்களையும் சவால்களையும் சந்திக்க இது அவனுக்கு ஒரு படியா இருக்கட்டுமே.
நான்கூட அதான் நினைச்சேன் அங்கிள். நீங்க கவலைப்படாதீங்க சாரதி. ஸ்ரீ இத நல்லா ஃபேஸ் பண்ணுவான். நிறைய நல்ல விஷயங்களையும், உண்மையான வெற்றி பெற்ற தலைவர்களுடைய சுயசரிதைகளையும் அவனுக்கு சொல்லியிருக்கேன். அதனால, அவன் சவால்களைக் கூட கவனமாகவும், யதார்த்தமாகவும் ஃபேஸ் பண்ணுவான்.
அதான்மா நானும் சொல்றேன். நிறைய வெற்றிகளையே தெரிஞ்சுக்கிட்டதாலே, வேற எதுவும் வந்தா?
நோ சாரதி, நாம நல்லதையே நினைப்போமே...
சரிப்பா.
சந்தோஷம் சாரதி.
அன்று இரவு ஒவ்வொருவருக்கும் ஸ்ரீயைப் பற்றி ஒவ்வொரு மாதிரி சிந்தனை.
எது சரி? ரியாலிஸம்? அல்லது ஆப்டிமிஸம்?

28

அடுத்த நாள் காலை தாத்தா ஸ்ரீயைக் கூப்பிட்டு வெளியில் சிட்அவுட்டில் உட்கார்ந்தார். இளங்காலை, சில்லென்ற தென்றல், சந்தன மல்லி, அடுக்கு மல்லிகளின் கலந்த வாசனை, சிறு தூறலில் ஏற்பட்ட மண்வாசனையுடன் போட்டி போட்டது. சாரதி பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். அப்பாவிற்கும், தன் மகனுக்கும் குட்மார்னிங் சொன்னான். அவர்களும் உட்கார்ந்தார்கள். செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த லட்சுமி அம்மாவிடம் சாரதி சொன்னான்.
லட்சுமி அம்மா, ஜனனியைக் கூப்பிடுங்க.
தோ தம்பி...
ஜனனியு¢ம் வந்து சாரதியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
ப்ரஸாத் பேரன் ஸ்ரீயின் தோளில் கைபோட்டுக் கொண்டு மிகுந்த நட்புணர்வுடன் பேசினார்.
ஸ்ரீ, உன்னை நினைச்சா எங்க எல்லாருக்கும் ரொம்பப் பெருமையா இருக்கு. நீ எல்லாத்துலயும் நம்பர் ஒண்ணா இருக்க. நீ எல்லாத்தையும் என்ஜாய் பண்றேன்னு நினைக்கிறேன்.
ஸ்ரீ மகிழ்ச்சியுடன் எஸ் னு தலையாட்டினான்.
ஓகே ஸ்ரீ, தட்ஸ் குட். என்னோட ப்ரெண்ட் ஒருத்தர் லண்டன்ல ஸ்பெஷலிஸ்டா இருக்கார். அவர் இன்னைக்குச் சென்னை வர்றார். அவர் நிறைய பேருக்கு சர்ஜரி செஞ்சு பேசற சக்தியை மீட்டுக் கொடுத்திருக்கார்.
டக்கென்று தலையை உயர்த்தி தாத்தாவைப் பார்த்தான் ஸ்ரீ. அவன் கண்களில் பேராவல் தெரிந்தது.
ப்ரசாத் தொடர்ந்தார், ஸ்ரீ உனக்காக நாளைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருக்கோம். அவர் நாளைக்கு உன்னை டெஸ்ட் பண்ணுவார். ஆனால், பேச வைக்க வாய்ப்பு இருக்கான்னு அவர்தான் சொல்லணும். நீ கடவுளை வேண்டிக்கோ. உன்னால பேச முடியும்னு பாஸிடிவ்வா திங்க் பண்ணு. ஒருவேளை இப்போதைக்கு முடியாது, சில வருஷங்களுக்குப் பிறகு முயற்சி பண்ணலாம்னு கூட டாக்டர் சொல்லலாம். அதைக்கேட்டு நீ ரொம்ப ஃபீல் பண்ணக் கூடாது.
சரி என்று தலையாட்டினான் ஸ்ரீ.
குட் பாய்.
அடுத்த நாள் டாக்டரிடம் காட்டுவதற்கு கிளம்பும்போது பிரஸாத் சொன்னார்.
ஜனனி, சாரதி ஆபீஸ்லேர்ந்து நேரா ஹாஸ்பிடல் வந்துடுவான். நீ என்னோட கிளம்பிடும்மா.
அங்கிள்
என்னம்மா...
நான் வரலை...
ஏன்?
நான் நம்ம வீட்லயே ப்ரே பண்ணிக்கிட்டு இருக்கேன். ப்ளீஸ் அங்கிள், நான் ஸ்ரீகிட்ட கூட சொல்லிட்டேன். அவனும் அதைப் பெரிசா எடுத்துக்கல.
சரிம்மா. ஆனா, ரொம்ப எக்ஸைட் ஆயிடாத.
ஓகே அங்கிள்.
ஹாஸ்பிடல் போகும்போது தாத்தா பேரனிடம் சொல்கிறார், ஸ்ரீ நம்ம உடம்பிலேர்ந்து வெளியே வர்ற வியர்வை, எச்சில், யூரின், மோஷன் எல்லாமே நாமே வெறுக்கற அளவுக்கு நாற்றம் அடிக்கும். ஆனால், கடவுள் ஒண்ணே ஒன்னை மட்டும் இனிமையா இருப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கார். அதுதான் நம்மோட வாயிலிருந்து வர்ற வார்த்தைகள். அது நம்மோட கண்ட்ரோல்ல இருக்கணும். நாம பேசும்போது மத்தவங்க மனசைப் புண்படுத்தற மாதிரி பேசக்கூடாது. நீ கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கோ. உனக்கு பேசற சக்தி வேணும். அதோடு, இன்சொற்களை மட்டுமே பேசணும்னு.
சரி என்று தலையாட்டினான் ஸ்ரீ.
ஹாஸ்பிடலில் சாரதி இருந்தான்.
ஸ்ரீயை தன் கையால் அணைத்து, நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டுச் சொன்னான், ஸ்ரீ உற்சாகமா இரு, கடவுள் பார்த்துப்பார்.
ஸ்ரீ புன்னகைத்தான்.
டெஸ்ட் முடியவே ரெண்டு மணி நேரங்கள் ஆயின. மேலும் ஒரு மணி நேரம் கழித்து டாக்டர் சாரதியை அழைத்துச் சொன்னார்.
சாரி மிஸ்டர் சாரதி. இப்ப அவனோட குரலை வரவழைக்க முடியல. ஆனால், எப்பவுமே முடியாதுன்னு கிடையாது. நாம இன்னும் சில வருஷங்களுக்குப் பிறகு ட்ரை பண்ணலாம்.
சாரதி அப்ஸெட் ஆனான். ஆனால், ஸ்ரீ யதார்த்தமாக ஏற்றுக்கொண்டான். அது மட்டுமில்லாமல், சாரதியை அணைத்து, முத்தமிட்டு சைகையில் ‘கம் ஆன், கடவுள் பார்த்துப்பார்’ என்றான்.
சாரதி கன்ட்ரோல் பண்ணிக்கொண்டு ஸ்ரீயை அணைத்துக் கொண்டான்.
பிரஸாத் ஜனனிக்கு ரிஸல்ட்டை சொன்னார். ஜனனி வெடித்து அழுதாள்.
ப்ளீஸ்மா, கன்ட்ரோல் யுவர்செல்ஃப்.
எப்படி அங்கிள்? அவன் என்ன பாவம் செஞ்சான்? கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார்? ஸ்ரீ எப்படி அங்கிள் இருக்கான்?
அவன் நல்லாயிருக்கான்மா.
ஓ, ஆனா, என்னால தாங்க முடியல அங்கிள் என்று அழுதாள்.
பிரஸாத் இயலாமையில் ‘பை’ சொன்னார். காரில் ஏறியவுடன் பிரஸாத் சொன்னா¢,
சாரதி...
சொல்லுங்கப்பா...
ஜனனி ரொம்ப அப்ஸெட் ஆயிருக்கா. கதறி அழறா. அவளைப் பார்த்துக்கோ. ஸ்ரீ இன்னைக்கு என்னோட இருக்கட்டும். நீ அவளுக்கு ஆறுதல் சொல்லுப்பா.
ஓகேப்பா, சாரதியின் மனம் கனத்தது. இவர்கள் வீட்டுக்கு வந்தபிறகும் ஜனனி வெளியில் வரவேயில்லை. லட்சுமி அம்மாவே பரிமாற எல்லாரும் ஏதோ கடமையேன்னு சாப்பிட்டார்கள்.
ஸ்ரீயும், பிரசாத்தும் கீழ் ரூமில் படுத்துவிட்டார்கள்.
சாரதி ரூமுக்குப் போய் படுத்துக்கொண்டிருந்த ஜனனியை மெதுவாகத் தொட்டான். அவள் நிமிர்ந்து பார்த்தாள். அழுது, அழுது அவளோட கண்கள் சிவந்திருந்தன. சாரதியின் கைகளைப் பிடித்தபடி, ‘’ஏன் சாரதி? ஏன் ஸ்ரீக்கு இப்படியெல்லாம் நடக்குது? நாம என்ன பாவம் பண்ணோம்?’’ என¢று அழுதாள்.
சாரதி ஜனனியைத் தன் மேல் சாய்த்துக்கொண்டு சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் தட்டிக் கொடுத்தான். பின்பு, ஜனனி, நீ இப்படி சின்ன குழந்தை மாதிரி அழலாமா? நம்மையெல்லாம் மீறின ஒரு சக்தி இருக்கு. அதன் கையில நாமெல்லாம் பொம்மைகள்தானே? நீ இப்படி மனசு உடைஞ்சு போகக் கூடாது. இனிமேதான் நாம இன்னும் உறுதியா இருக்கணும். ஸ்ரீயோட மனசுல, தன்னால் பேச முடியும்னு தன்னம்பிக்கையை ஊட்டணும். இன்னும் சில வருஷங்களுக்குப் பிறகு ட்ரை பண்ணலாம், வாய்ப்பு  இருக்குங்கறார் டாக்டர்.
‘உண்மையாவா?’ என்று கண்களில் ஆதங்கத்துடன் கேட்டாள் ஜனனி.
அவள் கையைப் பற்றி ‘பிராமிஸ்’ என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டான். அவன் அணைப்பிலேயே ஆறுதல் பெற்று தூங்கி விட்டாள்.
சாரதி மனதிற்குள் நினைத்தான், எவ்வளவு தைரியமான பெண் ஜனனி. இப்படி உடைந்துவிட்டாளே. இதுதான் தாய்மையோ? இவளுக்காகவாவது ஸ்ரீ பேச வேண்டும். 
இப்படி நினைத்தபடியே காலண்டரைப் பார்த்தான். அதில் குழந்தை குமரன் தந்தைக்கு உபதேசித்தான். அதையே சாரதி பாரத்துக்கொண்டிருந்தான். குமரனும் சாரதியையே பார்த்து ஏதோ சொல்வதுபோல் தோன்றியது. ‘’பெரிதினும் பெரிது கேள்’’ என்று தோன்றியது. ஆம், சாரதி குழந்தை குமரனைப் பாரத்து கேட்டான்,
‘’உன்னைப் போல் ஒருநாள் ஸ்ரீ எனக்கு உபதேசிக்க வேண்டும்.’’
எண்ணிய முடிதல் வேண்டுமே!




29

அந்த ஆண்டு கோடை விடுமுறையில் சாரதியின் ஆபீஸில் ‘டூர்’ ஏற்பாடு செய்திருந்தார்கள். சாரதியும், தன் குடும்பத்துடன் சென்றான். சுற்றுலா என்றாலே, ஆட்டம், பாட்டு என்றுதானே இருக்கும்? எல்லோரும் பாடும்போது ஸ்ரீ ஃபீல் பண்ணிவிடக் கூடாது என்பதால், ஜனனி கீபோர்டை எடுத்து வந்தாள். பஸ்ஸில் அனைவரும் பாடும்போது ஸ்ரீயும் உற்சாகமாக வாசித்தான். அதை எல்லோரும் என்ஜாய் பண்ணினார்கள். ஊட்டியின் இயற்கை அழகில் குதூகலமானான் ஸ்ரீ.
ஊட்டியில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பழக்கமாகி விட்டதால், ஸ்ரீயும், சாரதியும் 5 மணிக்கே எழுந்து விட்டார்கள். இருவரும் ரிஸப்ஷன் ஹாலுக்கு வந்து சூடாக டீ சாப்பிட்டார்கள். பிறகு சாரதி பேசத் தொடங்கினான்
ஸ்ரீ, பார்த்தியா? இயற்கை எவ்வளவு அழகாயிருக்குன்னு? நாமதான், பல காரணங்களுக்காக இயற்கையை கொஞ்சம், கொஞ்சமா இழந்துகிட்டிருக்கோம். சில தாவரங்கள், விலங்குகள், பறவைகளெல்லாம் அழிந்துகொண்டே வருது.
ஸ்ரீ கவனமாகக் கேட்டான்.
ஸ்ரீ, சில விஷயங்களை டெவலப் பண்றதோ, ப்ரிவெண்ட் பண்றதோ நம்ம கையில் இல்லை. ஆனா, நம்ம முன்னேற்றம், நம் சாதனை நம்ம கையிலதான் இருக்கு. உன்னைப் பொறுத்த வரைக்கும் ரெண்டு விஷயங்களை நீ அடையணும். ஒண்ணு, நீ நல்லா படிச்சு, எக்ஸலண்ட்டா வரணும். அடுத்தது உனக்கு பேச்சு வரணும்.
இனிமேல், நீ உன் சப்ஜெக்ட்டைத் தவிர மற்ற புக்ஸையும் படிக்கணும். ஏன்னா, ஒவ்வொரு புத்தகமும் நமக்குள்ள ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தும். அது உனக்கு நல்ல அனுபவமா இருக்கும்.
ஸ்ரீ ஆமோதிக்கும் வகையில் தலையாட்டினான்.
ஸ்ரீ, திருக்குறள் ரொம்ப சிம்பிளா இருக்கும். 1330ஐயும் மனப்பாடம் பண்றத விட, ஏதாவது ரெண்டு குறளைப் படிச்சு, ஃபாலோ பண்ணோம்னா வாழ்க்கையில நிச்சயமா வெற்றிதான்.
‘’தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்‘’
அதாவது ஒருத்தர் தன் இலக்கை அடையணும்னா, தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும். அப்படி செஞ்சா, கடவுளால முடியாத செயலைக் கூட நம்மால செய்ய முடியும். நமக்கு சக்ஸஸ் கிடைக்கும். அதனால, நீ தொடர்ந்து படிக்கணும்.
அடுத்தது, உன்னால பேச முடியணும். ஏதாவது அரிதானது கிடைக்கணும்னா தவம் செய்யணும். தவம்னா,  ஒரே விஷயத்துல நம் முழு கவனத்தையும் வைக்கணும். நீகூட, உனக்குப் பிடிச்ச சாமிகிட்ட முழுசா நம்பிக்கை வச்சி, ஆசைப்பட்டு வேண்டிக்கோ. உனக்கு ஒருநாள் நிச்சயம் கிடைக்கும். ஓகே?
ஓகே என்று தலையாட்டினான்.
பிறகு எல்லோரும் கிளம்பி சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். போட்டிங் போய்விட்டு, பிறகு பார்க் போனார்கள். அங்கே ஒரு கோடைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதில் நிறைய போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. அவற்றில் குழந்தைகள் கலந்து கொண்டார்கள். ஸ்ரீயும் வரைவதிலும், கருவி இசையிலும் சேர்ந்திருந்தான். போட்டியில் பல குழந்தைகள் ஜெயித்தார்கள். ஸ்ரீ கீ போர்டு வாசித்தான். மக்களின் கைத்தட்டு காதைப் பிளந்தது.
அடுத்ததாக, ஓவியம். இயல்பாக இருக்க வேண்டும் என்றார்கள். குழந்தைகள் வரைந்து, அதை திரையால் மூடியிருந்தனர். ஒவ்வொருவரும் இயற்கைக் காட்சி, பறவை, பூக்கள் என்று வரைந்து திரையால் மூடியிருந்தார்கள். ஸ்ரீயின் படத்தில் திரையை விலக்கியவுடன் ஒரு அழகான ஜன்னல் வரைந்திருந்தான். அதிலும் ஒரு பக்க ஜன்னல் சிறிது திறந்திருப்பதைப் போல் மிகவும் தத்ரூபமாக இருந்தது. அது இயல்பாக இருந்ததால் ஸ்ரீ முதல் பரிசு வாங்கினான்.
அன்று ஸ்ரீ லிட்டில் ஸ்டார் ஆகி விட்டான். பாராட்டிய அனைவரும், அவன் பேச முடியாதது குறித்து பரிதாபப்பட்டனர். அது ஜனனியை மிகவும் பாதித்தது. சாரதி, ஜனனிக்கு ஆறுதல் சொல்லி, சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.
அன்று நைட் காட்டேஜ் முன்பு கேம்ப் ஃபயர் ரெடி பண்ணி எல்லாரும் என்ஜாய் பண்ணினார்கள். அப்பொழுது அந்தாக்ஷரி விளையாடினார்கள். அதில் ஜனனியும், சாரதியும் உற்சாகமாகப் பாடியதை அனைவரும் ரசித்தார்கள். இந்தச் சுற்றுலா அனைவரின் மனதிலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அதுதானே சுற்றுலாவின் மகத்துவம்.
அன்று நைட், ஆடிப்பாடிய களைப்பில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். ஜனனிக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. ஜன்னல் அருகில் வந்து உட்கார்ந்து நிலவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். புரண்டு படுத்த சாரதி திடுக்கென தூக்கம் கலைந்து எழுந்தான். ஜனனியின் அருகில் வந்து உட்கார்ந்தான். ஜனனி முறுவலித்தாள்.
ஏன் ஜனனி, தூங்கல?
தெரியல, தூக்கம் வரல.
எனக்குத் தெரியும், உனக்கு ஸ்ரீயைப் பத்தி கவலை. அவன் ஒருநாள் நிச்சயமா உன்னை அம்மான்னு கூப்பிடுவான். இனிமையான எல்லாத்தையும் பேசுவான். தான் படிக்கறதையெல்லாம் உன்னோட டிஸ்கஸ் பண்ணுவான்.
ஜனனி கண் கலங்கினாள். பின் சொன்னாள், சாரதி, பொதுவா நான் தைரியமான பெண்தான். ஆனா, ஸ்ரீ விஷயத்துல நான் பலகீனமா இருக்கனோன்னு தோணுது.
சாரதி மௌனமானான். ஜனனியின் மனசை லேசாக்கணும்னு யோசித்தான்.
சாரதியின் மௌனம் ஜனனிக்கு கஷ்டமாக இருந்தது. தன் மனசை லேசாக்கிக்கணும்னு யோசித்தாள்.
சரி ஜனனி, நான் வரும்போது நிலாவையே பார்த்துக்கிட்டிருந்தியே, என்ன?
ம்... ரசிச்சேன். அப்புறம் யோசிச்சேன்.
முதல்ல சொன்னது சரி, ஒத்துக்கறேன். ரெண்டாவது நம்ப முடியலையே.
என்ன? என்று முழித்தாள் ஜனனி.
பாத்தியா, உனக்குப் புரியல. அதான் ரெண்டாவது நம்ப முடியலன்னு சொன்னேன்.
சாரதி, புரியும்படியா சொல்லுங்க.
அதான் ஜனனி, முதல்ல ரசிச்சேன்ன, அது முடியும். அதுக்கு கண்ணும், மனசும் இருந்தா போதும்.
ஆனால், ரெண்டாவதா சொன்னியே, யோசிச்சேன்னு! அது எப்படின்னுதான்...
ஹேய்... என்று பொய்க்கோபம் காட்டி, பின் வாய்விட்டு சிரித்தாள். பின் சொன்னாள், எனக்கு, உங்கள நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு சாரதி.
எதுக்காக?
உங்களைப் போலவே என்னையும் நினைக்கிறீங்களே. இந்தப் பெரிய மனசு யாருக்கு வரும்?
ஓ... நான் அம்பேல் என்று தன் கைகளைத் தூக்கி சரணடைந்தான். இருவருமே மனம் விட்டுச் சிரித்தார்கள்.
புரிதல் பரஸ்பரமாகும்போது, முடிவு பரவசம்தானே.



30

அடுத்த நாள் பொட்டானிகல் கார்டன் போனார்கள். அங்கு பூக்களை ரசித்துக் கொண்டும், அரட¢டை அடித்துக் கொண்டும் நடந்தார்கள். திடீரென்று ஒரு பிரைவேட் டி.வி. சானலிலிருந்து வீடியோ கேமராவுடன் இருவர் வந்து சில தம்பதிகளை சில கேள்விகள் கேட்டு ரெக்கார்ட் பண்ணினார்கள். அப்பொழுது எல்லோரும் வற்புறுத்தவும், ஜனனியும், சாரதியும் டி.வி.க்காரர்கள் கேள்விக்குத் தயாரானார்கள்.
டி.வி. நிருபர், சாரதியிடமும், ஜனனியிடமும் மாற்றி, மாற்றி சில கேள்விகள் கேட்டார்.
நிருபர் - சார் ஊட்டியில் எல்லா இடங்களுமே அழகுதான். ஆனால், அதுல, உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச இடம் எது? ஏன்?
சாரதி -: தொட்டபெட்டா. எதுலயுமே எனக்கு உயர்வான இடம் ரொம்பப் பிடிக்கும்.
நிருபர் : ஃபைன் சார், உங்களுக்கு மேடம்?
ஜனனி : இந்த கார்டன்தான். ரொம்ப அழகாயிருக்கு, அதோட நீங்க எங்களை இந்த இடத்துலதான் ரெக்கார்ட் பண்ணத உங்களவில கொண்டு போகப் போறீங்க. ஸோ, இது இந்த இடம் இனிமே ஸ்வீட் மெமரி எங்களுக்கு.
நிருபர் : சூப்பர் மேடம். சார், ஊட்டின்னு நினைச்சவுடனே உங்களுக்கு நினைவுக்கு வர்ற சினிமா எது?
சாரதி : ஊட்டி வரை உறவு.
நிருபர் : சார், இந்த டைட்டிலோட தொடர்புபடுத்தி உங்க மனைவியைப் பற்றி சொல்ல முடியுமா?
சாரதி : ஓ, ஷ்யூர், உயிர் போன பிறகும் உறவு.
நிருபர் : வாவ். எங்கியோ போயிட்டீங்க சார். மேடம் உங்களுக்கு ஊட்டின்னவுடனே நினைவுக்கு வரும் சினிமா எது?
ஜனனி : ராஜா சின்ன ரோஜா.
நிருபர் : வெரிகுட் மேடம். நீங்க இந்த டைட்டிலோட உங்க ஹஸ்பண்டை தொடர்புபடுத்தி உங்க ஒப்பீனியனை சொல்ல முடியுமா?
ஜனனி : வித் ப்ளஷர். என் ராஜா முள்ளில்லா ரோஜா.
ஹேய்... என்று கூட்டமே கைதட்டி ஆர்ப்பரித்தது.
நிருபர் : சார், உங்களுக்கு பிடித்த மிகச் சிறிய தமிழ் வார்த்தை ஒண்ணு சொல்லுங்க.
சாரதி : நாம்
நிருபர் : கலக்கிட்டீங்க சார். மேடம் உங்களுக்குப் பிடித்த சிறிய தமிழ் வார்த்தை சொல்லுங்க.
ஜனனி : ஓம்.
நிருபர் : சூப்பர் மேடம். கங்கிராட்ஸ் சார், கங்கிராட¢ஸ் மேடம்.
உங்களைச் சிறந்த ஜாலி ஜோடின்னு செலக்ட் பண்றோம்¢ என்று சொல்லி பரிசளித்தார்கள்.
அம்மா, அப்பா பரிசு வாங்கியது ஸ்ரீக்கு ஒரே சந்தோஷம்.
அன்று நைட் ட்ரெயினில் சென்னை புறப்பட்டார்கள். ட்ரெயினிலும் ஒரே அரட்டை, கலாட்டாதான். காலையில் சென்னை வந்தார்கள்.
அந்த வாரம் முழுவதும் அந்த சந்தோஷ அலைகள் அனைவரின் மனத்திலும் அடித்துக்கொண்டே இருந்தது. பெரும்பாலான சென்னைவாசிகள் இயந்திர வாழ்க்கையில் உழன்றுகொண்டிருந்தபோது ஜனனியின் குடும்பத்தில் மூன்று பேரும் காலைத் தென்றல், சூரியோதயம், பறவைகளின் சத்தம், அலைகடல், வானத்து நட்சத்திரங்கள், நல்ல தமிழிசை, தரமான பட்டிமன்றங்கள், நகைச்சுவை நாடகங்கள், சிறந்த சொற்பொழிவுகள், புத்தகக் கண்காட்சிகள் என்று தேடித் தேடி ரசித்தார்கள். ஸ்ரீக்கு நல்ல விஷயங்களில் ரசனை வந்துவிட்டதால், குப்பையான விஷயங்கள் அவன் கவனத்தை ஈர்க்கவேயில்லை.
ஸ்ரீ பத்தாம் வகுப்பு வருவதற்குமுன் ஹிந்தியில் 4 தேர்வுகள் முடித்துவிட்டான். டென்னிஸில் சாம்பியன் ஆனான். நிறைய புக்ஸ் படித்தான். எது செய்தாலும் ஒழுங்காக, முழுமையாகச் செய்தான். பத்தாம் வகுப்பில் படிப்பு அவனுக்கு தவமானது. தவம் செய்தால் வரம் உறுதிதானே. ஆம், ஸ்ரீ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டும், ஸ்¢டேட் தேர்டும் வந்தான். எந்த பந்தாவும் பண்ணிக் கொள்ளாமல், வெற்றியை இயல்பாக ஏற்றுக்கொண்டான். வெற்றி பெறுவதைவிட, அதைத் தக்க வைத்துக் கொள்வது கஷ்டம் என்று அவனுக்குப் புரிந்தது.
அந்த விடுமுறையில் சாரதி தன் குடும்பத்தோடு திருப்பதி போனான். ஸ்ரீ அந்த திருப்பதி பயணத்தை நிறைய என்ஜாய் பண்ணினான். பாபநாசம், சந்தனத் தலைகள், லட்டு, உண்டியல் காசுகள், பெரிய மலைக் குன்றுகள், உயர்ந்த மரங்கள் எல்லாவற்றையுமே உற்சாகமாக என்ஜாய் பண்ணினான¢. 
ஒரு வழியாக 10 மணி நேரங்களுக்குப் பிறகு அவர்களுக்குப் பெருமாள் தரிசனம் கிடைத்தது. ஸ்ரீ பெருமாளைப் பார்த்தவுடன் புதுவித அனுபவம் பெற்றான். மனதும், உடம்பும் ஏதோ செய்தது. சொல்லத் தெரியவில்லை. கும்பிடக் கூடத் தோன்றவில்லை. சொல்லத் தெரியாத பரவசம். பெருமாளை நேராகப் பார்ப்பது போல் இருந்தது. சென்னை வந்து 2 நாள் ஆன பிறகுகூட அவன் சந்தோஷமாக ஃபீல் பண்ணினான்.
ஆனால் ஒரு விஷயம் அவனுக்குப் பிடிக்காமல் மனசு நெருடலாகவே இருந்தது. அவன் சைகையில் சாரதியிடமும், ஜனனியிடமும் கேட்டான், என்னதான் கடவுளா இருந்தாலும் 10 மணி நேரம் நிற்பதெல்லாம் ரொம்ப அதிகம் இல்லையா?
ஓகே ஸ்ரீ, உன் கேள்வி உனக்கு சரின்னு பட்டா, நீ பெருமாளையே சின்ஸியரா கேளு. அவர் யார் மூலமாவது உனக்கு பதில் சொல்வார்.
ஸ்ரீ சாரதியை ஆச்சரியமாகப் பார்த்தான்.
சீரியஸாத்தான் சொல்றேன் ஸ்ரீ.

ஸ்ரீயும் சீரியஸாக பெருமாளைக் கேட்டான்.
உனக்காக நான் 10 மணி நேரம் நிக்கணுமா? இது உனக்கே நியாயமா தோணுதா?
பெருமாள் அப்போதைக்கு ஒன்றும் சொல்லவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனனி, ஸ்ரீ, சாரதி மூவருமே ஜனனியின் பாட்டி வீட்டுக்குப் போனார்கள்.
என்ன ஸ்ரீ, திருப்பதி ட்ரிப் எப்படியிருந்தது?
ஸ்ரீயின் முகமே அவன் சந்தேகத்தைக் காட்டியது.
என்ன ஸ்ரீ ஏன் அப்படிப் பார்க்கறே?
அப்பொழுது ஜனனி பாட்டியிடம் சொன்னாள், அத ஏன் பாட்டி கேட்கறீங்க? 10 மணி நேரத்துக்கும் மேல வெயிட் பண்ணோம் தரிசனத்துக்கு. அது ஸ்ரீக்குப் பிடிக்கல.
பாட்டி ஸ்ரீயைக் கேட்டாள், ஏன் ஸ்ரீ, இப்ப நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்றியா? என்ன? என்பதுபோல் பார்த்தான் ஸ்ரீ.
நீ, திருப்பதியில பெருமாளோட சிலையைப் பாத்தியா? பெருமாளையே பாத்தியா?
கண்கள் பளிச்சிட ஸ்ரீ ஜாடை காட்டினான்.
‘’சாட்சாத் பெருமாளையே பார்த்தேன்’’
ஆ... அப்படீன்னா சரி. அருளைக் கொடுக்கற பெருமாள்  வருஷக்கணக்கா நின்னுக்கிட்டிருக்கார். அருளை வாங்கப் போற நீ 10 மணி நேரம் நிற்கக் கூடாதா?
சட்டென்று ஸ்ரீயின் கண்கள் பளபளத்தது. பெருமாளே பதில் சொன்னதாக நினைத்தான்.
சாரதி பாட¢டியைப் பாராட்டினான், பாட்டி நீங்க பேசறது எப்பவும் எளிமையாவும், ஆழமாவும் இருக்கு. அரிதான விஷயங்களைக் கூட அநாயசமா சொல்வீங்க நீங்க. பாட்டி சங்கோஜத்துடன் சிரித்தாள்.
ஸ்ரீயோட மனசுக்குள் பெருமாள் அழகாக உட்கார்ந்து கொண்டார்.
அன்புக்கு அகப்படுபவர்தானே ஆண்டவன்!



31

ஸ்ரீ பதினொன்றாம் வகுப்பு சேரவேண்டும். அந்த வயதுக்கே உரிய எல்லா மாற்றங்களும் அவனிடம் தெரிந்தன. குறும்புகளும், கேலி கிண்டலும் அவன் செய்கைகளில் தெரிந்தன. பதினொன்றாம் வகுப்பில் முதல் நாள் போய் உட்கார்ந்தான். அவன் ஸ்டேட் தேர்ட் வாங்கியதால் நிறைய பேருக்கு இவனைத் தெரிந்திருந்தது. ஸ்ரீ சந்தோஷமாக உணர்ந்தான்.
அன்றைய மதிய உணவுக்குமுன் வழக்கம்போல் கண் மூடி தியானித்தான். கண் திறந்தபோது, அவனுக்கு எதிரே அவனைப் பார்த்¢து புன்னகைத்தபடி 2 பெண்களும், 2 பையன்களும் நின்று கொண்டிருந்தார்கள். இவன் ஒன்றும் புரியாமல் எழுந்தான். அப்பொழுது ஒரு பெண் சொன்னாள்,
ஹாய் ஸ்ரீ, நான் இந்துமதி என்று கை நீட்டினாள். அவனும் தோழமையுடன் கைகுலுக்கினான். அப்படியே சபிதா, ஹரீஷ், விஜய் மூவரும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பிறகு ஹரிஷ் சொன்னான், ஸ்ரீ, நாங்க நாலுபேரும் ஒரே ஸ்கூல்ல பத்தாம்வகுப்பு வரை படிச்சோம். நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ். உன்னைப் பற்றி நியூஸ் பேப்பரில் படிச்சோம். ஸ்ரீ, நீயும் எங்களோட ஃப¢ரெண்டா இருந்தா சந்தோஷப்படுவோம்.
புன்னகையுடன் ஸ்ரீ தலையாட்டினான்.
விஜய் சொன்னான், இன்று முதல் நால்வர் ஐவரானோம்.
எல்லோரும் சிரித்தார்கள். விஜய் ஸ்ரீயிடம் மொபைல் நம்பர் கேட்டான், ஸ்ரீ இல்லை என்று சைகையில் சொன்னான். ஆச்சரியப்பட்டார்கள் ஃப்ரெண்ட்ஸ்.
பின்பு லேண்ட்லைன் நம்பரைக் கொடுத்தான். அப்பொழுது விஜய் ஸ்ரீயைப் பார்த்துக் கேட்டான்.
ஏன் ஸ்ரீ மொபைல் வச்சுக்கல, மெஸேஜ் ஃப்ரீதானே?
மெஸேஜ் ஃப்ரீதான¢, ஆனால் டைம் ஃப்ரீ இல்லையே என்று ஸ்ரீ சைகையால் காட்டினான்.
நான்கு பேரும் திகைத்து நின்றனர். சபிதா சொன்னாள்,
க்ரேட¢ ஸ்ரீ, நீ எதுல தனிச்சு நிக்கறேன்னு புரியுது. நீ இப்பவாவது எங்க ஃப¢ரெணட்£ கிடைச்சிருக்கியே. வீ ஆர் ஹேப்பி.
அன்று வீட்டுக்கு போனபிறகு, ஸ்ரீயைப் பற்றி நாலு ஃப¢ரெண்ட்ஸ§ம் அவர்கள் வீட்டில் சொன்னார்கள். ஸ்ரீயும் வீட்டில் தன் நாலு புது ஃப¢ரெண¢ட்ஸ் பற்றிச் சொன்னான். எல்லா பெற்றோர்களும் சந்தோஷப்பட்டார்கள்.
அடுத்தநாள் ஸ்ரீ தன் க்ளாஸ் ரூமுக்கு முன் இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது ஹரீஷ§ம், விஜயும் வந்தார்கள்.
ஹாய் ஸ்ரீ,
ஹாய் என்று கையசைத்தான்.
அப்பொழுது இந்துவும், சபிதாவும் வந்தார்கள். அவர்களைப் பார்த்த விஜய் சொன்னான்,
இந்த இடி இந்துவை சாஃப்ட் சபிதா எப்படிதான் சமாளிக்கிறாளோ?
ஹ, ஹா...ஹா...
இந்து கேட்டாள்,
என்ன, ஒரே சிரிப்பு சத்தம்?
அதில்ல இந்து, உன் பேரை வச்சு, ஸ்ரீ உன்னைப் பத்தி தப்பா புரிஞ்சுக்கிட்டான். அதான், நானும் ஹரீஷ§ம் சிரிச்சுக்கிட்டிருந்தோம்¢.
என்னன்னு நினைச்சான்?
உன் பேர்ல மதி இருக்குல்ல? ஸோ, நீ அறிவா இருப்பேன்னு நினைச்சிட்டானாம். ஐயோ, ஐயோ என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தான். ஹரீஷ¨ம் சிரிப்பில் சேர்ந்து விட்டான்.
அவர்கள் குறும்பை ரசித்து ஸ்ரீயும் சிரித்தான்.
இந்து சொன்னாள்,
வேணாம் விஜய், இதோட நிறுத்திடு, இல்லன்னா?
ஹேய், மிரட்டறியா? உண்மையைச் சொன்னா, மிரட்டலா? காலம் கெட்டுப் போச்சுடா
ஹேய் விஜய், உன்னோட மொழிப் புலமையெல்லாம் நானும் விலாவாரியா சொல்ல வேண்டியிருக்கும்.
டக்கென்று கப்சிப்பானான் விஜய்.
ஹேய்...னு எல்லாரும் கத்தினார்கள். ஏனென்றால் இந்துவும், விஜயும் மாறி மாறி பொய்யான சம்பவங்களை உண்மைபோல் ஜோடித்து சொல்லி சிரிக்க வைப்பார்கள்.
சரி விடும்மா, நமக்குள்ள என்ன இந்து?
அதான், நானும் சொல்றேன். நமக்குள்ள ஒண்ணும் இல்ல. ஸ்ரீ, நாங்க பத்தாம் வகுப்பு படிச்சப்ப, இந்த ஆங்கில மேதை விஜய் க்ளாஸ§க்கு லேட்டா வந்தாரு.
அப்ப, இங்கிலீஷ் சார் கேட்டாரு,
ஆர் யு நாட் வெல்னு அதுக்கு இந்த லூஸ§ என்ன சொன்னான் தெரியுமா?
மீதி 2 பேரும் சிரிக்க, விஜய் அசடு வழிந்தான். ஸ்ரீ ஆர்வமாக கவனித்தான்.
எஸ் சார், ஐ யாம் நாட்வெல், ஐ யாம் பாய்ன்னான். சார், ஐயோன்னு தலையில அடிச்சிட்டார். அப்புறமா சார் டேக் யுவர் சீட்ன்னார்.
உடனே, இந்த மேதாவி தன் பையை கீழே போட்டுட்டு, சேரை தூக்கிக்கிட்டான். மொத்த கிளாஸ§ம் சிரிச்சது. அப்பக்கூட இவன் புரிஞ்சுக்கல. சேரைப் பிடிச்சுக்கிட்டே நின்னான்.
ஸ்ரீ நினைத்து நினைத்து சிரித்தான்.
இரு ஸ்ரீ இனிமேதான் க்ளைமேக்ஸ். கடைசியா சார் இவன் செஞ்ச லூஸ்தனத்தையெல்லாம் பார்த்து, ‘ஐ ஃபீல் பேட் அபௌட் யூ’ன்னார்.
அதுக்கு இவன், ‘ஸோ ஆம் ஐ’ ன்னான். சார் அப்படியே நொந்து நூடுல்ஸ் ஆயிட்டார். ஸ்ரீ கண்ணில் நீர் வருமளவுக்கு சிரித்தான்.

ஹரீஷ் இந்துவைக் கேட்டான், ‘’என்ன இந்து, அவன் சும்மா உன்னை விளையாட்டுக்கு ஓட்டினா, நீ என்னமோ பழிவாங்கும் படலம் மாதிரி ஆரம்பிச்சிட்ட?
இந்து கேட்டாள், ‘’ஏய், நீ என்ன அவனுக்கு சப்போர்ட்டா? இவன் பேசிக்கிட்டே இருப்பான், நான் வேடிக்கை பார்ப்பனா?
ஆமாம்மா, ஏன்னா நீ நல்ல பொண்ணாச்சே, இப்ப நாம சாத்துக்குடியை பிழிஞ்சா என்ன வரும்?
ம்... சாத்துக்குடி ஜூஸ்.
சரி, தக்காளியைப் பிழிஞ்சா....
ஐயோ, விடமாட்டியே...
சொல்லும்மா.
தக்காளி ஜூஸ்.
பாத்தியா, நம்மை என்னதான் நசுக்கி பிழிஞ்சாலும் நமக்குள்ள இருக்கறதுதான் வெளியில வரும். இப்ப அவன் உன்னை மட்டம் தட்டினான்னா, நீ பதிலுக்கு தட்டக் கூடாது. உனக்குள்ள இருக்கற பெருந்தன்மையால மன்னிச்சிடணும்.
சபிதா கேட்டாள்,
அது எப்படி முடியும்? மனுஷன்னா பதிலுக்கு பதில் தரணும்னு தானே தோணும்?
அவசியம் இல்லை. பார் காந்தியடிகளும், ஏசுவும் அவங்கள கொன்னவங்களைக் கூட மன்னிக்கச் சொன்னாங்க. ஸ்ரீ அதிசயமாகப் பார்த்தான்.
சபிதா கேட்டாள், ஹரீஷ், உனக்கெப்படிடா இதெல்லாம் தெரியுது?
படிச்சோம்ல என்று தன் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் ஹரீஷ்.
பெல் அடித்தது. அனைவரும் கிளாஸ் ரூமிற்குச் சென்றார்கள்.
ஸ்ரீ நினைத்தான்.

நண்பர்களும் இறைவன் கொடுக்கும் வரங்களே.

32

ஐந்து பேரும் உயிர் நண்பர்கள் ஆனார்கள். ஜாலியாக தெரிந்தாலும் எல்லோருமே பொறுப்பானார்கள். மெடிக்கல் சேரவேண்டும் என்பது அனைவருடைய இலக்கு. நன்றாக டீம் வொர்க் பண்ணினார்கள்.
அப்பொழுது ஒருநாள், விஜய், ஃபிஸிக்ஸில் ஒரு கான்ஸெப்ட் புரியாமலே அடுத்ததுக்கு தாவினான். அப்பொழுது ஹரீஷ் சொன்னான்.
விஜய், எந்த சந்தேகமா இருந்தாலும் அப்பப்பவே புரிஞ்சுக்கணும். ஏன்னா, நேற்றைய தீப்பொறி, நாளைய காட்டுத் தீயாகி விடும்.
விஜய் அசந்து போய்க் கேட்டான்.
எப்படிடா?
படிப்போம்ல, படிச்சத காத்துல பறக்க விட மாட்டோம்ல, மனசுல பதிய வச்சிடுவோம்ல.
ஸ்ரீ, ஹரீஷுக்கு கை கொடுத்தான்.
இப்படியே ஐந்து பேரும் நிறைய படித்தார்கள். ஷேர் பண்ணிக் கொண்டார்கள். இந்துமதி நிஜமாகவே பெயருக்குப் பொருத்தமானவள். துறுதுறுவென்று இருப்பாள். சபிதா நிறைகுடம். ஹரீஷ் க்ரேட். விஜய் இன்டலிஜெண்ட¢. ஆனாலும் விளையாட்டுத்தனம் அதிகம். ஸ்ரீ எல்லோருக்கும் ரோல் மாடல்.
பிள்ளைகளால் பெற்றோர்களும் குடும்ப நண்பர்களானார்கள். ஸ்கூலில் எக்ஸிபிஷன் நடந்தது. அதில் இந்த 5 பேரும் சேர்ந்து செய்த மாடல்ஸை எல்லோரும் பாராட்டினார்கள். இந்த டீம் முதல் பரிசு வாங்கினார்கள். ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல்ஸ், க்விஸ் என்று அனைத்து போட்டிகளிலும் கலக்கினார்கள். 5 ஸ்டார் க்ரூப் என்று பெயரே வந்துவிட்டது.
அந்த ஆண்டு இறுதியில் பள்ளியில் டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். ட்ரெயினில் ஏறியவுடன் ஸ்டூட¢ண்ட்ஸ் அரட்டை, ஓட்டுதல், கிண்டல், பாட்டு என்று கலகலக்க ஆரம்பித்து விட்டார்கள். டிரெயின் நகரத் தொடங்கியவுடன் விஜய் ஆரம்பித்தான்,
சபிதா நீ ஒண்ணும் பயந்துடாதே, மரமெல்லாம் வேகமா நகருதே, அப்படின்னு?
சபிதா சிரித்தாள். அவன் கிண்டலை ரசித்தாள்.
இந்தும்மா...
ஹேய் வேண்டாம். உத படுவ.
உன் தமிழறிவை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.  இந்து தமிழில் கொஞ்சம் வீக், அதனால அவள் ஃப்ரெஞ்ச் எடுத்துப் படிக்கிறாள். இந்து, விஜய்யிடம் சொன்னாள், விட்டுடு, நிஜமா அடிவிழும்.
இந்து, உன் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சி உண்மையை உறங்க விடமாட்டேன். உரத்தக் குரலில் உலகத்திற்கு உரைக்கத்தான் போகிறேன்.
ஹரீஷ் சொன்னான்,
அடடா, சிங்கம் கர்ஜிக்க ஆரம்பிச்சிடுச்சே, சீக்கிரம் நிறுத்தாதே.
ஆம் நண்பா என்று விஜய், இந்துவைப் பார்த்துப் பேசினான்.
இந்து, உனக்கு ஆறாம் வகுப்பில் தமிழெடுத்த அம்மாவோட பேர் ஞாபகம் இருக்கா? தமிழழகின்ற அழகான பேரை தமிலலகின்னு சொல்லி அழவச்ச? அது மட்டுமா?
ஏழாம் வகுப்பில் ஆண்டுவிழாவில் பாட¢டுப் போட¢டியில் 
கண்ணுக்கு மையலகு
கவிதைக்கு பொய்யலகு
என்று புதுப்பாட்டு பாடி, அந்த விழாவுக்கு வந்த வைரமுத்து சாரை நோகடித்தாய்.
எட்டாம் வகுப்பில் ஒருமுறை ஆட்டோக்காரனிடம் பணம் அதிகம் கேட்டார் என்பதற்காக சென்னை செந்தமிழில் ஏசி அவரைப் பணம் வாங்காமலேயே தலைதெறிக்க ஓடவைத்தாயே.
அதுகூட பரவாயில்லை. பத்தாவதில் நீ தமிழில் பாஸ் பண்ணணும்னு எங்களுக்கெல்லாம் பழநில மொட்ட போடறேன்னு வேண்டிக்கிட¢டியே. அதோட இல்ல, பழநி போய் பலநி முருகா, பலநி முருகான்னு முருகனையே அழவச்சியே, மறந்து போச்சாம்மா உனக்கு? என்று தமிழில் வசனம் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தான். எல்லாரும் வயிறு வலிக்க சிரித்தார்கள்.
அப்பொழுது இந¢து எழுந்து நின்று, 
மைடியர் ஃப்ரெண்ட்ஸ். யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் என்றாள். எல்லோரும் சுவாரஸ்யமாக கவனித்தார்கள்.
என் ஃப்ரெண்ட் விஜய் சொன்னதெல்லாம் உண்மை. ஆனால், நானோ தமிழ்லதான் வீக். ஆனால், அவரோட சாதனைகளெல்லாம் நான் இப்போ சொல்றேன்.
நாங்க எட்டாவது படிக்கும்போது, ஒரு மீட்டிங்ல ஆடியன்ஸ் பேசிக்கிட்டிருந்தாங்க. அப்போ, எங்க ஹெச்.எம். வந்து யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்னாங்க. என் ஃப¢ரெண்ட் விஜய் த க்ரேட் என்ன பண்ணான் தெரியுமா?
எழுந்து நின்று ஷ¨ காலால சத்தம் போட்டு அட்டென்ஷன்ல நின்னான். மொத்த ஹாலும் கொல்லுன்னு சிரிச்சுது. மானமே போச்சு.
என்னை தமிழ்ல வீக்ன்னாரே அருமை நண்பர். ஒருமுறை எங்க தமிழம்மா தலைக்கு ஒரு ஐ.டி. கார்டு கொடுன்னு சொல்லி இவர்கிட்ட கார்ட்ஸ் கொடுத்தாங்க. இந்த புத்திசாலி என்ன பண்ணுச்சு தெரியுமா? போய் எல்லார் தலைலயும் கார்டை வச்சுது.
அப்பறம் ஒருநாள் கட்டுரை நோட்ல கடிதம் எழுதும்போது தமிழய்யா, நலம் நலமறிய ஆவல். நிற்கன்னு டிக்டேட் பண்ணினார். உடனே இவன் நின்னான்.
எல்லோரும் சிரித்தார்கள்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. எங்க சோஷியல் சார், ஒருநாள் சொன்னாரு, நான் எதையும் யார்கிட்டயும் இலவசமா வாங்கமாட்டேன்னு. அவர் எங்களோடெல்லாம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பார். அதனால, ஒருநாள் அவரோட ஷாப்பிங் போயி ரெண்டு வாங்கினா, ஒரு ஷர்ட் இலவசம் செக்ஷன்ல போயி, அவரோட 500 ரூபாய்ல ரெண்டு ஷர்ட் எடுத்து அவர்கிட்ட கொடுத்துட்டு, இலவசமா எடுத்த ஷர்ட¢டை, நான் வச்சுக்கறேன் சார், உங்களுக்குத்தான் இலவசமா வாங்க பிடிக்காதேன்னு சொல்லியிருக்கான்...
எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
இதையெல்லாம் தாண்டி, ஒருநாள் மேத்ஸ் சார் கேட்டார், 5 மாம்பழம் 2 பேருக்கு சமமா பிரிச்சு கொடுத்துட்டா, மீதி என்ன இருக்கும்?னு
அதுக்கு உடனே எழுந்து இந்த லூஸ§ என்ன பதில் சொன்னான் தெரியுமா?
5 மாங்கொட்டை இருக்கும்னான்.
சார் அழுதே போயிட்டார்.
எல்லோரும் நினைத்து நினைத்து சிரித்தார்கள்.
பிறகு பாட்டு, டான்ஸ், விளையா¢ட்டு என்று என்ஜாய் பண்ணினார்கள். பின்பு பெங்களூர், மைசூர் என்று ஜாலியாகச் சுற்றினார்கள்.
இப்படியாக 5 நாட்கள் பறந்துவிட்டன. ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தார்கள். திரும்பவும் இந்த நாட்கள் கிடைக்காதே என்கிற தவிப்பில், அளவுக்கு அதிகமாக கைதட்டி, கத்தி ஆர்ப்பரித்து களைத்துப் போய்விட்டார்கள்.
பின்பு அந்த மே மாதம் முழுவதும் ஐந்து ஃப¢ரெண்ட்ஸ§ம் பிரியவேயில்லை. மிகவும் ஜாலியாக இருந்தார்கள். மே முடிந்தது. ஜூன் வந்தது. பள்ளி திறந்தது. பனிரெண்டாம் வகுப்பு தொடங்கியது.
ஐந்து பேருமே தவத்திற்குத் தயாரானார்கள். 
தவம் தண்டனையல்ல, தரு!


33

சாரதி ஐந்து ஃப்ரெண்ட்ஸையும் விடுமுறையின்போதே அழைத்து, எப்படி படித்தால் முழுமையாகப் புரிந்து கொளள முடியும். அதன் மூலமாக வெற்றி அடையலாம் என்று சில டிப்ஸ் கொடுத்தான்.
நீங்களெல்லாம் வகுப்பில் பாடம் நடத்தும்போது ஏதேனும் சந்தேகம் வந்தால், உடனுக்குடன¢ கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். வகுப்பில் கேள்வி கேட்டால், புரிதல் ஆழமாகும். வகுப்பும் சுவாரஸ்யமாக இருக்கும்.
அடுத்ததா முக்கியமானதை, கலர் பேனாவால் அடிக¢கோடிடணும். உதாரணங்களை ஓரத்தில் குறிச்சுக்கணும். அது படிக்கும் போது நினைவு படுத்திக்கறதுக்கு எளிதாக இருக்கும்.
அன்றன்று நடந்த பாடங்களை அன்னன்னைக்கே ஒருமுறை மேலோட்டமாகவாவது படிச்சுடணும். இல்லைன்னா சிலதை மறந்துடுவீங்க.
படிக்கும்போது முன்பே தெரிந்த விஷயங்களை, புதிய பாடங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்தா நல்லா புரிஞ்சுக்க உதவியா இருக்கும்.
நீங்க படிச்சத மத்தவங்களுக்கு டீச் பண்ணுங்க. அதனால, அறிவு விரிவாகும்.
லாஸ்ட், பட் நாட் த லீஸ்ட். வெறுமனே மார்க் வாங்கணும்னு கட்டாயத்திற்காக படிக்காம, புரிஞ்சு சந்தோஷமா அனுபவிச்சு படிக்கணும்.
படிப்பு தவிர, காலை அரை மணி நேரம் யோகா. மாலை அரை மணி நேரம் விளையாட்டு. ரெண்டுமே வெற்றியை முழுமையா அடையறதுக்கு சிறந்த வழிகள்.
பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கிய இரண்டு நாட்களிலேயே பெற்றோர், ஆசிரியர், மாணவர் சேர்ந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மீட்டிங்கில் முதலில் ப¢ரின்ஸிபால் பேசினார்.
டியர் பேரன்ட்ஸ், டீச்சர்ஸ், அன்ட் ஸ்டூடண்ட்ஸ் நம் எல்லோருடைய இலக்குமே ஒன்றுதான். ஸ்டூடண்ட்ஸ் வெற்றி பெற வேண்டும். இதில் பெற்றோர்கள் ஏதேனும் கருத்துகள் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.
ஜனனி எழுந்து பேசினாள்.
எல்லோருக்கும் வணக்கம். நான் ஸ்ரீயோட அம்மா. முதலில் டீச்சர்ஸ்கிட்ட ஒரு வேண்டுகோள். டீச்சர்ஸ் ஸ்டூடண்ட்ஸிடம் சிரித்த முகத்தோடு பேசுங்கள். சராசரி மாணவனுக்கும் புரிந்த பிறகு அடுத்த பாடத்திற்குப் போங்கள். வெறுமனே புத்தகத்தைப் பார்த்து கமா, முற்றுப்புள்ளி மாறாமல் க்ளாஸ் வொர்க் நோட்டில் காப்பியடிப்பது, பின் அதையே ஹோம் ஒர்க் நோட்டில் காப்பியடிப்பது என்கிற வேலையை தயவு செய்து கொடுக்காதீர்கள். பார்த்து எழுதுவதிலேயே அவர்களுடைய பாதி நேரமும், சக்தியும் வீணாகி களைத்துப் போய் விடுகிறார்கள். படிக்கவே நேரமில்லாமல் போய்விடுகிறது இதை மனதில் வைத்துக் கொண்டு ஹோம் டெஸ்ட் வையுங்கள். படித்துவிட்டு பார்க்காமல் எழுதட்டும். தயவு செய்து இதை கன்ஸிடர் செய்யுங்கள்.
அடுத்ததாக, நான் பேரண்ட்ஸிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன். நாம, பிள்ளைகளோடு நட்புணர்வோடு பழகணும். வீட்டில் நெகட்டிவ் வேவ்ஸ் பரவுகிற மாதிரி அபசகுணமான பேச்சோ, காட¢டுகத்தலான இசையோ வேண்டாம். பிள்ளைகளுக்காக பெரியவர்களும டி.வி.யை ஒரு வருஷத்திற்கு தியாகம் பண்ணுவது நல்லது.
அடுத்தது ஸ்டூடண்ட்ஸ். உங்களோட வெற்றிதான் எங்களுடைய வெற்றி என்பதைவிட, நம்ம நாட¢டோட வெற்றி. உங்கள் பொறுப்பை உணர்ந்து படிச்சீங்கன்னா, எங்கள் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குத் தருகிறோம். படிப்பு ஒரு தவம். வேறு எதிலும் கவனத்தைச் சிதற விடாமல் சந்தோஷமா படிங்க. சந்தோஷமா செய்கிற எந்த செயலுமே வெற்றி பெறும்.
தேங்ஸ் என்று சொல்லி உட்கார்ந்தாள். எல்லோரும் கைதட்டினார்கள்.
அடுத்ததாக ஹரீஷோட அப்பா எழுந்தார்.
வணக்கம். எல்லோர் சார்பாகவும் மிஸஸ் ஜனனி பேசிவிட்டார்கள். தேங்ஸ் என்றார். நான் மேனேஜ்மெண்ட்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பல மாணவர்களுடைய அம்மா வேலைக்குச் செல்வதால் பிள்ளைக்கு விதவிதமான சத்துள்ள சாப்பாட்டை சமைத்துக் கொடுக்க முடியவில்லை. நிறைய வொர்க் பண்ணுவதால், மாணவர்களுக்கு நிறைய எனர்ஜி தேவைப்படுகிறது. அதனால் உங்களுடைய மெஸ்ஸில் மதிய உணவும், மாலை டிஃபன், பூஸ்டும் கொடுத்தீர்கள் என்றால் அதற்கும் சேர்த்து பணம் செலுத்தி விடுவோம். அது நீங்கள் எங்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும் என்றார்.
பெரும்பாலான பெற்றோர்கள் அதை ஆமோதித்தார்கள். ஸ்கூல் கரெஸ்பாண்டன்ட் உடனடியாக சிலபேரோடு மொபைலில் பேசிவிட்டு, அடுத்த வாரத்திலிருந்து மேனேஜ்மெண்ட் அதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அனைவரும் ஹரீஷின் அப்பாவையும், மேனேஜ்மெண்டையும் பாராட்டினார்கள். பிறகு சில விஷயங்கள் பேசிய பிறகு, மீட்டிங் முடிந்தது. எல்லோரும் வெளியில் வந்தவுடன் விஜய், ஜனனியிடம் கேட்டான்,
ஆண்ட்டி, கலக்கிட்டீங்க போங்க. ஆமாம், அந்தப் பேச்ச தயாரிக்க எவ்வளவு நேரம் ஆச்சு? மனப்பாடம் செய்ய எவ்வளவு நேரம் ஆச்சு?
இந்து சொன்னாள்,
ஹேய் விஜய், பெரியவங்களையும் விடமாட்டியா?
ஒழுங்கா, பேசாம இரு, இல்ல, பெரியவங்க இருக்காங்களேன்னு பார்க்க மாட¢டேன்.
உடனே விஜய் சொன்னான், ‘ஆஹா... ஜான்சிராணி, உறைவாளை வெளியில எடுத்துட¢டியா?
ஆமாம், நீ வாயை மூடு, நான் வாளை உள்ளே வச்சடறேன்.
நீ வாளை வேணா வைக்கலாம், உன் வாலை என்ன பண்ணுவ? அது உன்கூட பொறந்ததாச்சே?
யாருக்கு? எனக்கு வாலா? வசமா வந்து நீயே வாயைக் கொடுத்து மாட்டிக்குவடா?
என்ன? என்ன மாட்டிக்கிட்டேன் இப்ப?
ஹரீஷ், சபிதா ஞாபகம் இருக்கா? தமிழய்யா ராமாயணம் நடத்தினப்போ விஜய் கவனிக்காம உட்கார்ந்திருந்ததைப் பார்த்துட்டு, ராமர்க்கு கணையாழி கொடுத்த கண்மணியேன்னு இவனைக் கூப்பிட்டாரு. எல்லாரும் சிரிச்சாங்க. அதைக் கூட புரிஞ்சுக்காம விஜய் எல்லார்கிட்டயும் போய் பெருமையா என்னை தமிழய்யா கண்மணின்னு செல்லமா கூப்பிட்டார்னு சொன்னானே, ஞாபகம் இருக்கா?

பெரியவர்களும் சிரிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஹரீஷ் சரி சமாதானம் என்று பச்சை ரிப்பனை காட்டினான். உடனே, விட்டால் போதும் என்று விஜயும் சமாதானம் என்று செல்லி கையை நீட்டினான். இந்துவும் சிரித்துக்கொண்டே கைநீட்டினாள்.
கலாட்டாவும், சமாதானமும் நட்புக்குள் சகஜம்தானே!

34

+2 என்பதால் நாட்கள் நொடிகளாயின. எல்லாரும் பிஸியாக இருந்தார்கள். நன்றாகப் படித்தார்கள். மேனேஜ்மெண்ட், டீச்சர்கள், பேரண்ட்ஸ் உதவியுடன் மாணவர்களும் ஸ்மார்ட்டாக படித்ததனால், பப்ளிக் எக்ஸாமை தைரியமாக, சந்தோஷமாக எழுதினார்கள். இறுதி நாள் தேர்வு முடிந்தது. ஹாலுக்கு வெளியில் வந்தவுடன் எல்லோரும் ஹேய் என்று சந்தோஷமாக கத்தினார்கள்.
ஸ்கூலை விட்டு வெளியில் வந்தபோது எல்லோரும் ஃபீல் பண்ணினார்கள். ஆனால், இந்த ஐந்து பேரும் மெடிக்கல்தான் சேரவேண்டும் என்று முடிவு செய்திருந்ததால், ஜாலியாகவே இருந்தார்கள். நிறைய நல்ல புக்ஸ் படித்தார்கள். நிறைய டிஸ்கஸ் செய்தார்கள். ஷேர் பண்ணிக் கொண்டார்கள்.
பல நேரங்களில் ஸ்ரீயின் வீட்டில் எல்லா பிள்ளைகளும் அரட்டை அடிக்கும்போது ஸ்ரீயும் மிகவும் என்ஜாய் பண்ணுவான். ஆனால், ஜனனி அவ்வப்பொழுது ஸ்ரீயால் பேசமுடியவில்லையே என்று நினைத்துக் கலங்கி விடுவாள். சாரதிதான் அவளைத் தேற்றுவான்.
லீவில் ஒருநாள் காலையிலேயே 5 ஃப்ரெண்ட்ஸ§ம் ஊர் சுற்றக் கிளம்பி விட்டார்கள். காலையில் கோவிலுக்குப் போனார்கள். பிறகு தீம் பார்க் போகலாம் என்று யோசித்தார்கள். ஆனால், கடைசியில் ஸ்பென்சர் பிளாஸாவிற்கு போனார்கள். இந்துவும், விஜயும் சில பொருள்கள் வாங்கினார்கள். அப்பொழுது இந்து கேட்டாள்,
சபிதா, நீ ஒண்ணும் வாங்கலையா?
எனக்குத் தேவையில்லை.
அதுக்காக, எதுவுமே வாங்கமாட்டியா?
வேண்டாம், தேவையில்லாதத வாங்கினோம்னா, தேவையானதை விற்க வேண்டிவரும்.
ஹரிஷ் கேட்டான்,
ஹேய் சபிதா, நீ ஏன் என்னமோ மாதிரி இருக்க?
நான் டோடலா அப்செட் ஆகியிக்கேன். அதை எப்படி உங்களுக்கெல்லாம் சொல்றதுன்னு புரியாம தவிச்சிக்கிட்டு இருக்கேன். நான்கு பேரும் சடாரென அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். ஏனென்றால், சபிதா விளையாட மாட்டாள் என்று அவர்களுக்குத் தெரியும். விஜய் கேட்டான்,
என்ன சபிதா சொல்லு.
சொன்னா தாங்கிப்பீங்களா?
ஹரிஷ் சொன்னான்,
உண்மைன்னா, சுட்டாலும் கசந்தாலும் தாங்கித்தானே ஆகணும். சொல்லு சஸ்பென்ஸ் வைக்காதே.
அவள் ஸ்ரீயைப் பார்த்தாள்.
ஸ்ரீ எப்பொழுதும் போல் கண்களில் ஒளியுடனும், நம்பிக்கையுடனும் தெரிந்தான்.
சபிதா சொன்னாள்,
முதல்ல நாம லஞ்ச் சாப்பிடுவோம். அப்பறம் பீச்சுக்குப் போய் மரத்தடியில உட்கார்வோம், ப்ளீஸ்.
ஏதோ சீரியஸான விஷயம் என்று தோன்றியதால், எல்லோரும் அமைதியாகச் சாப்பிட்டார்கள். பின்பு பஸ் பிடிச்சு பீச்சுக்குப் போய் மரத்தடியில் உட்கார்ந்தார்கள். வழக்கமான கலகலப்பு இல்லை. மனதில் வெறுமை, திகில், சந்தேகம் என்று மாறி மாறி வந்தது நான்கு பேருக்கும்.
சொல்லு சபிதா, ஹரீஷ் கேட்டான்.
சபிதா எழுந்து வந்து ஸ்ரீயின் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தாள். மற்ற மூவரும் ஒன்றும் புரியாமல் மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சபிதா மெதுவாக, மென்மையாக, தெளிவாக பேச ஆரம்பித்தாள்.
ஸ்ரீ
ஸ்ரீயும் புதிதாகப் பார்த்தான்.
ஸ்ரீ, நீன்னா எங்க நாலு பேருக்குமே உயிர். சொல்லும்பொழுதே அவள் குரல் உடைந்து லேசாக கண்கலங்கினாள். பின் தொடர்ந்தாள்.
நாங்க சின்ன வயதிலிருந்தே ஃப்ரெண்ட்ஸ். நீ ரெண்டு வருஷமாதான். ஆனா, நட்பு, பாசம், நேசம் எல்லாம் எத்தனை வருஷமாங்கறது முக்கியமில்ல. எப்படி பழகறோம்கிறதுதான் முக்கியம். உனக்கு ஒரு கஷ்டம்னா, அதை எங்க யாராலயும் தாங்க முடியாது.
நெகிழ்ச்சியில் ஸ்ரீயின் கை லேசாக நடுங்கியது. சபிதா, தன் கையை ஸ்ரீயின் கைமேல் வைத்தாள்.
ஸ்ரீ நான் நேற்று நைட் கேள்விப்பட்டேன்.
என்ன? என்பதுபோல் எல்லோரும் பார்த்தார்கள்.
சபிதா உடைந்து அழ ஆரம்பித்தாள்.
எல்லோருக்குமே ஷாக்காக இருந்தது. இந்து சபிதாவை உலுக்கிக் கேட்டாள், சொல்லிட்டு அழு சபிதா, என்னாச்சு? ப்ளீஸ்.
சபிதா சில நிமிடங்களுக்குப் பிறகு சொன்னாள், ‘வாய் பேச முடியாதவங்களுக்கு மெடிக்கல் சீட் கொடுக்க மாட்டாங்களாம்‘ என்று சொல்லி மீண்டும் அழுதாள்.
ஸ்ரீக்கு உலகமே வேகமாகச் சுற்றியது.
மற்ற மூவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார்கள்.
ஸ்ரீக்கு தன் கண் முன்னால் தன் எதிர்காலம் இருட்டானது மாதிரி தோன்றியது.
பேச முடியலைங்கறது என் தப்பா? இதுக்கு நான் எந்த வகையில பொறுப்பேற்க முடியும்? தாத்தா ஏன் இதுபற்றி இதுவரை எதுவுமே சொல்லலை?
நினைக்கும்பொழுதே அவன் கண்களில் ஒளி. உடனே, சபிதாவின் மொபைலிலிருந்து தன் தாத்தாவை அழைத்தான். சபிதாவை விபரம் கேட்கச் சொன்னான்.
சபிதா திணறியபடியே தன் சந்தேகத்தைக் கேட்டாள். பின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.
தாத்தா பேசினார்,
சபிதா, எல்லோரும் ஒண்ணாதான் இருக்கீங்களா?
எஸ் தாத்தா.
சரி, நல்லதாப் போச்சு. ஸ்ரீ, நீயும் கேட்டுக்கோ. உனக்கு இந்த மாதம் 30ம் தேதி டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருக்கேன். சாரதிகிட்ட பேசிட்டேன். இந்தமுறை இதை அம்மாகிட்ட சொல்ல வேணாம்னு நானும் உன் அப்பாவும் ஃபீல் பண்றோம். ஏற்கெனவே ரெண்டு தடவை உன் அம்மா ரொம்ப அப்ஸெட் ஆயிட்டாங்க. அதனால, நாம பார்ப்போம். உனக்காக பிரார்த்தனை பண்ணிக்கத்தான் நாலு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே. இந்த முறை நம்பிக்கையா முயற்சி பண்ணி பார்ப்போம். நீ பயப்படாத. கடவுள் கைவிட மாட்டார்.
நான்கு பேரும் சொன்னார்கள்,
தேங்ஸ் தாத்தா, நாங்க பிரார்த்தனை பண்ணிக்கறோம். 
குட் என்று தாத்தா மொபைலை வைத்தார்.
5 ஸ்டார்களின் கண்களில் புது நம்பிக்கை ஒளி.
கனவு மெய்ப்பட வேண்டும்!

35

5 ஸ்டார் ஃப்ரெண்ட்ஸிடம் உற்சாகம் சந்தோஷம். அரட்டை எதுவும் காணவில்லை. பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், அவர்கள் யாருடனும் ஷேர் பண்ணிக் கொள்ளவில்லை.
மூன்று வாரங்களில் ரிசல்ட் வந்தது. ஸ்ரீ மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தான். 4 ஃப்ரெண்ட்ஸ§ம் மேஜர் சப்ஜெக்ட்ஸில் சென்டம் வாங்கி விட்டார்கள். ஸ்ரீக்காக ஸ்கூலில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். சோதனையாக அதற்கு முன்தினம் தான் ஸ்ரீக்கு சர்ஜரிக்கு டாக்டர் நாள் குறிததிருந்தார். எவ்வளவு சொல்லியும் தாத்தா டாக்டர் ப்ரசாத் ஸ்ரீயை தான் மட்டும் பார்த்துக் கொள்வதாகக் கூறி சாரதியையும், 4 நண்பர்களையும் அனுப்பி விட்டார்.
சாரதி, ஜனனியிடம் ஸ்ரீ தாத்தாவுடன் மெடிக்கல் கோர்ஸ§க்கான செமினாருக்குப் போயிருப்பதாகச் சொல்லி விட்டான். ஜனனியோ, பிள்ளை ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்த சந்தோஷத்தில் எதையும் கண்டுகொள்ளவில்லை.
சர்ஜரி முடிந்தது. முடிவு தெரியவில்லை. ஸ்ரீ வீட்டுக்கு வரவில்லை. ஜனனி பரபரத்தாள்.
என்ன சாரதி, அங்கிள் எப்ப ஸ்ரீயைக் கூட்டிட்டு வருவார்?
நேரா விழாவிற்கு
புது ட்ரெஸ்லாம்?
அப்பா வாங்கித் தந்திடுவார்.
ஓகே.
மாலை விழா 6 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. நான்கு நண்பர்களும் இஷ்ட தெய்வங்களை வேண்டியபடியே டென்ஷனோடு காணப்பட்டார்கள். தாத்தாவின் மொபைல் வேறு ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு  இருந்தது டென்ஷனை அதிகப்படுத்தியது.
ஜனனி அவர்களிடம் சொன்னாள்,
ஹேய் ஸ்டார்ஸ், கவலைப்படாதீங்க. உங்க உயிர் நண்பன் தோ வந்துடுவான். ஆம், 6 மணிக்கு ஸ்டேஜின் திரையை விலக்கிக் கொண்டு ஸ்ரீ வந்தான். அவன் முகத்தில் ஒரு ஒளி. புன்சிரிப்புடன் கைகளைக் கூப்பினான். அரங்கமே ஆர்ப்பரித்தது. அவனுடைய சீட்டில் உட்கார்ந்தான்.
வழக்கம்போல் விழாவில் கடவுள் வாழ்த்து, குத்துவிளக்கு ஏற்றுதல், விருந்தினர் பாராட்டுரை, பள்ளி முதல்வர் பாராட்டு என்று எல்லாம் சிறப்பாக முடிந்தது.
ஒரு பெரிய கோப்பையும் ரூ.50,000க்கான காசோலையும் ஸ்ரீக்கு பரிசுகளாக வழங்கப்பட்டன. வாங்கிக் கொண்ட ஸ்ரீ பரிசுகளைத் தூக்கி ஆடியன்ஸ§க்கு காண்பித்தான்.
அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
திடீரென்று ஸ்ரீ மைக்கைப் பிடித்து ‘அம்மா’ என்று அழைத்தான். அரங்கம் அமைதியானது.
ஸ்ரீ மீண்டும் அம்மா...... என்றான்.
தொடர்ந்து நிசப்தம் நிறைந்தது.
ஜனனி ஆனந்தத்தில் அழுதாள். ஸ்ரீ, ஸ்ரீ என்று தன்னை மறந்து கத்தினாள். ஸ்ரீ தொடர்ந்தான்.
எல்லோருக்கும் வணக்கம். எனக்கு, நேற்று இரவு ஒரு சர்ஜரி நடந்தது. இன்று மதியம் என்னால் பேச முடியும்னு டாக்டர் சொன்னார். ஆனால், நான் பேசல. ஏன்னா, என் குரலின் முதல் அழைப்பை என் அம்மா கேட்கணும்னு ஆசைப்பட்டேன். இந்த விழாவில் உங்க எல்லார்கிட்டயும் சில விஷயங்களைப் பகிர்ந்துக்கணும்னு தோணுது.
நான் நிஜமாகவே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். எனக்கு வாய் பேச முடியல. ஆனால், நான் இந்த உலகில் கொட்டிக் கிடக்கும் அனைத்து அழகான விஷயங்களையும் ரசித்தேன். என்னைச் சுற்றி நிறைய நல்ல விஷயங்களை நான் கவனித்தேன்.
நான் சின்ன பையனாக இருந்தபொழுது பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, இறைவா, இறைவா...’’ என்ற பாடலைக் கேட்டேன். அந்நிய ஆட்சியில், சாதி, மத பிரிவினையில், சதி, குழந்தை விவாஹம் நடந்த காலங்களில், பாரதி கோடி இன்பத்தைப் பார்த்திருக்கிறார். பராசக்தியிடம் காணி நிலம் கேட்டார் பாரதி. அவரிடம் நான் உலகை ரசிக்கும் மனம் கேட்டேன். கொடுத்தார் பாரதி. எப்படி? யார் மூலமாக?
என் அம்மா, கூப்பிடும்போது எவ்வளவு இனிக்கிறது? என் அம்மா ஜனனி, எனக்காகவே அவர்களின் ஜனனம் என்று அடிக்கடி தோன்றும் எனக்கு.
குழந்தையாயிருந்தபொழுது பிரஹலாதன், துருவன், மார்க்கண்டேயன் என்று குழந்தை நட்சத்திரங்களை கதைகளின் மூலம் அறிமுகம் செய்தார்கள்.
காலை சூரியோதயம், பௌர்ணமி நிலா, காலைத் தென்றல், கடலின் அலை ஓசை, புல்லின் நுனியில் பனித்துளி, மலரின் இதழில் பட்டாம் பூச்சி, கூவும் குயிலின் இசை, பறவைக் கூட்டம், நட்சத்திரங்கள், வானவில், வானரக் கூட்டம் என்று இயற்கையை ரசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள் என் அம்மா.

பின் இசை,
‘’குழலினிது, யாழினிது என்பதம் மக்கள்
மழலை சொல் கேளாதவர்’’
ஆம், என் பெற்றோர் என் மழலைச் சொல்லை நிஜமாகவே கேளாதவர்கள். அதனால் கருவி இசையில் பயிற்சி கொடுத்தார்கள். அது மட்டுமில்லாமல் தமிழிசையிலும் கருவியிசையிலும் கரைந்து போகக் கற்றுக் கொடுத்தார்கள்.
விளையாட்டு, ஓவியம், நீச்சல், நடனம் என்று அனைத்திலும் பயிற்சி அளித்து பரிசுகளை வாங்க வைத்தார்கள். எல்லாத்துக்கும் மேல எனக்கு மொழிப்புலமை வேணும்னு நினைச்சு தமிழ், ஹ¤ந்தி, ஆங்கிலம் என்று பயிற்சி தந்தார்கள் என் அம்மா. அவர்களின் நம்பிக்கை எனக்கு வேடிக்கையாக இருந்தது அன்று. பெரும் வியப்பாக இருக்கிறது இன்று.
அம்மா! அம்மா! உங்கள் ஸ்ரீ பேசுகிறேன். இனி வாழ்நாளெல்லாம் நான் பார்க்கிற, படிக்கிற, ரசிக்கிற விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.
அம்மா, ஐ லவ் யூ என்றான் ஸ்ரீ. ஜனனி சந்தோஷத்தில் அழுதாள்.
அடுத்ததாக, என் நண்பர்கள். இவர்கள் இறைவன் கொடுத்த வரங்கள். என்னை சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொண்டவர்கள். என்னை தங்களுள் ஒருவனாக குறையில்லாத நண்பனாக நடத்தினார்கள். என்னை எப்பொழுதும் சிரிக்க வைத்தவர்கள். எனக்காக மட்டுமே அழுதவர்களும் கூட. அவர்களுடைய ஆழமான பிரார்த்தனைகள்தான் இன்றைய என்னுடைய வார்த்தைகள்.
ஹரீஷ், விஜய், சபிதா, இந்து என்று அழைத்து அவர்களைப் பார்த்தான். சிறு பிள்ளைகள் அல்லவா? கட்டுப்படுத்த முடியாமல் மேடையேறி வந்து ஸ்ரீயைக் கட்டிக் கொண்டார்கள். அக்காட்சி அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.
பின்பு ஸ்ரீ தொடர்ந்த£ன். என் பள்ளி முதல்வர், எல்லா ஆசிரியர், ஆசிரியைகள், தாத்தா, உறவினர்கள், நண்பர்களின் பெற்றோர்கள், லட்சுமி அம்மா, சுந்தரம் அங்கிள், அம்மாவின் தாத்தா, பாட¢டி, எல்லாத்துக்கும் மேல எனக்கு சர்ஜரி மூலம் குரல் தந்த லண்டன் டாக்டர் ஜேம்ஸ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
எல்லோரும் கைதட்டினார்கள்.
ஸ்ரீ மீண்டும் தொடங்கினான். மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்வாங்க. இந்த நான்குமாக இருந்தவர் என் அப்பா. என் அப்பா சாரதி. அந்த பார்த்தனுக்கு சாரதி, ஸ்ரீஹரி. இந்த மகன் ஸ்ரீக்கு சாரதி என் அப்பா சாரதி. அவரைப் பற்றி நான் ஒண்ணுமே சொல்லலையேன்னு எல்லாரும் நினைக்கலாம். என்ன சொல்றது நான்?
கடவுள் மனிதனுக்கு தந்தது பகவத்கீதை
மனிதன் கடவுளுக்குத் தந்தது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குத் தந்தது திருக்குறள்
இந்த மூன்றையும் எனக்குத் தந்தவர் என் அப்பா. அவரைப் பற்றிச் சொல்ல என் தமிழறிவுக்கு சக்தியில்லை. சொல்லும் வார்த்தைகளைவிட சொல்லாத வார்த்தைகளுக்கு சக்தி அதிகம் என்று சொல்லி ‘அப்பா’ என்றான்.
சாரதி எழுந்து நின்று எப்பொழுதும்போல் புன்னகைத்தான்.
ஸ்ரீ தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னான், அப்பா, உங்கள் நிறைந்த புன்சிரிப்புதான் எப்பொழுதும் என் வெற்றிக்கான உந்துசக்தி.
சாரதி புன்னகைத்து தன் வலது கையைத் தூக்கி கட்டை விரலை உயர்த்தினான்.
ஸ்ரீயும் சிரித்துக் கொண்டே தன் வலதுகைக் கட்டை விரலை உயர்த்தினான்.
ஊமையாயிருந்த ஸ்ரீயின் அமுதம் போன்ற தமிழைக் கேட்டு மக்கள் அனைவரும் பேச்சிழந்து நின்றனர். பின்பு எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
சில நொடிகளோ.... பல நிமிடங்களோ....
கரவொலி கேட்டுக்கொண்டேயிருந்தது.

Comments

Popular posts from this blog

இனிதினும் இனிது…